Advertisment

அதிகரிக்கும் சட்டவிரோதக் குடியேற்றம்! கைதாவாரா ஈஷா ஜக்கி?

ss

"சரியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஈஷாவில் தியானம் கற்றுக்கொள்ள வந்து நாடு திரும்பா மல், சட்டவிரோதமாக ஆலந்துறையில் வீடு எடுத்து தங்கியிருந்த கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த வியாழக்கிழமையன்று பின்னிரவில் ஈஷாவிலுள்ள ஆதியோகி சிலை முன்பு அமர்ந்து, "ஜக்கி இங்க வரணும்! வந்து என்னைப் பார்க்கணும்'' என தரையில் உருண்டு புரள, உடனடியாக, ஜக்கியின் காவல்துறையான ஆலந் துறை காவல்நிலையத்திற்கு தகவல் தரப்பட, அங்கு அதி காரிகள் இல்லாததால், தொண்டாமுத்தூர் ஸ்டேஷன் எஸ்.ஐ.க்கு தகவல் தரப்ப

"சரியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஈஷாவில் தியானம் கற்றுக்கொள்ள வந்து நாடு திரும்பா மல், சட்டவிரோதமாக ஆலந்துறையில் வீடு எடுத்து தங்கியிருந்த கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த வியாழக்கிழமையன்று பின்னிரவில் ஈஷாவிலுள்ள ஆதியோகி சிலை முன்பு அமர்ந்து, "ஜக்கி இங்க வரணும்! வந்து என்னைப் பார்க்கணும்'' என தரையில் உருண்டு புரள, உடனடியாக, ஜக்கியின் காவல்துறையான ஆலந் துறை காவல்நிலையத்திற்கு தகவல் தரப்பட, அங்கு அதி காரிகள் இல்லாததால், தொண்டாமுத்தூர் ஸ்டேஷன் எஸ்.ஐ.க்கு தகவல் தரப்பட்டு, அவர் வந்து சமாதானம் பேசி அனுப்பி வைத்திருக்கிறார். இதேபோல், கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்மணி, "சாமியார் ஜக்கிதான் என்னுடைய புருஷன் - அவரைப் பார்க்கணும்'' என போராடியிருக்கிறார். இதையடுத்து, ஆலந்துறை, செம்மேடு, இருட்டுப்பள்ளம், மத்வராயபுரம், காந்தி காலனி, காருண்யா நகர், தொண் டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் குறித்த தேடுதல் வேட்டையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்'' என்கிறார் மாவட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவர்.

Advertisment

isha

கடந்த பத்தாண்டுகளாக, ஆன்மிக சுற்றுலா, தியானம், சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து ஈஷாவுக்கு வந்து தங்குபவர்கள், விசா காலாவதியான பின்பும் அவரவர் நாடுகளுக்குத் திரும்பா மல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தால், க்யூ பிரிவு, ஓ.சி.ஐ.யூ., எஸ்.ஐ.யூ. உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவுகள் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை வெளி யேற்றுவதே வாடிக்கை. ஆனால் ஈஷாவில் அப்படிச் செய்தார்களா என்பது கேள்விக்குறியே!

jaggi

Advertisment

"யோகாவைப் பற்றி தேடுபவர் களுக்கு ஈஷாவைத்தான் கூகுள் சர்ச் சட் டென அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, வெளி நாட்டிலிருந்து ஈஷாவில் குவிபவர்களில் அமெரிக்கா, லெபனான் நாட்டினரே அதிகம். இவர்கள், யோகாவுக்காக வந்து, வெளியே செல்லக்கூடாதென மூளைச்சலவை செய்து, சன்னியாசியாக்கிவிடுகிறார்கள். லெபனான் நாட்டைச் சேர்ந்த Ramouz Tante, , இங்கு சுவாமி "விபு'வாகவும், இன் னொருவர், சுவாமி "கல்லோலா'வாகவும், Macsurey மா டினாவாகவும், அமெரிக்கா வைச் சேர்ந்த Charan,, "உல்லாசா'வாகவும், Sue Macsurey மா ஆனந்தியாகவும் மாற்றப்பட்டு சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாக பெரா அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஈஷாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அந்த கொரிய இளம்பெண்ணே சாட்சி'' என்கிறார் ஈஷாவில் பணியாற்றிய ஒருவர்.

இந்தியாவில், 180 நாட்களுக்கு மேல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தால், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வரை அளிக்கமுடியும். அடைக்கலம் தருபவர் களுக்கும் தண்டனை உண்டு என்கிறது இந்திய தண்டனைச் சட்டம். இது இப் படியிருக்க... சட்டவிரோதமாக தங்கி யிருப்பவர்களை வெளியில் தேடாமல், ஈஷாவினுள் தேடினால் பலரும் சிக்குவார்கள் என்கின்றனர் விபர மறிந்தவர்கள்.

nkn140123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe