பட பட தீர்ப்பு! பரோலில் சசி! மீண்டும் கூவத்தூர்!

koovathur

"18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை தயாரிக்கும் பணி முடிவடைந்துவிட்டது. 5-ஆம் தேதிவரை அயல்பணியில் இருக்கும் நீதிபதி சத்தியநாராயணா, 8-ஆம் தேதியிலிருந்தே எந்த நாளிலும் தீர்ப்பளிக்கலாம்' என உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க. தலைமையிலும் எஃபெக்ட் தெரிகிறது.

koovathurடி.டி.வி. தினகரன், அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபோது, "எடப்பாடியை பதவியை விட்டு இறக்க ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார். அதற்காக என்னிடம் பேச முன்வந்தார். நான் அதை மறுத்துவிட்டேன்' என்ற தினகரனின் பேச்சு அ.தி.மு.க.வில் புயலைக் கிளப்பியது. ஏற்கனவே ஓ.பி.எஸ்., ""என்னை திவாகரன்தான் முதல்வர் பதவியை ஏற்க வைத்தார்'' என சொன்னது ஓ.பி.எஸ்.ஸும் திவாகரனும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்கிற பிம்பத்தை உருவாக்கியிருந்தது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி, தினகரனை தாக்காமல் பேசினார். அத்துடன் "நான் சசிகலா அம்மாவிட

"18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை தயாரிக்கும் பணி முடிவடைந்துவிட்டது. 5-ஆம் தேதிவரை அயல்பணியில் இருக்கும் நீதிபதி சத்தியநாராயணா, 8-ஆம் தேதியிலிருந்தே எந்த நாளிலும் தீர்ப்பளிக்கலாம்' என உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க. தலைமையிலும் எஃபெக்ட் தெரிகிறது.

koovathurடி.டி.வி. தினகரன், அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபோது, "எடப்பாடியை பதவியை விட்டு இறக்க ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார். அதற்காக என்னிடம் பேச முன்வந்தார். நான் அதை மறுத்துவிட்டேன்' என்ற தினகரனின் பேச்சு அ.தி.மு.க.வில் புயலைக் கிளப்பியது. ஏற்கனவே ஓ.பி.எஸ்., ""என்னை திவாகரன்தான் முதல்வர் பதவியை ஏற்க வைத்தார்'' என சொன்னது ஓ.பி.எஸ்.ஸும் திவாகரனும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்கிற பிம்பத்தை உருவாக்கியிருந்தது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி, தினகரனை தாக்காமல் பேசினார். அத்துடன் "நான் சசிகலா அம்மாவிடம் பேசினேனே தவிர, வேறு யாரிடமும் பேசியது இல்லை' என்றார்.

இப்படி ஆளாளுக்கொருவராக சசிகலாவையும் அவரது குடும்பத்தைப்பற்றியும் பேசுவதற்குக் காரணம் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்குபற்றி வரப்போகும் படபட தீர்ப்புதான். ஒருவேளை தீர்ப்பு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக வந்துவிட்டால்... சசிகலா பக்கம் உடனடியாக சாய, குறைந்தபட்சம் 10 ஏம்.எல்.ஏ.க்கள் தயாராக இருக்கிறார்கள்.

கூவத்தூர் முகாம் முடிந்து ஆட்சிப் பொறுப்பேற்றதும் எடப்பாடி, எம்.எல்.ஏ.க்களை நன்றாகக் கவனித்துக்கொண்டார். மாதம் 35-எல் அளவுக்கு பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பணிகளில் எம்.எல்.ஏ.க்களுக்கு வருமானம் இருந்தது. இப்போது நிலைமை அப்படியில்லை. உள்ளாட்சிப் பணிகளில் துறை அமைச்சரின் தலையீடு இருக்கிறது அதுபோல அனைத்துத் துறைகளிலும் அமைச்சர்கள் தலையிடுகிறார்கள். ஆசிரியர் பணியிட மாறுதல் போன்றவைகூட நேரடியாக அமைச்சரின் பி.ஏ.க்கள் தலையிடுகிறார்கள். இதனால் எம்.எல்.ஏ.க்கள் மிகவும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்பு தினகரனுக்குச் சாதகமாக வந்தால், சசிகலா பக்கம் அணி தாவலாம். கூவத்தூர் மாதிரி நிகழ்வுகள் நடக்கும். அதன் விளைவாக அப்பொழுது சசிகலா கொடுத்தது மாதிரி கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்பதுதான் எம்.எல்.ஏ.க்களின் எதிர்பார்ப்பு. எம்.எல்.ஏ.க்களின் இந்த எதிர்பார்ப்பை அறிந்துதான் எடப்பாடி "தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை பாயும்' என மிரட்டல் விடுத்து வருகிறார் என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரத்தினர்.

""இந்த வழக்கில் தீர்ப்பு சாதகமானால் சசிகலா, பரப்பன அக்ரஹாரா சிறையை விட்டு பரோலில் வருவார். அதற்காகவே டிசம்பர் மாதம் மகாதேவன் மறைவின் ஓராண்டு நினைவு நிகழ்ச்சியை மன்னார்குடி சொந்தபந்தங்கள் நடத்த திட்டமிட்டு தயாராக வைத்துள்ளன'' என்கிறது மன்னார்குடி தரப்பு.

இந்நிலையில், எடப்பாடிக்கு கட்சிக்குள் ஏகப்பட்ட எதிர்ப்புகள் சமீபகாலமாக முளைத்திருக்கின்றன. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள 4 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி, ஒரு கூட்டத்தைக் கூட்டினார். ஓ.பி.எஸ்., வேலுமணி, koovathurதங்கமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், காமராஜ் ஆகிய அமைச்சர்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் செல்வாக்கு மிக்க அமைச்சரான வேலுமணியும், 32 எம்.எல்.ஏ.க்களை வசப்படுத்தியுள்ள விஜயபாஸ்கரும் எடப்பாடியுடன் கடுமையாக மோதினர் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம். எனினும் எடப்பாடி தனிப்பட்ட முறையில் மிகவும் தெம்பாகவே இருக்கிறார்.

""தீர்ப்பு எப்படி வந்தாலும் முதல்வர் பதவியிலிருந்து நான் மாறமாட்டேன். முதல்வர் பதவியில் நான் நீடிக்க "மத்திய அரசு ஆதரவு தரும்' என வெங்கய்யா நாயுடு உறுதி அளித்துவிட்டார் என்கிறாராம். அதனால் தீர்ப்பு தினகரன் தரப்புக்கு சாதகமாக வந்தால் அப்பீலுக்கு செல்வோம், ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்கிறார் எடப்பாடி'' எனச் சொல்லும் அ.தி.மு.க.வினருக்கு மன்னார்குடி வட்டாரம் ஒரு வெடிகுண்டைப் போடுகிறது.

""ஒருவேளை தீர்ப்பு எங்களுக்கு எதிராக... "சபாநாயகர் உத்தரவு செல்லும்' என வந்து நாங்கள் அப்பீல் செய்தால் அது எடப்பாடிக்கு சாதகமாகும், அதனால் நாங்கள் அப்பீல் செய்யமாட்டோம். 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலைச் சந்திப்போம். அந்த தேர்தல்களில் எடப்பாடி தரப்பு தோற்கும். ஆட்சி கவிழ்ந்துவிடும்'' என ஒரு தந்திரத்தை மன்னார்குடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

""இது மிரட்டல்தான். தினகரன் தரப்பு அப்பீல் செய்தால்தான் குறைந்தபட்சம் இறுதித் தீர்ப்பு வரும்வரை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தில் இருப்பார்கள். இப்பொழுது எந்தப் பலனும் இல்லாத அவர்கள், எம்.எல்.ஏ. என்கிற அந்தஸ்தை இறுதித் தீர்ப்பு வரும்வரை இழக்க சம்மதிக்கமாட்டார்கள்'' என்கிறார்கள் 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்தே!

டிக்... டிக்... என நொடி முள் நகர, திக்... திக்... என லப்டப்பை எகிற வைக்கிறது தீர்ப்பு நாள்.

-தாமோதரன் பிரகாஷ்

படங்கள் : ஸ்டாலின், அசோக்

nkn091018
இதையும் படியுங்கள்
Subscribe