தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வராது என அறிவித்த சில நாட்களிலேயே, "மத்திய தொகுப்பிலிருந்து தென்மாநிலங்களுக்கு வழங்கப்படும் 750 மெகாவாட் மின்சாரம் ஏப்ரல் 20-ஆம் தேதி தடைபட்டது. இதனால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனைப் போக்க மின் வாரியத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் தனியாரிட மிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது''’என ட்விட்டர் பதிவில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருக்கிறார். ஏன் இந்தத் தடுமாற்றம்?
2021 அக்டோபருக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை பவர் கட் பயத்தில் இந்திய மாநிலங்கள் தடுமாற ஆரம்பித்திருக்கின்றன.
இந்தியாவில் 135 அனல்மின் நிலையங்கள் இருக்கின்றன. தேசத்தின் மொத்த மின்னுற்பத்தியில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக அனல்மின் நிலையங்களிலிருந்தே உற்பத்தியாகின்றன. அதாவது இந்திய மின்னுற்பத்தி நிலக்கரியையே நம்பியிருக்கிறது.
கடந்த அக்டோபரில் இந்த 135 அனல்மின் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்நிலையங்கள் அதிகபட்சம் ஒரு வாரத்துக்குத் தேவையான நிலக்கரியையே கொண்டிருந்தன. அதனால் தேசமெங்கும் மின்வெட்டு ஏற்படுமோ என்ற பயமெழ, எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனக் குரலை எழுப்பின. இதையடுத்து மத்திய அரசு நிலக்கரி அமைச்சகம், மின்னுற்பத்தி அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்தை ஒன்றிணைத்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதையடுத்து ஒருவாறாக அந்த இக்கட்டு சமாளிக்கப்பட்டது.
நிலக்கரிக்கு அப்போது ஏன் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது?
கொரோனா பிரச்சினையால் தொழில் மற்றும் பொருளாதார முடக்கம் ஏற்பட்டிருந்த நிலை மாறி ஒவ்வொரு நாடும் உற்பத்தி நடவடிக்கையில் மும்முரம் காட்ட ஆரம்பித்தது. இதன் காரணமாக தொழிற்சாலைகளின் நிலக்கரி பயன்பாடு முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்க, மின்தேவையும் அதிகரித்தது. அதனால் நிலக்கரி தேவை உலக அளவில் உயர்ந்தது. நிலக்கரியின் தாறுமாறான விலையுயர்வால், நிலக்கரி இறக்குமதியில் சரிவு நேர்ந்தது.
இந்தியாவில் நிலக்கரி தோண்டியெடுக்கப்படும் சுரங்கப் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறான தொடர்மழை காரணமாக நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இப்போது அப்படியெதுவும் சூழல் இல்லை.
ஆனால், வெயில் கொளுத்தியெடுக்கிறது. இதனால் இந்தியாவெங்கும் பகலும் இரவும் ஏ.சி.க்கள், மின் விசிறிகளும் ஓடிக்கொண்டே இருக்கின் றன. அதனால் இயல்பாகவே மின் உபயோகம் உயர்ந்திருக்கிறது. பல மின்னுற்பத்தி நிலையங்கள் 2021, அக்டோபரில் நான்கு நாட்களுக்கான நிலக்கரி இருப்பையே கையிருப்பையே வைத்திருந்தன. தற்போது ஏழு நாட்கள் முதல் ஒன்பது நாட் களுக்கான கையிருப்பை வைத்திருக்கின்றன. தட்டுப்பாட்டுக்கான கார ணங்களுள் ஒன்றாக, நிலக்கரியைச் சுமந்து செல்லும் ரயில்வே ரேக்குகள் போது மானதாக இல் லையென்று சொல்லப் படுகிறது.
60 மில்லியன் டன் நிலக்கரி கோல் இந்தியா அமைப்பின் கையிருப்பில் உள் ளது. அதை மின்னுற்பத்தி நிலையங்களில் கொண்டுசேர்க்க கூடுதல் ரயில்வே ரேக்குகள் கைவசமில்லை. இந்தியாவில் தோண்டியெடுக்கப்படும் நிலக்கரியால் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களில் 81 மின்னுற்பத்தி நிலையங்கள் போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லாமலே இயங்குவ தாக சொல்லப்படுகிறது.
2022 நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி நுகர்வு 8 சத விகிதம் உயர்ந்திருக்கிறது. இதை ஈடுகட்ட இந்தியாவில் அகழ்ந்தெடுக்கப்படும் நிலக்கரி உற்பத்தி அதி கரிக்கவேண்டும். அல்லது நிலக்கரி இறக்குமதி அதிகரிக் கப்பட வேண்டும். இரண்டும் நடக்கவில்லை என்பதும் மற்றொரு இக்கட்டே.
இதையடுத்து ஒன்றிய அரசின் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மின்னுற்பத்தி நிலையங்கள் லோக்கல் நிலக்கரியுடன் 10 சதவிகிதம் இறக்குமதி நிலக்கரியைக் கலந்து மின்னுற்பத்தி செய்ய பரிந்துரைத்துள்ளார். அதாவது நிலக்கரி இறக்குமதியை 10 சதவிகிதம் அதிகரிப்பதற்கான உத்தரவுதான் இது.
அதேசமயம் ரஷ்யா-உக்ரைன் போரால் நிலக்கரி இறக்குமதியும் சிக்கலான விஷயமாயிருக்கிறது. என்றபோதும் முடிந்தவரை மலிவான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளனைத் தையும் இந்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஏற்கெனவே நிலக்கரித் தட்டுப்பாட்டால் பஞ்சாப், அரியானாவில் மின்வெட்டுகள் தொடங்கிவிட்டன. பெரும்பகுதி மின் சாரத்துக்கு வெளிமாநிலங்களின் தயவையே நம்பியிருக்கும் கேரளா, நிலக்கரி தட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. தமிழகத் திலும் நகரங்களைத் தவிர்த்த சில பகுதிகளில் மின்வெட்டு புகார்கள் எழ ஆரம்பித்துள்ளன.
காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, “"எட்டு வருட வெறும் பேச்சு, இந்தியாவை வெறும் எட்டு நாள் நிலக்கரி கையிருப்பில் கொண்டுவந்து விட்டுள்ளது. வெறுப்பு என்னும் புல்டோசரை அணைத்துவிட்டு, சிறு அளவிலான தொழிற்சாலைகள் பாதிக் கப்படுவதைத் தடுக்கவும், மேலும் வேலையிழப்புகள் நேர்வதைத் தவிர்க்கவும் மின்னுற்பத்தி நிலையங்கள் மீது மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்''’என விமர்சித்துள்ளார்.
மின் தட்டுப்பாடு ஒன்றிய அரசின் முகத்தில் கரியைப் பூசினால், அது அரசின் முகத்தை மட்டும் அசிங்கமாக்கப்போவ தில்லை. ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிழைப்பிலும் கரி யைப் பூசிவிடும் என்பதால், என்ன முயற்சி யெடுத்தாவது இந்த இக்கட்டு தவிர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க் கிறார்கள் இந்தியாவின் நலன்விரும்பிகள்!