ம்பேத்கரை முன்னிறுத்தி செயல்படுவதாகக் கூறும் த.வெ.க. தலைவர் விஜய், கவின் சாதிய ஆணவப் படுகொலை விவகாரத்தில், மதுரை மாநாட்டை மனதில்வைத்து மௌனம் காட்டிவருவது கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. 

நன்றாகப் படித்து, கைநிறைய சம்பளம் வாங்கி, ஒழுக்கமாக வளர்ந்தும்கூட, தன் சமூகம் தாண்டி இன்னொரு சமூகப் பெண்ணைக் காதலித்ததற்காகவும் பட்டியலின சாதி என்பதற் காகவும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் கவின். தமிழக அளவில் பேசுபொருளான இந்த ஆணவப் படுகொலைப் பிரச்சனைக்கு புதிதாக கட்சி தொடங்கி ஆட்சிக்கு வரத் துடிக்கும் விஜய் வாய்திறக்காமல் மௌனம் காப்பது கடும் விமர்சனத்தைத் தேடித்தந்துள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை அரசியல் கோட்பாடாக அறிவித்து அரசியலுக்கு வந்த விஜய், அஜித்குமார் லாக்-அப் மரணத்தின்போது நேரில்சென்று ஆதரவு கொடுத்து போராட்டம் நடத்தினார். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கவினின் மரணத்திற்கு மூச்சுக்கூட விடாமல் மௌனம் காப்பது, அவர் அறிவித்த அடிப்படைக் கோட்பாட்டுக்கே எதிராக இருக்கிறது. அம்பேத்கரை கொள்கை தலைவர் என அறிவித்துவிட்டு, பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான கொடூரத்திற்கு விஜய் அமைதியாக இருப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற ஆதங்கம் சொந்தக் கட்சியினர் மத்தியிலேயே வலுத்துள்ளது.

Advertisment

இந்த ஆணவப்படுகொலை நிகழ்ந்த அடுத்த இரண்டு மூன்று நாட்களிலேயே விஜய் நேரிலேயே தூத்துக்குடி செல்ல, திட்டத்தை தயார் செய்திருக்கிறது ஆதவ் அர்ஜுனா டீம். இதில் குறுக்கே புகுந்த வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு வருகின்ற 25-ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. அப்பகுதியில் வாழுகின்ற பெரும்பான்மையான மக்கள் முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இந்த நேரத்தில் ஆணவக் கொலைக்கு எதிராக குரல் கொடுத்தால் முக்குலத்தோர் சமூகத்தினரின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என முட்டுக்கட்டை போட்டுள்ளாராம். நம் கட்சியிலுள்ள தலித் மக்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய் வது என ஆதவ் கேட்க, அதற்கு "உச்சநீதிமன் றத்தில் வழக்குத்தொடுத்து அதன்மூலமாக ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்றச் சொல்லி அவர்களை அமைதிப்படுத்தலாம்' என்றிருக்கிறார்.

"களத்திற்கு வருவதற்கு இந்த மாதம்,… அடுத்த மாதம் என விஜய் தாமதப்படுத்தி வருவதற்கும் அந்த வியூக வகுப்பாளர்தான் காரணம்' என சொல்லப்பட்டது. "இத்தனை ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்று என கூறிவிட்டு, அந்த கட்சிகள் மாதிரியே சாதி அரசியல் செய்வதும், ஓட்டுக்காக முக்கிய பிரச்சனைகளைக் கடந்து செல்வதும் எப்படி மக்கள் மத்தியில் விஜய் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்' என கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள் சமூகவலைத்தள வாசிகள். "தேர்தலைச் சந்திக்க வியூகம் வகுத்துக் கொடுக்கச் சொன்னால், தேரை இழுத்து தெருவில் விட்டுள்ளார் ஜான்' என கட்சிக்குள் அவர்மீது விமர்சனம் எழுந்துள்ளது. 

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அரசியல்ரீதி யாக எடுக்கும் திட்டங்களையும் வியூகங்களை யும் விஜய் நடைமுறைப்படுத்தச் சொன்னாலும், அதனைச் செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டை யாக புஸ்ஸி ஆனந்த் இருந்துவருகிறாராம். கட்சியில் ஆரம்பகட்டத்திலிருந்தே புஸ்ஸி மீது புகார்களும் கடிதங்களும் வந்தவண்ணமிருந்தன. "அது கட்சியை திசை திருப்பி சீர்குலைக்கச் செய்யும் வேலை' என அவ்வப் போது விஜய்யிடம் சொல்லி சூசகமாக காய் நகர்த்தி வந்துள் ளார் புஸ்ஸி. 

Advertisment

vijay1

இந்த சூழ்நிலையில் பூத் கமிட்டி அமைக்கும் பணி வெகுதீவிரமாக நடந்து வந்துள்ளது. கடந்தமாத இறுதியில் மாவட்டச் செயலாளர்களிடமிருந்து அவசர அவரசமாக பூத் கமிட்டி லிஸ்ட் பெற்று, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனுக்குத் தெரியாமலே, தமிழகம் முழுவதும் த.வெ.க.வுக்கு பூத் கமிட்டி அமைத்துவிட்டதாக ஒரு அறிக்கையை விஜய்யிடம் கொடுத்துள்ளார். அது எப்படி எனக்குத் தெரியாமல் இவர் பூத் கமிட்டி லிஸ்ட் கொடுப்பார் என ஆதவ் விசாரித்துப் பார்த்ததில், 20,000 பூத் கமிட்டிக்கு ஆட்களே நியமிக்கவில்லை என்கிற தகவல் தெரியவர, அதை முழுமையாக விஜய்யின் காதுக்குக் கொண்டுசென்றிருக்கிறார். 

மக்கள் மன்றத்திலிருந்த ஸ்ரீசாந்த், விஜய் யின் டிரைவர் ராஜேந்திரன் என அனைவருமே ஜாதிரீதியாகவும், பணம் பெற்றுக்கொண்டும் பொறுப்பு வழங்கிய விவகாரம், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற செயலி ஒன்றை உருவாக்கி, தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்க திட்ட மிடுகையில், அதில் விஜய்க்கு அடுத்து தான்தான் என்றவகையில் விஜய் படத்துக்குக் கீழ் புஸ்ஸி படத்தைப் போட கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளார். இதையும் விஜய்யிடம் ஜான், ஆதவ் டீம் சொல்ல, விஜய் புஸ்ஸிமீது கடுப்பாக இருந்துள்ளார். இந்த நிலையில்தான் விஜய் செயலி மூலமாக உறுப்பினர் சேர்க்கை 5 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் ஆதவ் மற்றும் ஜான் தேர்தல் பணிகளைப் பார்ப்பார்கள். மா.செ. மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இவர்கள் சொல்லுவதையே கேட்கவேண்டும் என திட்டவட்டமாகச் சொல்லியுள்ளார்.

இப்படியாக கட்சிக்குள்ளே மேல்மட்ட நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் யார் பெரியவர் என்று போட்டி போட்டுக்கொள்வது விஜய்க்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாம். 

-சே