Advertisment

இந்தியா கூத்து! அதுக்கும் வாய்ப்பிருக்காம்!

ss

அதுக்கும் வாய்ப்பிருக்காம்!

ss

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணியில், பா.ஜ.க. லம்ப்பாக 29 தொகுதிகளை அள்ளிக்கொண்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டி யிட்டு 18 தொகுதிகளில் வென்றிருந்தது சிவசேனா. எனவே அந்த 23 தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்றது. ஆனால் சிவசேனா இப்போது இரண்டு பிரிவாக இருப்பதைச் சொல்லி சமாதானப்படுத்தி, 13 தொகுதிகளையே ஷிண்டே சேனாவுக்கு ஒதுக்கியது. இதிலேயே 10 தொகுதிகள் போய்விட்டதால், கடந்த முறை வெற்றிபெற்றவர்கள் பலருக்கும் சீட் ஒதுக்கமுடியாத நிலை. கடந்த முறை ஜெயித்த ஹேமங்க் பாட்டிலுக்கு சீட் இல்லையென்று சொல்லி அவரது மனைவி ராஜஸ்ரீக்கு சீட் ஒதுக்கியது. சீட் கிடைக்காதவர்களின் எதிர்ப்பு, ஷிண்டே கேட்கும் தொகுதியை பா.ஜ.க. கேட்பது, சேனா அணியிலேயே ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு மற

அதுக்கும் வாய்ப்பிருக்காம்!

ss

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணியில், பா.ஜ.க. லம்ப்பாக 29 தொகுதிகளை அள்ளிக்கொண்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டி யிட்டு 18 தொகுதிகளில் வென்றிருந்தது சிவசேனா. எனவே அந்த 23 தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்றது. ஆனால் சிவசேனா இப்போது இரண்டு பிரிவாக இருப்பதைச் சொல்லி சமாதானப்படுத்தி, 13 தொகுதிகளையே ஷிண்டே சேனாவுக்கு ஒதுக்கியது. இதிலேயே 10 தொகுதிகள் போய்விட்டதால், கடந்த முறை வெற்றிபெற்றவர்கள் பலருக்கும் சீட் ஒதுக்கமுடியாத நிலை. கடந்த முறை ஜெயித்த ஹேமங்க் பாட்டிலுக்கு சீட் இல்லையென்று சொல்லி அவரது மனைவி ராஜஸ்ரீக்கு சீட் ஒதுக்கியது. சீட் கிடைக்காதவர்களின் எதிர்ப்பு, ஷிண்டே கேட்கும் தொகுதியை பா.ஜ.க. கேட்பது, சேனா அணியிலேயே ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு மற்றவர் அடம் என ஷிண்டே மண்டையைப் பிய்த்துக்கொள்ளாத குறையாக கட்சிக்காரர்களை சமாதானப்படுத்திக்கொண் டிருக்கிறார். எல்லா தொகுதிக்கும் வேட்பாளர் கள் முடிவானதும், சீட் கிடைக்காதவர்கள் தாய் சேனாவுக்கு திரும்பும் காட்சிகள் இருக்கலாம் என யூகிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Advertisment

நல்லா சப்போர்ட் பண்ணீங்க போங்க!

ss

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் காங்கிரஸும் கூட்டணியமைத்துப் போட்டியிடுகின்றன. இதில் புர்னியா தொகுதி ஆர்.ஜே.டி.க்கு ஒதுக்கப்பட்டதால் பப்பு யாதவ் எனச் சொல்லப்படும் ராஜேஷ் ரஞ்சனுக்கு காங்கிரஸ் சீட் தரவில்லை. பார்த்தார் ராஜேஷ், டூவீலரை எடுத்துக்கொண்டு போய் சுயேட்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துவிட்டார். வேட்புமனு தாக்கல்செய்த கையோடு, "நான் எப்போதும் காங்கிரஸ் ஆதரவாளன்தான். என் அரசியல் வாழ்க்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இத்தொகுதி மக்கள் எப்போதும் என்னை ஆதரித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலிலும் ஆதரிப்பார்கள். ஆனாலும் நான் ராகுல் பக்கம்தான். இந்தியா கூட்டணிதான்!'' என்று பேட்டியும் கொடுத்திருக்கிறார்.

Advertisment

எவ்வளவு டீப்பா போறாங்க!

ss

பொதுவாக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும்போது நிலம், பணம், தங்கம், வாகனங்கள் என சொத்துப் பட்டியல் வரும். காங்கிரஸின் திருவனந்தபுரம் வேட்பாளரான சசி தரூரின் சொத்துப் பட்டியலில் பிட்காயின் ஈ.டி.எஃபில் அவர் ரூ.5,11,314-ம், அமெரிக்க டிரெஷரி செக்யூரிட்டீஸில் ரூ.2 கோடி முதலீடு செய்த விவரமும் இடம்பெற்றிருக்கிறது. அதுபோல் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் அளவுக்கு பங்கு மார்க்கெட் பத்திரங்கள், மியூச்சுவல் மார்க்கெட்டில் முதலீடு செய்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் லாபகரமான பங்குகளாகக் கருதப்படும் அதானி, அம்பானி நிறுவனப் பங்குகள் அவரது போர்ட்போ-யோவில் இடம்பெறவில்லையாம்.

அதிர்ஷ்ட வாசல்!

ss

கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியும் அமலாக்கத் துறை வழக்கில் மகள் கைதானதும் பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகர் ராவை நிலைகுலைய வைத்திருக் கிறது. போதாக்குறைக்கு கட்சியின் மூத்த தலைவர்களான கே. கேசவ் ராவ், கடியம் ஸ்ரீஹரி போன்றோர் பாராளுமன்றத் தேர்தலை யொட்டி காங்கிரஸுக்குத் தாவியுள்ளனர். இதையடுத்து ஜோதிடர்களை ராவ் ஆலோ சிக்க, வாஸ்துக் குறைபாடுதான் இதற்கெல்லாம் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர். இதையடுத்து வாஸ்து நிபுணர் ஆலோசனைப்படி தனது வீட்டின் வடமேற்கே ஒரு வாசல் இருந்த நிலையில் வடகிழக்கிலும் ஒரு வாசலை அமைத்துள்ளார். இந்த வாசல் வழியாவது அதிர்ஷ்டம் நுழையுதானு பார்க்கலாம்!

உனக்கு மளிகை! எனக்கு ஓட்டு!

கர்நாடக மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதி காரி வெங்கடேஷ்குமார். கர்நாடகாவில் பிடிபடும் பொருட்கள் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், "வழக்கமாக வாக்காளர்களுக்கு பணம், அதைவிட்டால் உடைகள், குக்கர், மிக்ஸிகள்தான் வழங்குவார்கள். ஆனால் இந்த முறை பலசரக்குப் பொருட்கள் அடங்கிய பெட்டிகள்தான் ட்ரெண்ட் போல் தெரிகிறது. பல இடங்களில், பல்வேறு கொடவுன்களில் அரிசி, ராகி, மளிகைப் பொருட் கள், எண்ணெய், உப்பு, புளி அடங்கிய பெட்டிகளே அதிகமாகப் பிடிபட்டன. அவற்றில் பில்கள் எதுவும் இல்லை. இது வாக்காளர் களுக்கா… கட்சித் தொண்டர்களுக்கா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் முறையான பில்கள் இல்லாமல் பேக்கிங் செய்யப்பட்டு மொத்தமாகப் பிடிபடுவது குற்றம்தான். பிதார், கல்பர்கி, சிவமொக்கா, சிக்கமகளூரு வில் இவை அதிகமாகப் பிடிபட்டன''’என்கிறார்.

-நாடோடி

nkn100424
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe