சீனாவின் செல்லப்பிள்ளையான இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியேற்றதும் விசிட் அடிக்கும் முதல் நாடு இந்தியா. இந்திய தலைநகரான டெல்லிக்கு வந்த கோத்தபயவை தமிழகத்தின் சார்பில் வைகோவின் எதிர்ப்புக் குரல் வரவேற்றது. "முதல் வெளிநாட்டுப் பயணம் சீனாவாக இருக்கும்' என கருதப்பட்ட நிலையில் இந்தியாவை அவர் தேர்ந்தெடுத்ததை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/srilankapresident.jpg)
"இந்தியாவை அவர் தேர்ந்தெடுத்ததற்கு இந்திய பிரதமர் மோடி காட்டிய அவசரம்தான் காரணம்' என்கிறார்கள் இலங்கையிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர். அதாவது, அதிபராக கோத்தபய தேர்ந்தெடுக்கப்பட்டதும் எப்போதும் இல்லாத அளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கிய மோடி அரசு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைத்தது. கோத்தபயவை சந்தித்த ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் வாழ்த்துக் கடிதத்தை ஒப்படைத்தார்.
அதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கோத்தபய விடம், "உங்களின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாக இருக்க வேண்டும்' என கோரிக்கை வைத்திருக்கிறார் ஜெய் சங்கர். ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்கும் வகையில், "அரசியல் சூழல்கள் இங்கு அமைதியானதும் அவ சியம் டெல்லி வருகிறேன்' என உறுதி தந்திருக் கிறார் கோத்தபய. அந்த உறுதியின்படிதான், 29-ந் தேதி டெல்லி விசிட். கோத்தபயவின் இந்திய வருகை குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலை வர்களிடம் பேசியபோது, ""இலங்கையின் அதிகார பீடத்திற்கு வருபவர்கள் முதல் வேலையாக இந்தியாவுக்கு செல்வார்கள். டெல்லிக்கு வர விரும் புவதை இலங்கைதான் தெரிவிக்கும். ஆனால், அதற்கு மாறாக இந்த முறை இலங்கை அதிபரை வலுக் கட்டாயமாக வரவழைக்கிறது இந்தியா.
முதல் பயணத்தில் தன்னுடன் அமைச்சர் பரிவாரங்களை அழைத்துச் செல்வதை தவிர்த்துள்ளார் கோத்தபய. அவருடன் நிதி மற்றும் வெளியுறவுத் துறைகளின் சில முக்கிய அதிகாரிகள் மட்டுமே செல்வது போல பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சீனாவின் நம்பிக்கைக்குரியவரான கோத்தபய, இந்தப் பயணத்தில் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத் திடமாட்டார்.
2015-ல் மகிந்தாவை தோற்கடித்து மைத்ரியை அதிபராக்கியதிலும் ரணிலை பிரதமராக கொண்டு வந்ததிலும் இந்தியாவின் பங்களிப்பு அதிகம். குறிப்பாக, ராஜபக்சேக்களுக்கு எதிராக இந்தியா செயல்பட்டது. அந்த வகையில் இந்தியா மீதான கோபம் ராஜபக்சேக்களுக்கு இன்னும் குறைய வில்லை. அதனால், இந்தியாவின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே கோத்த பயவின் ஒப்பந்த நடவடிக்கை முடிவு செய்யப்படும். அதிபராக கோத்தபயவும், பிரதமராக மகிந்த ராஜ பக்சேவும் அமர்ந்திருப்பதால் கடந்த காலங்களில் இலங்கை அதிபரையும் பிரதமரையும் இந்தியா வுக்கு வரவழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியது போல இப்போது நடக்காது. சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க வலியுறுத்தியும் இலங்கையில் முடங்கிக் கிடக்கும் இந்திய திட்டங்களை உயிர்ப்பிக்கவும் கோத்தபயவிடம் மென்மையாக இந்தியா கோரிக்கை வைக்கலாம்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.
இலங்கையில் சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, இந்தியாவின் திட்டங் களை நிறைவேற்ற மைத்ரி ஒத்துழைப்பார் என மோடி எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்தியா வுக்கு வழங்குவதாகச் சொல்லப்பட்ட துறைமுக திட்டங்கள் உள்ளிட்ட எதிலும் முன்னேற்றமில்லை. இதனால் ஏகத்துக்கும் ஏமாற்றமடைந்தது இந்தியா. இப்படிப்பட்ட சூழலில்தான் புதிய அதிபராக கோத்தபய உருவானதும் சீனா, பாகிஸ்தான், ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அழுத்தங்கள் அவரை சூழ்வதற்குள் ராஜபக்சேக்களிடம் நல்லுறவை மேம்படுத்த திட்டமிட்டே கோத்தபயவை டெல்லிக்கு அவசரம் அவசர மாக வரவழைத்துள்ளது மோடியின் மத்திய அரசு. இதற்கிடையே, "கோத்த பயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டிருந்தாலும் அமெரிக்காவில் கோத்தபயவிற்கு ஏகப்பட்ட சொத்துகள் இருக்கின்றன. அவற்றை மையப்படுத்தி அமெரிக்கா கொடுத்த அழுத்தம் இந்தியாவை நோக்கி அவரை செலுத்தியுள்ளது' என்கிறார்கள், போர்க்குற்றங் களுக்காக ராஜபக்சேக்கள் தண்டிக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பும் ஈழத்தமிழின செயற்பாட் டாளர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/srilankapresident2.jpg)
இந்திய விசிட் பரபரப்பிற்கிடையே தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவத்தை நிறுத்த கோத்தபய உத்தரவிட்டிருக்கும் விவகாரம் தமிழர்களிடம் அச்சத்தை உருவாக்கியதுடன் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து விசாரித்தபோது, ""கடந்த ஏப்ரலில் கிறிஸ்துவ தேவாலயத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து இலங்கையில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார் மைத்ரி. ஒவ்வொரு மாதமும் 22-ந் தேதி அந்த பிரகடனம் புதுப்பிக்கப்பட்டே வருகிறது. இந்த நிலையில், கோத்தபயவும் அதே நிலைப்பாட்டினை எடுத்த தோடு, அம்பாறை, திரிகோணமலை, வவுனியா, கண்டி, மாத்தளை, புத்தளம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, மன்னார், புதுளை, ஹம்பாந் தோட்டை, இரத்தினபுரி, காலி, நுவரேலியா உள் ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தமிழர் மாவட்டங்களில் ஆயுதம் ஏந்திய ராணுவத்தை நிறுத்தவும் ரோந்து வரவும் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் பாதுகாப்பு என்கிற பேரில் காவல்துறையினருடன் சேர்ந்து தங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபடலாம் என்கிற அச்சத்தில் இருக்கி றார்கள் ஈழத்தமிழர்கள். தமிழர் பெருநிலப்பரப்பில் பதட்டம் அதிகரித்தபடியே இருக்கிறது'' என்கின்றன கொழும்பிலிருந்து கிடைக் கும் தகவல்கள்.
-இரா.இளையசெல்வன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-11-29/srilankapresident-t.jpg)