Advertisment

இந்திய தேசியம்! தமிழ் தேசியம்!  புதிய கட்சி மதுரையில் உதயம்!

newparty

தேர்தல் நெருங்கினாலே புதுப்புது கட்சி கள் உருவெடுப்பது வழக்கமான ஒன்றுதான்.. அந்த வகையில், "நமது மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அரசியல் கட்சியை, ஜெகநாத் மிஸ்ரா தலை மையிலான தேசிய செட்டியார்கள் பேரவையினர் மதுரையில் தொடங்கியுள்ளனர். மஞ்சள், பச்சை, சிவப்பு வண்ணக்கொடிகள் நகரெங்கும் பறக்க, ஆயிரக்கணக்கானோர் சூழ இக்கட்சியின் பேரணி நடந்தது. பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் கள் வர, பேரணி மண்டபத்தை அடையவும்,  மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, தொண்டர்கள

தேர்தல் நெருங்கினாலே புதுப்புது கட்சி கள் உருவெடுப்பது வழக்கமான ஒன்றுதான்.. அந்த வகையில், "நமது மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற அரசியல் கட்சியை, ஜெகநாத் மிஸ்ரா தலை மையிலான தேசிய செட்டியார்கள் பேரவையினர் மதுரையில் தொடங்கியுள்ளனர். மஞ்சள், பச்சை, சிவப்பு வண்ணக்கொடிகள் நகரெங்கும் பறக்க, ஆயிரக்கணக்கானோர் சூழ இக்கட்சியின் பேரணி நடந்தது. பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் கள் வர, பேரணி மண்டபத்தை அடையவும்,  மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, தொண்டர்களின் ஆரவாரத் துடன் மேடையேறி கட்சிக்கொடியை அறிமுகம் செய்தார். புதிய இயக்கமாகக் களம்கண்டிருக்கும் கட்சியின் தலைவரிடம் கேள்விகளை முன்வைத்தோம். 

Advertisment

சமுதாய இயக்கமாக இருந்த நீங்கள் ஏன் திடீரென அரசியல் கட்சி தொடங்கு கிறீர்கள்? 

Advertisment

தேசிய செட்டியார் பேரவை அமைப்பை கடந்த 16 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் நடத்திவந்தோம். இருந்தும் எங்கள் மக்களை அதிகாரத்தில் அமரவைக்க முடியவில்லை. எனவே, அதிகாரமிக்க பொறுப்பு களை அடைவதற்காக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளோம். 

உங்கள் அரசியல் கட்சியின் கொள்கை, நோக்கம் என்ன?

எங்கள் சமுதாயத்திற்கு மட்டுமல் லாது, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் போராடு வோம். நேதாஜியின் வழியில் வந்த முத்துராமலிங்கத்தேவர் தேசியத்தை வலியுறுத்தினார். மேலும், சமூக நீதிக் காக போராடிய தந்தை பெரியார், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் போன்ற தலைவர்களை ஏற்று, சமூக நீதி, தமிழ் மொழி, தமிழர்களின் உரிமையோடு தேசியத்தின் ஒற்றுமையையும் வலியுறுத்தும் விதமாக, "இந்திய தேசியமும் தமிழ் தேசியமும் இரு கண்கள்' என்பதை கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க போராடுவோம்.

உங்களுடைய புதிய கட்சி களத்தில் இறங்கி செயல்படுமா? 

நாங்கள், பின்தங்கிய மாணவர்களின் கல்வி யைத் தொடர உதவிவருகிறோம். சுயதொழில் பயிற்சியளிக்கிறோம். நதிநீர் இணைப்பு, ஈழப் பிரச்சனை, தமிழர்களின் உரிமைக்காக களத்திலிறங்கி போராடியிருக்கிறோம். 2000 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட கண்ணகி கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப் படாமல் இருக்கிறது. அதற்கென கன்னியாகுமரி முதல் சென்னை வரை கண்ணகி நிதி யாத்திரையை நடத்த இருக்கிறோம்.

விஜய் அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

அவர் சினிமா பாப்புலாரிட்டியை மட்டும் நம்பி அரசியல் கட்சியைத் தொடங்கிருக்கிறார். அது சமீபத்தில் நடந்த கரூர் சம்பவத்தில் வெளிப்பட்டது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். 

உங்கள் பெயரில் அதென்ன வடநாட்டு மிஸ்ரா?

எங்கப்பா ஒரு காங்கிரஸ்காரர். அதனால் வந்த பெயர் மிஸ்ரா. மற்றபடி நான் பச்சைத் தமிழன்!                                            

nkn221025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe