"110 பவுன் நகைகள் திருடுபோய் 8 மாசமாவுது, கண்டுபிடிச்சுக் கொடுக்காத தால எங்க மவ கல்யாணம் தள்ளித் தள்ளிப் போவுது'’என கலங்கும் தனலட்சுமியைப் போல் திருடுபோன விலையுயர்ந்த பொருட்கள் கிடைக்காததால் கலங்கி நிற்கின்றன கடலூர் மாவட்டத்தில் பல குடும்பங்கள்.

"என்னோட வீட்டுக்காரர் சின்ன துரை, அரசாங்க வேளாண் நிலையத்தில் ஓ.ஏ.வாக வேலைசெஞ்சி 7 வருசத் துக்கு முன்ன ரிட்டையர்மென்ட் ஆனார். வீட்டுக்காரர் சம்பளம், ரிட்டையர் மென்ட் பணம் எல்லாத்துக்கும் அப்பப்ப நகைகளாவே வாங்கி வைப்போம். இப்படி 110 பவுன் நகைகள் வீட்டில் ஒரே பீரோவில் 4 தனித்தனி அலமாரில வச்சிருந்தோம். எங்க போனாலும் வீட்டை நல்லா பூட்டிட்டுதான் போவேன்.

ttமார்ச் மாசம் 10-ஆம் தேதி அன்னைக்கு முந்திரிக்கு கொத்து கொத்துவதற்காக ஆட்கள் கிளம்பினர். கிளம்பிய அவசரத்தில் வெளி கேட்டை மட்டும் பூட்டு போட்டு பூட்டி விட்டுப் போனேன். வேலை முடிஞ்சி வந்தப்ப, வீட்டிலிருந்த நகைகள் காணவில்லை. எனது பெரிய மவள் நகைகளோட வச்சிருந்த 2 லட்ச ரூபாய் பணமும் காணவில்லை.

நான் சிலரை சந்தேகப்பட்டு போலீஸ் காரங்ககிட்ட சொன்னேன். ஆனா அவங்களை கூப்பிட்டு விசாரிக்கக் கூட இல்லை. இப்படியே ஒவ்வொரு வாரமும் நான் போலீஸ் ஸ்டேஷன் சென்று கேட்கும்போது, அவர்கள் ‘விசாரிக்கிறோம்... விசாரிக்கிறோம்’ என்று அலட்சியமாகவே பதில் சொல்கிறார்கள். எட்டு மாசம் ஆகிடுச்சி. போன மாசம்கூட ஊர்க்காரர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டம் செஞ் சோம். அப்போதும் போலீஸ் அதிகாரிகள் வந்து சமாதானம் செஞ்சாங்களே தவிர திருடுனவங் களையும் புடிக்கலை, நகை களையும் கண்டுபிடிச்சிக் கொடுக் கலை'' என்கிறார் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டையில் வசிக்கும் தனலட்சுமி.

Advertisment

கடலூர் மாவட்டத்தில் கடந்த 8 மாதங் களில் மட்டும் மாதத்திற்கு 12, 13 என நூற்றுக்கும் மேற்பட்ட நகைத் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந் துள்ளன. ஆனால் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. நகைகளும் மீட்கப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 06-ஆம் தேதி விருத்தாசலம் வீரபாண்டியன் தெரு, குறிஞ்சி செல்வன் வீட்டில் 35 சவரன் நகைகள் ரூ. 3 லட்சம் ரொக்கம், 15-ஆம் தேதி, பெரியார் நகர் என்.எல்.சி. அதிகாரி வீட்டில் 22 சவரன், ஜூன் 6-ஆம் தேதி மீண்டும் பெரியார் நகரில் அரசு ஊழியர் சிவா வீட்டில் 18 சவரன், 10ஆம் தேதி, சிதம்பரம் தில்லையம்மன் நகரில் தேவார பாட ஆசிரியர் முத்துக்குமரன் வீட்டில் 45 சவரன், 13-ஆம் தேதி விருத்தாசலம் பெரியார் நகரில் ஓய்வுபெற்ற என்.எல்.சி ஊழியர் மூர்த்தி வீட்டில் 23 சவரன், 14-ஆம் தேதி விருத்தாசலம் பஸ் உரிமையாளர் ஜெயச்சந்திரன் வீட்டில் 50 லட்சம் மதிப்பிலான 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் என நீண்டபடியே போகிறது திருட்டுச் சம்பவங்கள்.

yy

Advertisment

கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 250 சவரன் நகைகள், ரூ. 30 லட்சம் ரொக்க பணம் திருடுபோயுள்ளது. 100-க்கும் மேலான திருட்டுகள் நிகழ்ந்துள்ளன. களவாடப்பட்ட நகைகள், பணம், பொருட்கள் மீட்கப்பட்டனவா? குற்றவாளிகள் கண்டுபிடிக் கப்பட்டார்களா? என்றால் 10% கூட இல்லை.

இதுகுறித்து ஓய்வுபெற்ற டி.எஸ்.பி பாண்டியன் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுதும் இந்த தேக்கநிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. குற்றச் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித் துள்ளன. தற்போது திருட்டுகள் நடந்தால் சம்பிரதாயமாக வழக்குப் பதிவு செய்யப்படு கிறதே தவிர, குற்றவாளிகள் கைதுசெய்யப் படுவதில்லை. நீதிமன்றம், அரசின் வழிகாட்டு தலும் இதற்குக் காரணம். நீதிமன்றம், குற்றவாளி களை கைதுசெய்வதெற்கென சில விதிமுறை களை வகுத்துள்ளது. அதில், சந்தேகப்படு வோரை விசாரிக்கச் செல்லும்போது சீருடை யில் செல்லவேண்டும். மப்டியில் விசாரிக்க சென்றால்தான் குற்றவாளிகளைப் பிடிக்க முடியும். சீருடையில் செல்லும்போது குற்ற வாளி தப்பிக்க வாய்ப்புகள் அதிகம். தமிழக அரசு, ‘காவல் நிலை யங்களில் குற்றவாளி களை கடுமையான விசாரணைக்கு உட் படுத்தக்கூடாது, அவர் களின் இடத்திற்கே சென்று விசாரிக்க வேண்டும், பிடித்த 24 மணி நேரத்தில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்பன போன்று கட்டுப்பாடு களை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் விசாரணையில் தொய்வை ஏற்படுத்துகிறது.

tt

சந்தேகப்படுவோரை பிடித்ததும் அவரது உறவினர்கள், ஜாதிக்காரர்கள், கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் என பலரும் காவல் நிலையத்தில் குவிந்து விசாரணைக்கு இடை யூறு ஏற்படுத்துகின்றனர். திருட்டு வழக்குகளில் எந்த திருடனும் உடனடியாக ஒப்புக்கொள்வ தில்லை. கடுமை காட்டினால்தான் திருட்டு களைக் கண்டுபிடிக்கமுடியும். திருடியவர்களை கைதுசெய்ய முடியும். இதனால் பொதுமக்க ளிடம் பதில் சொல்லமுடியாமல், அரசு விதி முறைகளை மீறமுடியாமல் இருதலைக்கொள்ளி எறும்புகளாக காவல்துறையினர் தர்மசங்கட மான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்''’என்றார்.

காவல்துறைக்கு திருட்டுகளைக் கண்டு பிடிக்க கைகொடுப்பது சி.சி.டி.வி கேமராக்கள் தான். ஆனால் நகர, முக்கிய பகுதிகளில்தான் சி.சி.டி.வி. கேமராக்கள் இருக்கும். நகரங்களில் உள்பகுதிகளில், கிராமப் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் அவ்வளவாக இல்லை. இதனால் இத்தகைய திருட்டுகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள் காவல்துறையினர்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசனிடம் கேட்டதற்கு, “"திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். பொருட்களைக் கண்டுபிடித்து, கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் திருடப் பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். குற்றவாளிகளும் சிறையிலடைக்கப் படுவார்கள்''’என்றார்.