"எங்கிருந்தோ வந்த அகதி நாய்களுக்கு அவசரத்தை பாரு. அங்கேயே செத்துத் தொலைய வேண்டியதுதானே...' என்று தங்களை சக தமிழர்களே திட்டும்போது செத்துப்போகலாம் போல இருப்பதாக புலம்பித் தவிக்கிறார்கள் குறுக்குப்பட்டி அகதி முகாமில் வசிக்கும் ஈழத்து மக்கள்.
தமிழ் ஈழத்துக்காகவும் உலகத் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுப்பதில் பெருமைகொள்ளும் தமிழ் அமைப்புகள் இங்கே ஏராளமாக உண்டு. ஈழத் தமிழர்களுக்காக இப்போதுகூட கண்ணீர் வடிக்கும் விளம்பரங்கள் செய்யும் அரசும் உண்டு. ஆனால், ஈழச் சண்டையில் சொத்து சுகங்களை இழந்து உயிர்தப்பி தாய்த் தமிழகத்தில் பல காலகட்டங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களின் நிலையை மேம்படுத்த யாரும் தயாராக இல்லை.
ஈழச் சண்டை காரணமாக 1983-87, 1989-91, 1996-2003 என மூன்று கட்டங்களாக தமிழகத்திற்குள் தஞ்சம் புகுந்தவர்களைக் காட்டிலும், உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த
"எங்கிருந்தோ வந்த அகதி நாய்களுக்கு அவசரத்தை பாரு. அங்கேயே செத்துத் தொலைய வேண்டியதுதானே...' என்று தங்களை சக தமிழர்களே திட்டும்போது செத்துப்போகலாம் போல இருப்பதாக புலம்பித் தவிக்கிறார்கள் குறுக்குப்பட்டி அகதி முகாமில் வசிக்கும் ஈழத்து மக்கள்.
தமிழ் ஈழத்துக்காகவும் உலகத் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுப்பதில் பெருமைகொள்ளும் தமிழ் அமைப்புகள் இங்கே ஏராளமாக உண்டு. ஈழத் தமிழர்களுக்காக இப்போதுகூட கண்ணீர் வடிக்கும் விளம்பரங்கள் செய்யும் அரசும் உண்டு. ஆனால், ஈழச் சண்டையில் சொத்து சுகங்களை இழந்து உயிர்தப்பி தாய்த் தமிழகத்தில் பல காலகட்டங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களின் நிலையை மேம்படுத்த யாரும் தயாராக இல்லை.
ஈழச் சண்டை காரணமாக 1983-87, 1989-91, 1996-2003 என மூன்று கட்டங்களாக தமிழகத்திற்குள் தஞ்சம் புகுந்தவர்களைக் காட்டிலும், உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த 2006-2010 காலகட்டத்தில் அதிகளவில் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 110 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் 3 லட்சம் ஈழ அகதிகள் வசித்துவந்த நிலையில், தற்போது 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் பேர் முகாம்களில் வசித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் பவளத்தானூர், குறுக்குப்பட்டி, நாகியம்பட்டி, தம்மம்பட்டி, செந்தூரப்பட்டி (வடக்கு மற்றும் தெற்கு) ஆகிய இடங்களில் ஈழ அகதிகளுக்கான முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. சிமெண்ட் அட்டை, ஓடுகளால் வேயப்பட்ட வீடுகளில்தான் இவர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே அகதிகளாக வசிக்கிறவர்கள். கால்நூற்றாண்டைக் கடந்த பின்னும், குடியிருக்க வீடு, உணவு, உடை ஆகியவற்றைக் கடந்து அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க வேறெந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த முகாம்களில் குடிநீர் பிரச்சினை, கழிப்பிட பிரச்சினை ஆகியவைதான் இங்கு வாழும் மக்களின் தீராத பிரச்சனையாக இருக்கிறது. 12 நாள் இடைவெளியில்தான் தண்ணீர் விநியோகம் செய்கிறார்கள். அந்தத் தண்ணீரைச் சேமித்து வைத்தால், அதையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கீழே கொட்டிவிடுவார்கள்.
இந்த முகாமில் வசிக்கும் அகதிகள் சிலர் நம்மிடம் பேசினர்…''இங்கேயே தங்கிவிடும் எண்ணத்தில்தான் வசிக்கிறோம். ஆனால், முகாமில் எங்க பெண்பிள்ளைகளுக்கு சுகாதாரமான கழிப்பிட வசதிகூட இல்லை. அவர்கள் மாதவிலக்கு காலத்தில் மிகவும் அவதிப்படுகின்றனர். எப்போதாவது ஒருநாள்தான் குப்பைகளையே வாருகிறார்கள். தண்ணீர் பிரச்சனை காரணமா தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நாங்களே டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வர்றோம். ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்னு பிடிச்சிக்கிறோம். தண்ணீர் திறந்து விடுவதற்காக இந்த முகாமைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரோ "ஒவ்வொரு குடும்பமும் மாதம் 15 ரூபாய் கொடுத்தால்தான் தண்ணீர் திறந்து விடுவேன்' என்கிறார்.
மழைக்காலத்தில் பல நாள்களுக்கு தண்ணீர் தேங்கிக் கிடக்கும். தார்ச் சாலை போடல. தெரு விளக்கு வசதி கூட இல்லை. இருட்டுக்குள்தான் வசிக்கிறோம். கியூ பிராஞ்ச், கலெக்டர்னு புகார் கொடுத்தும் பலனில்லை. பிரதமரோ முக்கியத் தலைவர்களோ வந்தால் முகாம்களைத்தான் குடைகிறார்கள். யாரும் வெளியே செல்லக்கூட அனுமதிப்பதில்லை. நாடுதிரும்ப விரும்பாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால்கூட பரவாயில்லை'' என்கிறார்கள்.
குடிநீருக்காக பஞ்சாயத்து குழாய்களில் தண்ணீர் பிடிக்கச் சென்றால் "அகதி நாய்களுக்கு அவசரத்தைப் பாரு' என்று திட்டுவதாக புலம்புகிறார்கள். முகாம்களில் வசிக்கும் பி.இ. முடித்த இளைஞர்களும், கல்வியறிவே இல்லாத ஆண்களும் பெயிண்ட் அடிக்கும் வேலை அல்லது கட்டுமான வேலைகளுக்குத்தான் செல்கிறார்கள். சிலர்மட்டுமே படித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்கின்றனர். செய்தியாளரை அனுமதிக்காத அதிகாரிகள், கந்துவட்டிக்காரர்கள் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கிறார்கள்.
இதுபற்றி, தமிழ்நாடு ஈழ அகதிகள் மறுவாழ்வு துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம்...… “""என்னிக்கு இருந்தாலும் இவர்கள் சொந்த நாட்டுக்கு போயிருவாங்க என்பதால்தான் அரசு எந்த வசதியும் செய்யாமல் இருக்கிறது. உணவுக்கு இலவச அரிசியும் மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபாய்வரை பண உதவியும் வழங்கப்படுகிறது. அவர்களுக்குள்ளேயே முரண்கள் நிலவுகின்றன. அரசுக்கு கோரிக்கை வந்தால் இயன்ற உதவிகளை செய்யத் தயாராகவே இருக்கிறோம்''’என்றார்.
நாலாந்தர குடிமக்களைவிடவும் அவலநிலையில் இருக்கும் தங்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்க வேண்டும், படித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே அகதிகளின் விருப்பமாகும்.
-இளையராஜா