"என்னமோ தெரியலை ஸார்... கடந்த ரெண்டு வருஷமா என் கடையில் ஜெராக்ஸ் எடுக்க வர்றவங்க பெரும்பாலும் இந்திக்காரங்களா இருக்காங்க''’என்று குண்டைத் தூக்கிப் போட்டார் மதுரை கலெக்டர் ஆபீஸில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் சிவக்குமார்.
""என் கடையில் மட்டுமில்லை ஸார்... இங்கே இருக்கிற 12-க்கும் மேற்பட்ட ஜெராக்ஸ் கடைகளிலும் விசாரிச்சுப் பார்த்துட்டேன். எல்லோரும் இதையே சொல்றாங்க. கலெக்டர் ஆபீஸில் இருக்கிற வி.ஏ.ஓ. ஒருத்தரும் "வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு வருகிறார்கள்' என்றார். இதுகுறித்து அவர் தனது உயரதிகாரியிடம் கேட்டபோது... "வீட்டு முகவரி இருந்தால் கொடுப்பதில் தவறில்லை' என்று கூறினாராம்.’’ சிவக்குமார் இப்படிச் சொன்னதும் நாம் அதிர்ச்சியடைந்தோம்.
இதன் பின்னணியை அறிய விசாரணையில் இறங்கினோம்...
மதுரையில் 1980-களிலேயே "இந்துவாய் இருப்போம். இந்துக் கடைகளில் பொருட்களை வாங்குவோம்' என்று இந்து முன்னணியினர் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பிரச்சாரத்துக்கு மார்வாடிகளே பணஉதவி செய்வார்கள். இதற்குப் போட்டியாக, "தமிழராய் இருப்போம், தமிழர் கடைகளில் பொருட்களை வாங்குவோம்' என்று திராவிடர் கழகத்தினர் போஸ்டர்களைப் போடுவார்கள். கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சிதான் இப்போதைய இந்திக்காரர்களின் ஆக்கிரமிப்பாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினோம்.
ஆனால், வெறும் வர்த்தகத்துக்கான பிரச்சாரத்திலிருந்து, இப்போது அரசியல் ரீதியான ஆக்கிரமிப்பை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது புரியவந்தது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கள்தொகை கணக்கின்படி, தமிழகத்தின் மக்கள் தொகை
"என்னமோ தெரியலை ஸார்... கடந்த ரெண்டு வருஷமா என் கடையில் ஜெராக்ஸ் எடுக்க வர்றவங்க பெரும்பாலும் இந்திக்காரங்களா இருக்காங்க''’என்று குண்டைத் தூக்கிப் போட்டார் மதுரை கலெக்டர் ஆபீஸில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் சிவக்குமார்.
""என் கடையில் மட்டுமில்லை ஸார்... இங்கே இருக்கிற 12-க்கும் மேற்பட்ட ஜெராக்ஸ் கடைகளிலும் விசாரிச்சுப் பார்த்துட்டேன். எல்லோரும் இதையே சொல்றாங்க. கலெக்டர் ஆபீஸில் இருக்கிற வி.ஏ.ஓ. ஒருத்தரும் "வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு வருகிறார்கள்' என்றார். இதுகுறித்து அவர் தனது உயரதிகாரியிடம் கேட்டபோது... "வீட்டு முகவரி இருந்தால் கொடுப்பதில் தவறில்லை' என்று கூறினாராம்.’’ சிவக்குமார் இப்படிச் சொன்னதும் நாம் அதிர்ச்சியடைந்தோம்.
இதன் பின்னணியை அறிய விசாரணையில் இறங்கினோம்...
மதுரையில் 1980-களிலேயே "இந்துவாய் இருப்போம். இந்துக் கடைகளில் பொருட்களை வாங்குவோம்' என்று இந்து முன்னணியினர் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பிரச்சாரத்துக்கு மார்வாடிகளே பணஉதவி செய்வார்கள். இதற்குப் போட்டியாக, "தமிழராய் இருப்போம், தமிழர் கடைகளில் பொருட்களை வாங்குவோம்' என்று திராவிடர் கழகத்தினர் போஸ்டர்களைப் போடுவார்கள். கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சிதான் இப்போதைய இந்திக்காரர்களின் ஆக்கிரமிப்பாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினோம்.
ஆனால், வெறும் வர்த்தகத்துக்கான பிரச்சாரத்திலிருந்து, இப்போது அரசியல் ரீதியான ஆக்கிரமிப்பை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது புரியவந்தது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கள்தொகை கணக்கின்படி, தமிழகத்தின் மக்கள் தொகை 97 லட்சத்து 47 ஆயிரம் பேர் அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இயல்பான பிறப்பு விகிதப்படி 51 லட்சம்தான் அதிகரித்திருக்க வேண்டும். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குடியேற்றத்தால்தான் 44 லட்சம் பேர் அதிகமாக இருப்பதாகவும், 2016 தேர்தல் சமயத்தில் இது பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளிலும், சித்திரை வீதிகளிலும் இருந்த வியாபார கடைகள், நிறுவனங்கள் அனைத்தும் மார்வாடிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது என்கிறார்கள். இவர்கள் யாரும் இங்கேயே நிரந்தரமாக தங்குவதில்லை. ஆனால், 2011-க்குப் பிறகு குடும்ப அட்டைகளை வாங்கினார்கள். பின்னர் வாக்காளர் அடையாள அட்டைகள் பெறத்தொடங்கினார்கள். தமிழ்த் தேசிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில்... 2016 செப்டம்பர் 1-ஆம் தேதி ஓ.பி.எஸ். முன்மொழிந்த சட்டம் வெளிமாநிலத்தவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கியது. "தமிழ் தெரியாவிட்டாலும், வெளிமாநிலத்தவரும் வெளிநாட்டவரும்கூட தமிழக அரசுப் பணிகளில் சேரலாம்' என்று அந்தச் சட்டம் வழி செய்கிறது.
ஜெயலலிதா இறந்தவுடன், பா.ஜ.க.வினர் குதூகலமடைந்து, வெளிமாநிலத்தவரை அதிக அளவில் தமிழகத்தில் வாக்காளர்களாக பதிவுசெய்யும் வேலையில் தீவிரமாக இறங்கினார்கள். "தமிழக அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்து வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தமிழகத்தின் தனித்த அடையாளத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது' என்ற உண்மையை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
மோடியை, சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர் என்று மதுரையில் உள்ள சவுராஷ்டிரா சமூக மக்களை நம்ப வைப்பதில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்களையும் வேற்றுமொழி பேசுகிறவர்களையும் குறிவைத்து பா.ஜ.க. காய் நகர்த்துகிறது. மதுரையில் உள்ள நான்கு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் வடமாநிலத்தவரை வாக்காளர்களாக்கி வெற்றிபெற திட்டமிடுகிறது என்கிறார்கள்.
சில வார்டுகளின் வாக்காளர் பட்டியலை பார்க்க முடிவுசெய்தோம். மதுரை மாநகராட்சி 79-ஆவது வார்டு முத்து, அந்த வார்டு பட்டியலைக் கொடுத்தார். "இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் 12 ஆயிரம் பேர். இவர்களில் 4 ஆயிரம் பேர் மார்வாடிகளே இருக்கிறார்கள். கடந்தமுறை 600 பேர் மட்டுமே இருந்தார்கள். மதுரை மத்திய தொகுதியில் மட்டும் 20 ஆயிரம் பேருக்குமேல் மார்வாடிகள் இருப்பார்கள்' என்கிறார் முத்து.
இங்கேயே நிரந்தரமாக தங்கி தொழில் செய்தவர்கள் போக, தற்காலிக கூலிவேலைக்கு வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களும் வாக்காளர் அடையாள அட்டை பெறுகிறார்கள். குடும்ப அட்டைக்குத்தான் நிரந்தர முகவரி தேவை. வாக்காளர் அடையாள அட்டைக்கு தேவையில்லை என்பதால் இதில் அக்கறை செலுத்துகிறார்கள்'' என்கிறார் மூவேந்தர் புலிப்படையைச் சேர்ந்த வழக்கறிஞர் வையவன்.
"மார்வாடிகளுக்கும் இந்தி பேசும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வாங்கித் தருவதற்காகவே புரோக்கர்கள் இருக்கிறார்கள்' என்கிறார்கள். மதுரையில் வியாபாரம் செய்யும் வெளி மாநிலத்தவருக்காக நான்கு சங்கங்கள் இருப்பதாக பானிபூரி விற்கும் நிர்மல்சிங் கூறுகிறார். ""தமிழகத்துக்கு இவர்களை அழைத்துவரும் புரோக்கர்கள் முதலில் இந்தச் சங்கத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்களாம். ரவுடிகள், அரசியல்வாதிகள் கெடுபிடிகள் செய்தால் இந்தச் சங்கங்கள் பார்த்துக்கொள்ளும்'' என்கிறார்.
"தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் வலுவாக இல்லை என்பதால் அ.தி.மு.க.வில் இருக்கிறேன்' என்கிறார் அசோக்சிங். ""58-ஆவது வார்டில் இந்தி பேசும் மக்களே 7 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில் எங்களில் ஒருவர் கவுன்சிலர் ஆவது உறுதி'' என்கிறார் அசோக் சிங். அவருடைய நண்பர் ஜெயசிங்கோ, ""எவ்வளவு செலவானாலும் எங்க மக்களுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் வாங்கிக் கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறோம். சமீபத்தில் மதுரை வந்த ராஜ்நாத்சிங் இதைத்தான் சொன்னார்'' என்கிறார்.
மாவட்ட வழங்கல் அதிகாரி பாலசுப்பிரமணியத்திடம் இதுகுறித்து கேட்டோம், “""இங்கு குடியிருந்துவரும் இந்திய பிரஜைகள் யாராக இருந்தாலும் குடும்ப அட்டை வாங்கலாம். ஆதார் இணைப்புக்குப் பிறகு, இரண்டு இடத்தில் குடும்ப அட்டை வாங்க முடியாது''’என்றார். ""ஆதார் இணைப்பில் குடும்பத்தலைவரின் கைரேகைதானே இருக்கும், அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு நபர்களின் பெயரில் வாங்கலாமே'' என்றபோது, ஆமோதித்து தலையசைத்தார்.
""இங்கே வரும் வடமாநிலத்தவருக்கு, அவர்களுடைய மாநிலத்தில் உள்ள அடையாள அட்டையை நீக்கிவிட்டுத்தான் புதிய வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கிறீர்களா?'' என்றதற்கு, "அப்படி ஒரு விதி தேர்தல் ஆணையத்தில் இல்லை' என்கிறார் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் அதிகாரி. அதேசமயம், வி.ஏ.ஓ. முதல் தாசில்தார் வரை வடமாநில சங்கத்தினர் பணத்தை வாரியிறைத்து அட்டை வாங்கிக் கொடுப்பதாக அலுவலக ஊழியர் ஒருவர் கிசுகிசுத்தார்.
எழுத்தாளர் ரெ.பழனி நம்மிடம் பேசும்போது,…""மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதி, திருப்பரங்குன்றம், சோழவந்தான் ஆகிய நான்கு தொகுதிகளை குறிவைத்து பா.ஜ.க. செயல்படுகிறது. சவுராஷ்டிராக்கள் மற்றும் பிராமணர்கள் மொத்தம் லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களை ஆதரிப்பார்கள் என்று பா.ஜ.க. நினைக்கிறது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இந்தி தெரியாதவர்கள் அரசுப்பணிகளில் சேரமுடியாது. வடகிழக்கு மாநிலங்களில் வேறு மாநிலத்தவர் குடியேறவோ, சொத்துகளை வாங்கவோ முடியாது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி பேசுகிறவர்களுக்கே அரசுப்பணிகளில் 90 சதவீத முன்னுரிமை வழங்க சட்டமிருக்கிறது. கர்நாடகாவில் விளைநிலங்களை வெளிமாநிலத்தவர் வாங்கவே முடியாது. ஆனால், திட்டமிட்டு இங்கே காலூன்ற முயற்சிக்கிறார்கள். சொந்த மக்களின் உரிமைகளுக்காகப் போராடினால் சமூகவிரோதிகள் என ஒடுக்குகிறார்கள்''’என்றார் வேதனையுடன்.
வேற்று மொழியினருக்கு தமிழகத்தில் கிடைக்கிற பாதுகாப்புதான் அவர்களுடைய வருகையை அதிகரிக்கிறது. கடின வேலைகளுக்கு ஆள் பற்றாக்குறை நிலவுவதால், அத்தகைய வேலைக்காக வருகிறவர்கள் இங்கு கிடைக்கிற சலுகைகளைப் பார்த்து குடும்பத்தையும் அழைத்து வருகிறார்கள். இலவச கல்வி, இலவச சீருடை, இலவச புத்தகம், இலவச அரிசி, தாராள ரேஷன் என்று தங்களுடைய மாநிலங்களில் கிடைக்காத வசதிகள் அவர்களுக்குத் தமிழகத்தில் கிடைக்கிறது. எனவே, தமிழகத்தை சொர்க்கமாக கருதி இங்கே படையெடுக்கிறார்களோ என்றும் கருத வேண்டியிருக்கிறது.
வட இந்தியரின் இரட்டை குடியுரிமை, இரட்டை வாக்குரிமை தமிழக உரிமைகளை காவு வாங்கிவிடாமல் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது.
-அண்ணல்