பாடமெடுத்த சுயேட்சை! பதவியிழந்த ஐ.ஏ.எஸ்! -ஈரோடு கிழக்கு பரபரப்பு!

er

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளரின் மனுவை ஏற்பதில் ஏற் பட்ட குளறுபடியால் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தகுதிநீக்கம் செய்யப்பட்டி ருப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

er

பிப்ரவரி 5ஆம் தேதி நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்புமனு பெறுவது, வாபஸ் பெறுவது, மனு பரிசீலனை என எல்லாம் முடிந்துள்ளது. மொத்தம் 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட, 8 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இந்த இடைத்தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி கமிஷனர் மணிஸ் ஐ.ஏ.எஸ்.ஸும், மாவட்ட தேர்தல் அதிகாரியாக கலெக்டர் ராஜகோபாலும் செயல்படுகிறார்கள்.

சுயேட்சைகளுக்கு சின்னம் வழங்கும் போது, வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த பத்மாவதி என்பவருக்கு சின்னம் வழங்கியதற்கு அங்கிருந்த மற்றொரு சுயேட்சை வேட்பாள ரான பத்மராஜன் எதிர்ப்புத் தெரிவித்தார். “"இந்த பத்மாவதி, கர்நாடக மாநிலம் பெங்களூரு வைச் சேர்ந்தவர். அவரது வாக்கு கர்நாடகாவில் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் உள்ளது. இவர் எப்படி இங்கே போட்டியிடலாம்?''’எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி, "இந்தியா ஒரே நாடு. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்''’ என கூறின

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளரின் மனுவை ஏற்பதில் ஏற் பட்ட குளறுபடியால் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தகுதிநீக்கம் செய்யப்பட்டி ருப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

er

பிப்ரவரி 5ஆம் தேதி நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்புமனு பெறுவது, வாபஸ் பெறுவது, மனு பரிசீலனை என எல்லாம் முடிந்துள்ளது. மொத்தம் 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட, 8 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இந்த இடைத்தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி கமிஷனர் மணிஸ் ஐ.ஏ.எஸ்.ஸும், மாவட்ட தேர்தல் அதிகாரியாக கலெக்டர் ராஜகோபாலும் செயல்படுகிறார்கள்.

சுயேட்சைகளுக்கு சின்னம் வழங்கும் போது, வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த பத்மாவதி என்பவருக்கு சின்னம் வழங்கியதற்கு அங்கிருந்த மற்றொரு சுயேட்சை வேட்பாள ரான பத்மராஜன் எதிர்ப்புத் தெரிவித்தார். “"இந்த பத்மாவதி, கர்நாடக மாநிலம் பெங்களூரு வைச் சேர்ந்தவர். அவரது வாக்கு கர்நாடகாவில் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் உள்ளது. இவர் எப்படி இங்கே போட்டியிடலாம்?''’எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி, "இந்தியா ஒரே நாடு. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்''’ என கூறினார்.

தேர்தல் நடத்தும் அலுவலரான கமிஷனர் மணிஸ், மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ராஜகோபாலுக்கு தகவல் கொடுக்க... உடனடியாக அங்குவந்த கலெக்டர், வேட்புமனுத் தாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சுயேட்சைகளைப் பார்த்து, "எத்தனை தேர் தல்களை நான் நடத்தியிருக்கிறேன். எனக்கே பாடம் எடுக்குறீங்களா? யார் மனுவை ஏத்துக்கணும், யார் மனுவை டிஸ்மிஸ் பண்ண ணும்னு எனக்குத் தெரியும். யார், யாரெல்லாம் எதிர்க்கிறீர்களோ, உங்க எல்லாருடைய மனுவையும் டிஸ்மிஸ் பண்ணிவிடுவேன்''’என மிரட்டல் தொனியில் பேசினார்.

சுயேட்சை வேட்பாளர் பத்மராஜனுக்கு ஆதரவாக மற்ற சுயேட்சைகளான நூர் முகமது, அக்னி ஆழ்வார் உட்பட சிலரும் எதிர்ப்பு களைப் பதிவு செய்தனர்.

er

அப்போது கலெக்டர் ராஜகோபாலிடம், “"நீங்கள் ஒருசில தேர்தல்களைத்தான் நடத்தி யிருக்கிறீர்கள். நான் நூற்றுக்கணக்கான தேர்தல்களில் நின்றவன். யார், யார் எங்கெங்கு போட்டியிடலாம் என்கிற விதிகளைக்கூடத் தெரியாமல் பேசுகிறீர்கள். நான் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் போட்டியிட்டவன். கர்நாடகாவைச் சேர்ந்த இந்த பத்மாவதியின் சுயேட்சை வேட்பாளர் மனுவை நீங்கள் ஏற்றுக்கொண்டால் உங்கள் வேலைக்கே ஆபத்து வரும்''’எனக் கூற, திடுக்கிட்டுப்போன அதிகாரிகள் கூட்டம், "என்ன சொல்கிறீர்கள்?'' எனக் கேட்டனர்.

அப்போது பத்மராஜன், "இந்தியா ஒரே நாடுதான்... சந்தேகமில்லை. பாராளு மன்றத் தேர்தலுக்கு வேண்டுமானால் இந்தியாவில் வாக்குரிமையுள்ள ஒருவர், எந்த மாநிலத்திலும் போட்டியிடலாம். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் அவரவர் சொந்த மாநிலத்தில் மட்டுமே போட்டியிட முடியும். இப்படித்தான் நான் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தேன். வேட்புமனு பரிசீலனை யில் என் மனு நிராகரிக்கப்பட்டது. "உங்களுக்கு ஓட்டுரிமையுள்ள மாநிலத்தில் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடமுடியும். பாராளுமன்றத் தேர்தலில் வேண்டு மானால் நீங்கள் எங்கு வேண்டு மானாலும் போட்டியிடலாம்' என்று என்னைத் திருப்பியனுப்பிவிட்டார் கள். இதுதான் தேர்தல் சட்ட விதிமுறை''’என்று பத்மராஜன் கூற... அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு கதிகலங்கிப் போனது.

உடனே மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல்கொடுத்து விவரம் கேட்டார்கள். இறுதியாக இந்தியத் தலை மை தேர்தல் ஆணையாளரிடமிருந்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ராஜகோபா லுக்கு டோஸ் விழுந்தது. அதன்பின் கர்நாடகா பத்மாவதியின் வேட்புமனுவை நிராகரித்து, மீதியுள்ள 46 பேருக்கு சின்னம் வழங்கப்பட்டது.

இத்தனை குளறுபடிக்கும் காரணமான மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ராஜ கோபால் இடைத்தேர்தல் அதிகாரியான மணிஸை கைகாட்டிவிட்டு அங்கிருந்து விலகிக்கொண்டார். அதனால் ஈரோடு கிழக்கு தேர்தலை நடத்தும் அலுவலராக இருந்த மணிஸை நீக்கிவிட்டு, ஓசூர் மாநகராட்சி கமிஷனரான ஸ்ரீகாந்தை ஈரோடு தேர்தல் அலுவலராக தேர்தல் ஆணையம் நியமித் துள்ளது. தேர்தல் நடைமுறை குறித்த அடிப்படை விஷயங்களைக்கூட தெரிந்துவைத்திருக்காத ராஜகோபால், மணிஸ் போன்ற ஐ.ஏ.எஸ்.களை வைத்துக்கொண்டுதான் தேர்தல் ஆணையம் வானளாவிய அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேர்தல் களம் சூடேறத் தொடங்கிவிட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் தனக்கு ஆதரவு கொடுங்கள் என அ.தி.மு.க. தரப் பிடம் கேட்ட நா.த.க.வை ஈரோடு அ.தி.மு.க.வினர் நிராகரித்துவிட்டார்கள். "எந்த சுயேட்சைக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள். ஓட்டுப்போடப் போகாமலும்கூட இருங்கள். சீமானுக்கு மட்டும் ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்' என ஈரோடு அ.தி.மு.க. நிர்வாகிகள் பிரச்சா ரமே செய்கிறார்கள். பா.ஜ.க. மாநில நிர்வாகியோ, சீமானுக்கு ஆதரவாக வெளியூர் ஆட்களை ஏற்பாடு செய்திருக் கிறாராம். அவர்கள் ஈரோட்டில் சீமானோடு பயணித்து எதிர்ப்புக் கிளம்பும் இடங்களிலெல்லாம் வன்முறை, கலவரம் ஏற்படுத்தும் திட்டத்தோடு உள்ளார்களாம்.

தி.மு.க. தரப்பில் இத் தொகுதிக்குப் பொறுப்பாளராக உள்ள அமைச்சர் முத்துச்சாமி, வேட்பாளர் சந்திரக்குமார் மற்றும் தி.மு.க. உள்ளூர் நிர்வாகிகளோடு இதுவரை 70 சதவிகித வாக்காளர்களை வீடு, வீடாகச் சென்று சந்தித்து வந்து விட்டார்கள். இதற்கிடையே தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, சக்கரபாணி மற்றும் முத்துச்சாமி அடங்கிய ஐவர் குழுவினர் 20ஆம் தேதி பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஒன்றுகூடி தேர்தல் பணி சம்மந்தமான கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அமைச்சர்களின் செயல் திட்டத்துக்குப் பிறகு மேலும் உற்சாகமாகியிருக்கிறது தி.மு.க. தரப்பு.

எதிர்த்தரப்பான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஒரு சிலரோடு நடந்துபோய் வாக்கு கேட்கிறார். தந்தை பெரியாரைப் பற்றி தொடர்ந்து இழிவாகப் பேசிவரும் சீமானின் செயல்பாடுகளால் ஈரோடு நா.த.க. நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டவில்லை. 24ஆம் தேதி முதல் ஈரோட்டில் களமிறங்குவதாக சீமான் அறிவித்திருக்கிறார். "பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரை அவ மதித்து பேசும் சீமானை பிரச்சாரம் செய்ய விடமாட்டோம்' என பெரியா ரிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

nkn250125
இதையும் படியுங்கள்
Subscribe