மோடியின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம் மேடைக் கலைஞர், இந்துத்துவவாதி களின் அச்சுறுத்தலால் தனது நிகழ்ச்சிகளுக்கு "குட் பை' சொல்லியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குஜராத் தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் முனாவர் ஃபாரூகி. ஸ்டேண்ட்-அப் காமெடியில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டா ளத்தை வைத்திருப்பவர். அவருடைய யுடியூப் சேனலை ஒன்றரைக் கோடி பேர் சப்ஸ்கிரைப் செய் துள்ளனர். ஒவ்வொரு காமெடி வீடியோவுக்கும் ஒரு கோடிக்குமேல் பார் வையாளர்கள் வருகிறார்கள். இவரது நையாண்டி யில், சமகால வாழ்க்கை முறை, சமூகச்சூழல், அரசியல் என அனைத்தும் கலந்துகட்டி ரசிக்க வைப்பதாக இருக்கும். அவரது பெயரும், அதன் அடையாளமும், அவ ருடைய புகழும் இந்துத்துவர்களுக்கு உறுத்தலாக இருந்தது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் நடத்தப்பட்ட, 2021 புத்தாண்டுக் கொண்டாட்ட காமெடி நிகழ்ச்சியில், கொரோனா விதிமுறை மீறலென்றும், அமித்ஷாவை கிண்டலடித்தா ரென்றும், இந்துக்களின் மனதைப் புண்படுத்தினா ரென்றும் பாஜ.க.வைச் சேர்ந் தவர் அளித்த புகாரின்பேரில், முனாவர் ஃபாரூகி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களும் நிரா கரிக்கப்பட... உச்சநீதி மன்றத்தில் முறை யிட்டு, 37 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் வெளியேவந்தார்.
கடந்த சில மாதங்களாக மீண்டும் நிகழ்ச்சி நடத்தத் தொடங்கியவருக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் நெருக்கடி கொடுத்தன. இதன் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அவரது 12 நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந் நிலையில், பெங்களூரு வில், நடிகர் புனித் ராஜ்குமாரின் அறக் கட்டளைக்கு நிதி வசூலிக்கும்விதமாக அவர் நடத்தவிருந்த ஸ்டேண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிக்கு, "ஜன்ஜக்ருதி சமிதி' என்ற கர்நாடக இந்துத்வ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
அதையடுத்து, அவரது நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டு மென்று பெங்களூரு காவல்துறை உத்தர விட்டதால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான முனாவர் ஃபாரூகி, "கடந்த காலத்தில் நான் சொல்லாத ஜோக்கிற்காக கைது செய்யப்பட்டேன். தொடர்ந்து எனது நிகழ்ச்சிக்கு வரும் அச்சுறுத்தல் களால் என்னால் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெறுப்பரசியல் வென்று விட்டது, கலை இறந்துவிட்டது. அனைவருக்கும் குட் பை'' என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு ஸ்டேண்ட்-அப் காமெடியி லிருந்து மொத்தமாக விலகுவதாக அறிவித்தார். இது, கருத்துரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
முனாவர் ஃபாரூகிக்கு ஆதரவாக, மும்பையைச் சேர்ந்த குணால் கம்ரா என்ற ஸ்டேண்ட்- அப் காமெடியன் தனது ட்விட்டர் பக்கத்தில், "காமெடி ஷோ நடத்துபவர்கள், தங்கள் வீடியோவை, நீதித்துறை சார்ந்தவர்களிடம் போட்டுக் காட்டி அனுமதி வாங்கக்கூடிய மோசமான சூழல் ஏற்பட் டுள்ளது''’என்று வருத்தத்துடன் விமர்சித்தார். இந்நிலையில், பெங்களூருவில் டிசம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட விருந்த இவரது காமெடி நிகழ்ச்சியை, "கொரோனா பரவலென்றும், சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இவரது நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்' கூறி ரத்து செய்துள்ளனர். இதன் பின்னணியிலும் வலதுசாரி அமைப்புகளே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
முனாவர் ஃபாரூகிக்கு எதிரான அச்சுறுத் தல்கள் குறித்து திரைப்படக் கலைஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான ரோகிணியிடம் கேட்ட போது, "கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதே வேலையாகத்தான் இந்துத்துவவாதிகள் தொடர்ந்து செயல்படுகிறார்கள். ஆனால் கலை ஞர்கள் இதற்காகப் பின்வாங்கி இப்படியானதொரு முடிவை எடுக்கக்கூடாதென்று நான் நினைக்கிறேன்.
கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய அச்சுறுத்தல்களைப் பல கலைஞர்களும் எதிர்கொண்டிருக்கிறார்கள். நம் மாநிலத்திலேயே எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு எதிரான அழுத்தங்களால், 'நான் இனி எழுதவே போவதில்லை' என்ற முடிவுக்கு வந்தார். அத்தகைய சூழலில், த.மு.எ.க.ச. அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகநல ஆர்வலர்களும் அவருக்கு ஆதரவாகக் குரலெழுப்பி, அவருக்கு பக்கபலமாக நின்றதால், தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளார்.
எந்தவொரு விஷயத்திலும் கருத்துச் சொல்வதற்கும், எதிர் கருத்து சொல்வதற்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமை மறுக்கப்படக் கூடாதென்பதே கருத்துரிமைக்கு ஆதரவாகப் பேசக்கூடிய என் போன்றோரின் நிலைப்பாடு. சமீபத்தில் "ஜெய்பீம்' படப் பிரச்சினையில், அப்படத்தில் தவறென்று சுட்டிக்காட்டப்பட்ட ஒரு விஷயம் உடனே சரிசெய்யப்பட்டதோடு அப்பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கவேண்டும். ஆனால், "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்ச ரூபாய்' என்று அறிவித்ததெல்லாம் மிக மிகத் தவறான செயல்.
அதேபோல, முனாவர் ஃபாரூகியை "எந்த மேடையிலும் பேச விடமாட் டோம், குரலை ஒலிக்க விடமாட்டோம்' என் றால், அவரது கருத்தில் இருக்கும் உண்மை அவர்களைத் தொந்தரவு செய்கிறது என்று அர்த்தம். மேலும், தொலைபேசி வழியாகவும் மிரட்டல்கள் வரக்கூடும். அத்தகைய மிரட் டல்கள் வரும்போது, அவற்றைப் பொது வெளியில் அம்பலப்படுத்த வேண்டும். அப்போது பொதுமக்கள் உண்மையின் பக்கம் ஆதரவாக அணி திரள்வார்கள். முனாவர் ஃபாரூகி யின் அறிவிப்பைத் தற்காலிகமான ஒரு நிலைப்பாடா கத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். இதன்மூலம், முனாவர் பாஃரூக் குக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்'' என்றார்.
மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களின் பேச்சுரிமையைப் பாதுகாப்பதே ஓர் ஜனநாயக அரசின் கடமையாகும்.