Advertisment

இமாலய வெற்றியும், இமாச்சல சறுக்கலும்!

dd

டந்துமுடிந்த குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலத் தேர்தல்களின் முடிவுகள், பா.ஜ.க., காங்கிரஸ் என இரண்டு தேசியக் கட்சிகளுக்குமே மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் ஒருசேரக் கொடுத்துள்ளன. குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை, பிரதமர் மோடியின் மாநிலம் என்பதால் பா.ஜ.க.வின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டது தான். எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை வரலாற்றுச்சாதனை வெற்றியாக மாற்றியிருப்பதற்கு பல்வேறு காரணங்களைப் பட்டியலிடலாம்.

Advertisment

dd

2002ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தால் 2000 பேர்வரை கொல்லப்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த காங்கிரஸ் தலைவர் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா, அப்போதைய குஜராத் முதல்வரான மோடி உள்ளிட்ட 64 பேர் மீது தொடுத்த வழக்கில், அதை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூன் 24ஆம் தேதி, பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, அனைவரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பினைத் தங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டது. அதேபோல், குஜராத் கலவரத்தின் போது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்க

டந்துமுடிந்த குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலத் தேர்தல்களின் முடிவுகள், பா.ஜ.க., காங்கிரஸ் என இரண்டு தேசியக் கட்சிகளுக்குமே மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் ஒருசேரக் கொடுத்துள்ளன. குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை, பிரதமர் மோடியின் மாநிலம் என்பதால் பா.ஜ.க.வின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டது தான். எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை வரலாற்றுச்சாதனை வெற்றியாக மாற்றியிருப்பதற்கு பல்வேறு காரணங்களைப் பட்டியலிடலாம்.

Advertisment

dd

2002ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தால் 2000 பேர்வரை கொல்லப்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த காங்கிரஸ் தலைவர் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா, அப்போதைய குஜராத் முதல்வரான மோடி உள்ளிட்ட 64 பேர் மீது தொடுத்த வழக்கில், அதை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூன் 24ஆம் தேதி, பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, அனைவரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பினைத் தங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டது. அதேபோல், குஜராத் கலவரத்தின் போது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பில்கிஸ் பானோ வழக்கில் குற்ற வாளிகளென உறுதிசெய்யப்பட்டு 15 ஆண்டு களாகத் தண்டனை அனுபவித்துவந்த 11 பேரை யும் கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது குஜராத் அரசு. இதன்மூலம், இந்துக்களுக்குச் சார்பான அரசாகக் காட்டிக் கொண்டது.

அடுத்ததாக, தமிழ்நாட்டின் இலவசத் திட்டங்களைக் கிண்டலடித்துவந்த பா.ஜ.க.வோ, மோடியில் குஜராத்தில் பல்வேறு இலவச அறிவிப்புகளுடன் தேர்தல் களத்தில் இறங்கியது! முதிய பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டம், பெண்களுக்கு இலவசக் கல்வி, இலவச மின்சார ஸ்கூட்டர், இலவச சைக்கிள்கள், கர்ப்பிணி பெண்களுக்கு மாதாந்திர இலவச ஊட்டச்சத்துத் திட்டம் என்றெல்லாம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை காப்பியடித்து... 27 ஆண்டுகாலமாக குஜராத்தை ஆண்ட போதும், தங்கள் ஆட்சியின் சாதனை களைச் சொல்வதைவிட்டுவிட்டு, வழக்கம்போல் மதவெறி அரசியல், பாகிஸ்தான் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, ராணுவத்தைப் பெருமைப் படுத்துவது, தாயிடம் ஆசி பெறுவது போன்ற அரசியலையே மோடி கையிலெடுத்தார்.

அதேபோல், குஜராத் தேர்தலுக்கான அறிவிப்பு வருமுன்பே, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா தலைமையில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய அமைச்சர்கள் ஸ்மிர்தி ரானி, தர்மேந்திர பிரதான், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 40 பேர் கொண்ட பெரும் படையை இறக்கிவிட்டு, பேரணிகள், பொதுக்கூட் டங்கள், வீடுவீடாகச் சென்று ddவாக்குச்சேகரிப்பு எனப் பம்பரமாகச் செயல்பட்டது. பா.ஜ.க. பிரச்சாரக்களத்தில் சுழன்று கொண்டிருந்தபோது, காங்கிரஸ் கட்சியோ, தங்க ளுக்கான அகில இந்தியத் தலைவர் யாரென்ற உட்கட்சித் தேர்தலில் பரபரப் பாகியிருந்தது. ராகுல் காந்தியோ பாரத ஒற்றுமை யாத்திரையில் கவனம் செலுத்தினார். குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் யாரென்று கூட காட்டப்படவில்லை. ஆக, காங்கிரஸை ஆதரிக்க நினைத்தவர்கள்கூட வேறு கட்சியை எதிர்பார்க்கத் தொடங்கியபோது, ஆம் ஆத்மி அந்த இடத்தில் வந்து நின்றது.

ஆம் ஆத்மி, இந்துத்துவா கொள்கையின் மூலம், பா.ஜ.க.வுக்கும் மாற்றாகத் தன்னை அடை யாளப்படுத்தியது. பா.ஜ.க., வழக்கம்போல் ஆம் ஆத்மியின் தலைவர்களான மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர்மீது ஊழல் குற்றச் சாட்டுகள் கூறி வழக்குகள் போட்டது. அவர்களை வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டுமானால், ஆம் ஆத்மி குஜராத் தேர்தலில் போட்டியிடக்கூடா தென்று தன்னிடம் பேரம் பேச முயன்றதாக பா.ஜ.க. மீது கெஜ்ரிவால் குற்றம் சுமத்தினார். குஜராத்தில் ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க.வுக்கும்தான் போட்டி என்பதான தோற்றம் உருவாகுமளவிற்கு தீவிரமான பிரச்சாரத்தில் கெஜ்ரிவால் ஈடுபட்டார்.

திட்டமிட்டபடி ஆள் பலம், அதிகார பலத்துடன் குஜராத் தேர்தலைச் சந்தித்த மோடியின் படையினர், எதிர்பார்த்ததைவிட 156 இடங்கள் என்ற இமாலய வெற்றியைப் பெற்று, ஏழாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியோ வெறும் 17 இடங்களுடன் படுதோல்வியைத் தழுவியுள்ளது. ஆம் ஆத்மி முதன்முறையாக 5 தொகுதிகளில் வென்று குஜராத் சட்டசபைக்குள் அடியெடுத்து வைக்கிறது. தேசிய கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இன்னொரு பக்கம், இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. தனது ஆட்சியை காங்கிரஸ் வசம் பறிகொடுத்துள்ளது. இங்கே காங்கிரஸ் 40 தொகுதிகளிலும், பா.ஜ.க. 25 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இமாச்சல பிரதேசத்தைப் பொருத்தவரை, ஒரு முறை காங்கிரஸ் வென்றால், மறுமுறை பா.ஜ.க. வெல்வதாகத் தொடர்கிறது. அதே வரிசையில்தான் இம்முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியும்கூட வாக்கு சதவீதத் தைப் பொறுத்தவரை, வெறும் 0.9% வாக்கு வித்தியாசத்தால் கிடைத்த வெற்றியாகும். என வேதான் இந்த தேர்தல் முடிவு கடைசிவரை இழுபறியாகவே இருந்தது.

குஜராத்தில் மக்களின் ஆதரவைப் பார்த்து மிகுந்த உணர்ச்சிவசப் பட்டுள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, இரு மாநில மக்களின் சக்திக்கு தலைவணங்குவதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, இமாச்சல் பிர தேசத்தில் கிடைத்த பிரமாண்ட வெற்றிக்கு நன்றி தெரிவித்ததோடு, "குஜராத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, குஜராத் மக்களின் உரிமைகளுக் காகப் போராடுவோம்'' என்றார். "பா.ஜ.க. கோட்டை யில் இம்முறை வென்றுள்ள நாங்கள், அடுத்த முறை ஆட்சியைப் பிடிப்போம்'' என்றார் கெஜ்ரிவால்.

இந்த தேர்தல் முடிவுகளால், பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ் மட்டுமல்ல, ஆம் ஆத்மியும் தான் என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வா? ஆம் ஆத்மியா? என்ற போட்டி உருவாவது உறுதி. காங் கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அக்கட்சியின் வாழ்வும், தாழ்வும் அவர்களின் கைகளில் தான்!

nkn141222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe