கோலாரில் கோளாறு!
கர்நாடக மாநிலம் கோலார் எம்.பி. தொகுதியில் யாரை நிறுத்துவதென காங்கிரஸில் தகராறு நிலவுகிறது. காங்கிரஸின் ஒவ்வொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் எங்களுக்குத்தான் தொகுதி என அடித்துக்கொள்ளாத குறை. காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சரு மான கே.எச். முனியப்பா, "இந்தப் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் தொகுதியில் வெற்றி சாத்திய மில்லை'' என எச்சரித்திருக்கிறார். முனியப்பா வின் மரு மகன் சிக்க பெட்டண்ணா வும் இந்தத் தொகுதியைக் கேட்டிருக்கிறார். தொகுதியை பெட் டண்ணாவுக்குத் தரவில் லையென்றால், ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என மிரட்டுகிறார் கள். முனியப்பாவோ, "நான் சிபாரிசு செய்தவர்களில் ஒருவருக்கு சீட்டுக் கொடுத்தால், இத்தொகுதியில் காங்கிரஸின் வெற்றியை உறுதிசெய்வேன். 30 வருஷமாக எம்.பி.யாக இருக்கும் எனக்கு, வெற்றிபெறுவது எப்படியென்பது தெரியும். ஆனால் அதற்கு முன்பாக, இப்படி கோஷ்டி பிரிந்து அடித்துக்கொள்வதை நிறுத்த வேண்டும்''’என்றிருக்கிறார்.
மக்கர் பண்ணும்
மதச்சார்பற்ற ஜனதாதளம்!
இது கர்நாடக குக்கர் பிரச்சனை. பெங்க ளூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டி.கே. சுரேஷும், பா.ஜ.க. சார்பில் டாக்டர் சி.என். மஞ்சுநாத்தும் நிற்கிறார்கள். இரு தரப்பிலும் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித் துள்ள நிலையில், இத்தொகுதி மக்களுக்கு வாக்களிப்பதற்காக குக்கர் பரிசளிக்கப்பட்டுள்ள தாக புகாரெழுந்துள்ளது. பிரபல குக்கர் நிறு வனம் ஒன்றில் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை மேற்கொண்டிருப்பதுடன், கடந்த சில மாத குக்கர்களின் தயாரிப்பு விவ ரத்தையும், அவை அனுப்பப்பட்ட விவரங்களை யும் கேட்டுள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளமோ, 10 லட்சம் குக்கர்கள் வேட்பாளரின் புகைப்படத் துடன் தயாரிக்கப்பட்டு காங்கிரஸால் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதில் 4 லட்சம் குக்கர்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள தாகவும் குற்றம்சாட்டி மக்கர் பண்ணிவருகிறது. இதை யடுத்து ஐ.டி. சம்பந்தப்பட்ட குக்கர் கம்பெனியை ஆதாரங்களுக்காக நோண்டி நொங்கெடுத்துக்கொண்டி ருக்கிறது.
சொந்த வாயால் சூனியம்!
குஜராத்தின் ராஜ்கோட் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பர்சோட்டம் ரூபாலா சர்ச்சையொன்றில் சிக்கி யிருக்கிறார். தலித் சமூகத்தினரின் வாக்குகளைப் பெற, அவர்களைப் புகழ் கிறேனென்று, “"பிரிட்டிஷ், மொகலாயர் கால கட்டத்தில் அன் றைய ஷத்ரிய அர சர்கள் அவர் களுக்கு தங்கள் மகள்களைக் கட்டிக்கொடுத்து உறவைப் பேணி அவர்கள் முன் வளைந்து கொடுத்துவிட்ட னர். மாறாக, தலித்துகள் அப்படி எந்தச் சூழலிலும் வளைந்து கொடுக்க வில்லை''’ எனப் பேச குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் ஷத்ரிய வகைப் பாட்டின் கீழ் வரும் சமூகத் தினர் ரூபாலாவை தேர்தலில் நிறுத்தக்கூடாது என போராடி வருகின்றனர். ரூபாலா மன்னிப்பு கேட்டும் இன்னும் ஆத்திரம் தணியவில்லை. கர்னி சேனா உள் பட பல சமூகத்தினர் ரூபாலா வின் கொடும்பாவியை எரித்து எதிர்ப்பை வெளிப் படுத்தி வருகின்றனர்.
-நாடோடி