கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க.விற்கு எதிராகவோ, தனக்கு எதிராகவோ எந்தவொரு ஆவணமும், சாட்சி யமும் வெளிவந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் எடப்பாடி. இதற்காக நியமிக்கப்பட்டவர்தான் அப்போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுபாஷினி. மாவட்டம் முழுமைக்கும் போலீஸாரை கட்டுப்படுத்தும் அதிகாரமிக்க தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் என்பதால் சாட்சிகளை மிரட்டியும், சான்றாவணங்களை குலைத்துப் போட்ட தகவலும் வெளியாகி யுள்ளது. குறிப்பாக கொடநாட்டில்  ஜெ., சசிகலா முன்னிலையில் மாண்புமிகு...க்கள் அரைக்கால் டவுசருடன் மண்டியிட்டு கையெழுத்திட்ட தகவலும் உண்டு என்பதுதான் விஷேசமே!

Advertisment

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24-4-2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கூடவே, எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராக, சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.  இதே வேளை யில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகிய நிலையில், அரசுத் தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டதால் டிசம்பர் 19-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி முரளிதரன்.

Advertisment

வழக்கில் வாயிற்காவலாளி முதல் பங்களாவில் வேலை பார்த்த லெட்சுமி உள்ளிட்ட பலரையும் சாட்சிகளாக ஆரம்ப கட்டத்தில் சேர்த்தனர். இதில் பலரும் "ஜெ.' பங்களாவிற்கு வரும்பொழுது என்ன நடந்தது? என்பதை வெளிப்படையாகவே கூறினர். இது எடப்பாடிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில்... "மணி'யான அமைச்சரின் மனைவியின் பேட்ஜைச் சேர்ந்த டி.எஸ்.பி. ஒருவரை வேண்டுமென்றே விசாரணையில் புகுத்தினர். அவருடன் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினியும் இணைந்துகொண்டார். சாட்சிகள் என்னதான் வாக்குமூலம் கொடுத்தாலும், அந்த டி.எஸ்.பி. வழியாக இன்ஸ்பெக்டர் சுபாஷினிக்கு சென்றே பிறகே "எடிட்டிங்' செய்யப்பட்டு வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. பிறழ்வு சாட்சியாக மாறாதவாறு, நேர்த்தியாக எடிட்டிங் செய்யப்பட்டது அத்தகைய வாக்குமூலங்கள்'' என்றார் வழக்கின் துவக்க கால அதிகாரி ஒருவர்.

வழக்கின் முக்கிய சாட்சி யான காவலாளி கிருஷ்ணதாபா தற்பொழுதுவரை கொடநாட்டில் காவலாளியாக வேலைபார்த்து வருகின்றார். கொடநாடு நிர்வாகத் தரப்பில் மாதந்தோறும் சம்பளம் வந்தாலும் குறிப்பிட்ட "மணி'யான அமைச்சர்மூலம் அவருக்கு தனியாக சம்பளம் வருவது குறிப்பிடத்தக்க ஒன்று. 

Advertisment

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் களோ, "கொலை, கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட வேண்டுமென்பதுதான் எங்களின் பலநாள் கோரிக்கை. ஏனெனில் குறிப்பிட்ட இந்த மரத்தில்தான் கட்டிவைத்து அடிக்கப்பட்டு தொங்க விடப்பட்டார் என்பது போலீஸின் ரெக்கார்டாக இருக்கும். அது சவுக்கு மரமா? வேறொரு மரமா? என்பது குறுக்கு விசாரணையில் எங்களது கேள்வியாக இருக்கும். இந்த விஷயத்தில் தவறிருந்தால் அது எங்களுக்குச் சாதகமாக இருக்கும். இருக்கின்ற குற்றவாளிகளை மட்டும் வைத்து அவர்கள் மட்டுமே தண்டனைக் குரியவர்கள் என்பதுபோல் சித்தரிக் கின்றார்கள். சம்பவ இடத்தை நாங்கள் பார்த்திருந்தால் அது உறுதியாகுமே? நீதிமன்றமே அனுமதி கொடுத்தும் ஏன் அனுமதிக்கவில்லை? இப்பொழுது, இத்தனை வருட காலத்தில் இல்லாத வேறொரு மரத்தை அங்கு நட்டு வைத் திருக்கலாமே?'' என்கின்றார்கள் அவர்கள்.

kodanadu1

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அவருடைய அறைக்குள் சர்வ சுதந்திரமாக சென்று வரும் அந்த வேலைக்காரப் பெண்ணோ, "அம்மாவிற்கு என்ன தேவையோ அதைத்தான் நான் முன்னின்று செய்வது வழக்கம். அம்மா இருந்தாலும், இல்லையென்றாலும் பங்களா என்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருக் கும். அம்மா, சின்னம்மா இருக்கும்பொழுது குறிப்பிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மா.செ.க்கள் உட்பட பலரும் வருவார்கள். வரும்பொழுது கட்டைப்பை நிறைய டாகுமெண்ட்ஸ் கொண்டுவருவார்கள். இருப்பினும் உடனடி யாக அவர்களைப் பார்க்கமாட்டார்கள். அவர்களை கீழேயே காத்திருக்கக் கூறுவார்கள். அவர்களுக்கு தண்ணீர்கூட கொடுக்கமாட்டோம். பெரும்பாலும் மாலை வேளை யில்தான் அவர்களைப் பார்ப்பார்கள். தோட்டத்தில் அம்மா, சின்னம்மா இருவருக்குமான நாற்காலி போடப் பட்டு, இருவர் மட்டுமே உட் கார்ந்திருக்க... காத்திருந்தவர்களை வரவழைத்து கையில் வைத்திருக்கும் உளவுத்துறையின் பேப்பரைக் கொண்டு கேள்வி கேட்பார்கள். இதில் ஒருசிலர் தவறாகக் கூற, அரைக்கால் டவுசருடன் மண்டியிட்டு உட்கார வைப்பார்கள். அதன்பின் குறிப்பிட்ட பத்திரங்களில் எழுதி வாங்குவார்கள். அதனை நான்தான் அறைக்குள் வைப்பேன்'' என தன்னை சந்தித்த "வளர்ந்த' காவல் அதிகாரியிடம் முதலில் கூறியிருக்கின்றார். இது இன்ஸ்பெக்டர் சுபாஷினியின் கவனத்   திற்குச் சென்று அதன்பின் எடிட் செய்யப்பட்டது. ஒன்றரை கிலோ எடையுள்ள தங்க கிருஷ்ணர் சிலையும் காணாமல் போனது. என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் சுபாஷினியையும், அந்த டி.எஸ்..பி.யையும் விசாரித்தால் இதன் பின்னணியில் உள்ளவர்கள் சிக்குவார்கள்'' என் கின்றார் எஸ்.பி. அந்தஸ்திலுள்ள ஒரு அதிகாரி.

இது இப்படியிருக்க... "டி.வி.யைப் பார்த்து தெரிந்து கொண்டேன்' என அன்றைய தினத்தில் கூறிய எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சைக்கொண்டே, அவரால் செய்தியாக்கப்பட்ட தகவலைக் கொண்டு. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்ட நபர் களை விசாரிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுடன் காத்திருக்கின்றனர் வழக்கறிஞர்கள். 

-வேகா