தகாத உறவு! பேராசிரியரைத் தாக்கிய மாணவர்கள்!

ss

கோவில்பட்டி நகரிலுள்ள மந்தித்தோப்பு செல்லும் சாலையில் இயங்கி வருகிறது அரசு கலை அறிவியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கணிதத் துறைத் தலைவராக இருப்பவர் பேராசிரியர் சிவசங்கரன். ஆகஸ்ட் 3ஆம் தேதி, பேராசிரியர் சிவசங்கரன், தன்னுடைய டிபார்ட்மெண்ட் அறையில் இருந்தபோது மதியம் திடீரென நுழைந்த 4 மாணவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். தாக்குதலால் மயங்கிச் சரிந்த பேராசிரியரை அலுவலக ஊழியர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

student

இச்சம்பவம் குறித்து கோவில்பட்டியின் மேற்கு காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பேராசிரியர் சிவசங்கரன், "என்னுடைய கணிதத் துறையின் மாணவர் ஒருவர், சக மாணவியைக் காதலித்தார். இதை நான் கண்டித்ததோடு, அதனை இருவரின் பெற்றோர் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். இதனால் ஆத்திரமடைந்த மாணவர், மூன்று மாணவர்களை அழைத்துக்கொண்டு வந்து என்னைத் தாக்கினர்'' என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை

கோவில்பட்டி நகரிலுள்ள மந்தித்தோப்பு செல்லும் சாலையில் இயங்கி வருகிறது அரசு கலை அறிவியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கணிதத் துறைத் தலைவராக இருப்பவர் பேராசிரியர் சிவசங்கரன். ஆகஸ்ட் 3ஆம் தேதி, பேராசிரியர் சிவசங்கரன், தன்னுடைய டிபார்ட்மெண்ட் அறையில் இருந்தபோது மதியம் திடீரென நுழைந்த 4 மாணவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். தாக்குதலால் மயங்கிச் சரிந்த பேராசிரியரை அலுவலக ஊழியர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

student

இச்சம்பவம் குறித்து கோவில்பட்டியின் மேற்கு காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பேராசிரியர் சிவசங்கரன், "என்னுடைய கணிதத் துறையின் மாணவர் ஒருவர், சக மாணவியைக் காதலித்தார். இதை நான் கண்டித்ததோடு, அதனை இருவரின் பெற்றோர் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். இதனால் ஆத்திரமடைந்த மாணவர், மூன்று மாணவர்களை அழைத்துக்கொண்டு வந்து என்னைத் தாக்கினர்'' என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில், மாணவர்களிடம் தகாத உறவு வைத்திருந்ததால்தான் பேராசிரியர் தாக்கப்பட்டார் என்ற பேச்சுக்கள் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எழுந்து பரபரப்பைக் கிளப்ப, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் களமிறங்கியிருக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் மட்டத்தில் நாம் விசாரித்தபோது, "பேராசிரியர் சிவசங்கரன், ராமநாதபுரம் அரசு கல்லூரியிலிருந்து கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பே மாறுதலாகி கோவில்பட்டி கல்லூரிக்கு வந்தவர். கல்லூரி ஒழுங்குக் கமிட்டியின் பொறுப்பாளராக இருப்பதால், கல்லூரிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்குள் வரவேண்டும், தாமதமாக வந்தால் கதவு பூட்டப்படும் என்ற கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்திருக்கிறார். இவரது தனிப்பட்ட வாழ்க்கையில், கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவி, பிள்ளைகளைப் பிரிந்திருப்பவராம்.

stt

தனது துறை மாணவர்களுடன் சகஜமாகப் பழகும் தன்மையுள்ள பேராசிரியர், மாணவர்களைத் தன் பைக்கில் அழைத்துச் செல்வது வழக்கமாம். மாணவர்களுக்காக அதிகமாகச் செலவு செய்யக்கூடியவரான அவர், தனக்குப் பிடித்த மாணவனுக்கு பரிசளிப்பதோடு, வீடு வரை பழக்கத்தை ஏற்படுத்துவாராம். ஆசிரியர் சோஷியல் டைப் என்ற புரிதலோடு மாணவர்கள் பழக, இதைப் பயன்படுத்திய சிவசங்கரன், தனக்கு ஒத்துப்போகும் மாணவர்களிடம் பாலியல் சீண்டல்வரை சென்றிருக்கிறாராம். துறையின் தலைவர், மார்க் லிஸ்ட்டில் கைவைக்கக் கூடாதென்ற பயத்தில் மாணவர்கள் அதை வெளியே சொல்வதில்லை" என்கிறார்கள்.

இந்நிலையில் மாணவன் ஒருவனைத் தன் விருப்பத்துக்காக பேராசிரியர் அழைத்தபோது, மாணவன் மறுக்க, நானும் அந்தப் பையனும் அப்படியிருந்திருக்கிறோம் என்று ஒரு மாணவனைப் பற்றி குறிப்பிட, பேராசிரியர் குறிப்பிட்ட அந்த மாணவனிடமே விஷயத் தைச் சொல்லிவிட்டான். நம்மை இப்படிச் சொல்லிட்டாரே என்று அதிர்ச்சியடைந்த அந்த மாணவன், ஆத்திரத்தில் சக மாணவர்களுடன் சென்று பேராசிரியரைத் தாக்கியிருக்கிறான். விவகாரம் விபரீதமானதால், ssகல்லூரி முதல்வர் நிர்மலா, அம்மாணவர்களைச் சமாதானப் படுத்தியதோடு கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை விட்டிருக்கிறார். அடுத்ததாக, சிவசங்கரனின் புகாரின் அடிப்படையில் இரண்டு மாணவர்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார் முதல்வர்.

இதையடுத்து, சிவசங்கரனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அனைத்து உண்மைகளையும் முதல்வரிடம் தெரிவிக்க... அதுகுறித்து விசாரித்து, அறிக்கையை நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி துணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அதனடிப்படையில், சிவசங்கரனின் நடத்தை சரியில்லாததன் காரணமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது.

பேராசிரியரால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி கோட் டாட்சியரிடம் புகார் மனுவைக் கொடுத்திருப்ப தாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தாலுகா கமிட்டி செயலாளர் தினேஷ்குமார் கூறினார்.

பாலியல் குற்றச்சாட்டு குறித்து பேராசிரியர் சிவசங்கரனைத் தொடர்பு கொண்டபோது, "மாணவன் ஒரு மாணவியைக் காதலிச்சான். அதை என்னிடமே சொன்னான். துறைத் தலைவர் என்ற வகையில் அவனைக் கண்டித்து அறிவுரை சொன்னேன். அதுக்கு என்னைய தாக்கிட்டாங்க. என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. அந்த மாணவன், விடுதியிலும் தவறு பண்ணினான். அதையும் கண்டிச்சேன். பொதுவாக மாணவர்களிடம் நான் அன்பாகத்தான் நடந்துக்கிட்டேன். என் மீதான தாக்குதல் காரணமாகத்தான் பொய்யான தகவலைச் சொல்றாங்க. எனக்கு அந்த மாதிரியான பழக்கம் கிடையாது. அதுபோன்ற சம்ப வங்களில் நான் ஈடு படவில்லை'' என்று மறுத்தார்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணனிடம் பேசியபோது, "பேராசிரியர் மீது மாணவர் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில் அவர் மீது 377வது பிரிவான, இயற்கைக்கு மாறான உறவு என்பதில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை பற்றி மாணவர்களிடம் பேசி அமைதிப்படுத்தியுள்ளோம். அவருக்கு நல்ல பெயர் கிடையாது. ஏற்கனவே இந்த மாதிரி வலுக்கட்டாயமாக ஹோமோ செக்சுவலில் ஈடுபடக்கூடியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது'' என்றார். நெருப்பில்லாமல் புகைவதில்லைதானே!

nkn130822
இதையும் படியுங்கள்
Subscribe