Advertisment

இந்தியாவை INDIAதான் காப்பாற்றும்! திருச்சியில் முதல்வர் சூளுரை!

ss

மிழ்நாடு முழுவதும் உள்ள 5 மண்டலங்களிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர் களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறைக்கூட்டத்தை நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதன்படி திருச்சியில், ராம்ஜி நகர் பகுதியில் கடந்த ஜூலை 26ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சியில், 15 மாவட்டங்களின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், வாக்குச் சாவடி தி.மு.க. பொறுப்பாளர் கள் என சுமார் 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். சென்னை யிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லி

மிழ்நாடு முழுவதும் உள்ள 5 மண்டலங்களிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர் களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறைக்கூட்டத்தை நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதன்படி திருச்சியில், ராம்ஜி நகர் பகுதியில் கடந்த ஜூலை 26ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சியில், 15 மாவட்டங்களின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், வாக்குச் சாவடி தி.மு.க. பொறுப்பாளர் கள் என சுமார் 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். சென்னை யிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், கார்கில் போர் நினைவு தினம் என்பதால், திருச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மேஜர் சரவணன் நினைவிடத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

ss

வாக்குச்சாவடி பொறுப் பாளர்கள் பயிற்சி முகாமின் முதல் நிகழ்ச்சியாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பின ரும், கழக வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ பேசினார். அடுத்தடுத்து பல்வேறு தலைப்புகளில், அமைச்சர்கள் சிவசங்கர், டி.ஆர்.பி. ராஜா, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, ஆ.ராசா எம்.பி., அப்துல்லா எம்.பி., மாணவரணி ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் பேசினர். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் சரியாக மாலை 4 மணிக்கு விழா மேடைக்கு வரவும், அவருக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வெள்ளி கேடயம், வெள்ளி வாளை வழங்கியபின் வரவேற்புரையாற்றினார்.

Advertisment

இறுதியாக சிறப்புரை யாற்றிய ஸ்டாலின், "1952ல் திருச்சியில் நடந்த மாநாட்டில் தான் நான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம். நேரு என்றால் மாநாடு - மாநாடு என்றால் அது நேரு என்று அடிக்கடி நான் கூறுவேன். மிகக் குறுகிய காலத்தில் இந்த வாக்குச்சாவடி கூட்டத்தை நடத்தியிருக்கும் கே.என்.நேரு மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைத் தால் கண்டிப்பாக இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. தமிழகத்தில் சட்டப்பேரவை, அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள். மாநிலங்களில் பல்வேறு மொழி, பல்வேறு கலாச்சாரத்தில் உள்ள அனைவருக்கும் எதிரான கட்சி தான் பா.ஜ.க. 26 கட்சிகள் ஒன்று இணைந்தோம். இந்தியா வைக் காப்பாற்றப்போவது இந்த INDIA கூட்டணி தான். பழனிச் சாமியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பிரதமர் பேசுகிறார் - இவர்களை இந்த தேர்தலில் நாம் முழுமை யாகத் தோற்கடிக்க வேண்டும். உங்களை நம்பித்தான் நான் இந்தப் பொறுப்பை கொடுத் திருக்கிறேன்'' என்றார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, மிளகுபாறை நகர்ப் புற நலவாழ்வு மையம், திருச்சிராப்பள்ளி அரசு பொது மருத்துவமனை, அண்ணல் காந்தி அரசு பொதுமருத்துவமனை ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார். மறுநாள் 27ஆம் தேதி காலையில், வேளாண் சங்கமம் 2023, உழவர் களுக்கான 3 நாள் கண்காட்சி யினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

-துரை.மகேஷ்

nkn290723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe