காவலர்கள் தாக்குதலால் கொலையுண்ட அஜித்குமாரின் அம்மாவிடமும், தம்பியிடம், "தவறுதான், வருந்துகிறேன்... வேதனையடைகிறேன்'' எனத் துயரத்தை ஆற்றுப்படுத்திய அதே வேளையில், "கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின்போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்த முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்கமுடியாத செயல். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு உத்தர விட்டுள்ளேன்.
சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்து ழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்'' என்றிருக்கின்றார் முதலமைச்சர் ஸ்டாலின். சம்பவத்தினை மூடி மறைக்காமல், யாரையும் காப்பாற்ற நினைக்காமல் மக்களுக்காகத் தான் இந்த அரசு என ஆணித்தரமாக அறைந்திருக் கின்றார் முதல்வர்.
நகையை திருட்டுக் கொடுத்ததாக திருமங்கலத்தை சேர்ந்த மருத்துவர் நிகிதா திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே இரண்டு சங்கிலிப்பறிப்பு நடந்துள்ளது என்பதாலும், செய்தி மோகத்தாலும், தானாகவே இயங்கியது மானாமதுரை டி.எஸ்.பி.யின் ஆறு நபர்கள் அடங்கிய தனிப்படை. இதில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை சந்தேகித்து மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் மரணமடைந்தார். அஜித்குமாரின் கொலையில் எதிர்க்கட்சிகள் அறிக்கைகளை விட்டு அரசை நிலைகுலையச் செய்தனர்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமையன்று திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் வெங்கடேச பிரசாத் முன்னிலையில் மதுர

இதனிடையே ஞாயிற்றுக்கிழமையன்று திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் வெங்கடேச பிரசாத் முன்னிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடந்தது. முன்னதாக, அஜித் குமார் உடலில் அடையாளம் காணப்பட்ட காயங்கள் மட்டும் 18 என்று தகவல் தெரிந்த மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வழக்கில், "காவல்நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்றவேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டன. இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது'' என்றது சிவகங்கை மாவட்ட காவல்துறை.
இது இப்படியிருக்க, ஞாயிற்றுக் கிழமை இரவில் வெளியான அஜித்குமார் இறப்பு குறித்த முதல் தகவலறிக்கையோ, "மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, மடப்புரம் கோவிலில் சாமி கும்பிட வந்த நிகிதா என்பவரின் சிகப்பு கலர் காரை பார்க்கிங் பண்ணுவதாக சாவியை வாங்கி மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார், காரிலுள்ள 9.5 பவுன் நகை மற்றும் பணம் 2,500-ஐ எடுத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டதை விசாரிக்குமாறு உத்தரவிட்டதன் பேரில், அஜித்குமாரை போலீசார் விசாரித்ததில் நகைத் திருட்டை ஒப்புக்கொண்ட அஜித்குமார், மடப்புரம் கோவில் அலுவலகம் பின்புறமுள்ள மாட்டுக்கொட்டகையில் ஒளித்து வைத்திருப்பதாகக் கூறியதால், அங்கு சென்று நகைகளைத் தேடிய போது போலீஸாரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் ஓடியதில் கால் இடறி கீழே விழுந்தவரை மீண்டும் பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு வலிப்பு வந்துவிட்டது எனவும், வலிப்பு வந்ததாலேயே அஜித்குமார் இறந்திருக்கலாம்' என்றது அறிக்கை.
அஜித்குமாரின் கொலை விவகாரம் நாடெங்கும் விஸ்வரூபமெடுத்த நிலையில், வழக்கு பி.என்.எஸ். 103 (1) பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து, தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேரையும் கைது செய்தது. 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டார். இதே வேளையில், அஜித்குமார் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற உத்தரவிடப்பட்ட நிலையில், மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப் பட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகளான எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வோ, "நகைத் திருட்டு சம்பந்தமாக அஜித்குமாரை ஏன் போலீசார் வெளியே வைத்து விசாரணை நடத்தினர்? அஜித்குமாரை காவல் நிலையத்தில் வைத்து ஏன் விசாரணை செய்யவில்லை? இந்த வழக்கில் 5 போலீசார் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமார் மரண சம்பவத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை உடனே சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டாமா? நகைகள் எப்போது திருட்டு போனது? நகைத் திருட்டு வழக்கு எப்போது பதிவானது? காவல் துறையிலுள்ள அனைவர் மீதும் நாங்கள் குற்றம்சாட்டவில்லை. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்பதற்காகவா காவல்துறை இருக்கிறது? ஏன் இந்த வழக்கில் முழு உண்மையையும் காவல்துறை சொல்ல மறுக்கிறது?'' என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதே வேளையில், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் கோசாலையில், அஜித்குமாரை தனிப்படையினர் கம்பால் தாக்கிய வீடியோ வெளியாகி காவல் துறையை நிலைகுலைய வைத்தது.
பிரச்சனைக்கு யார் காரணம்? யார் இந்த தனிப்படை டீமிற்கு உத்தர விட்டது? என்கின்ற கேள்வி எழுந்த நிலையில், "மாவட்ட எஸ்.பி.யை பொறுத்தவரை நேர்மையாளர். அவருக்கே தெரியாமல் இந்த வேலையை செய்து தமிழ்நாடு அரசை தர்மசங்கடத்தில் சிக்க வைத்துள்ளனர் போலீஸார் சிலர். திடீரென மானாமதுரை டி.எஸ்.பி.யின் தனிப்படை டீமினர் கட்டிய லுங்கியுடன் பச63 ஏ 0491 பதிவெண் கொண்ட டெம்போவில் அஜித் குமார் மற்றும் சிலரை ஏன் அவசரம் அவசரமாக வலையனேந்தல் கண்மாய்க்கு அள்ளிக் கொண்டு செல்ல வேண்டும்? அவர்களுக்கு உத்தரவிட்டது யார்? மொழிப்பிரச்சனை அவருக்கு இருக்கின்றது என எஸ்.பி.க்கும் தகவல் தெரிவிக்காமல் மானாமதுரை சப்டிவிஷன் போலீ ஸாரை இயக்கியது எஸ்.பி. தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாளே! இவர் தான் இந்த பிரச்ச னைக்கு முன்பு வரை மாவட்டத்தில் ஆக்டிங் எஸ்.பி.யாக இருந்திருக் கின்றார்.
சி.பி.ஐ. விசாரணை யில் அவருடைய குழு சிக்குவது நிச்சயம். அதற்கான ஆதாரமும் இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை மானா மதுரை டி.எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் மற்றும் புகார்தாரர் நிகிதா ஆகியோரை கைது செய்து விசாரித்தாலே பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வரும்'' என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம்.
அனைத்துப் பக்கங்களிலும் தமிழ்நாடு அரசிற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்த நிலையில், பொறுமைகாத்து மிகக்கவனமாக பிரச்சனையை கையாண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர் பெரியகருப்பன், உள்ளூர் எம்.எல்.ஏ. தமிழரசி ஆகியோரை அஜித் குமாரின் வீட்டிற்கு சென்று தங்களுடைய வருத்தங்களைப் பதிவுசெய்துகொண்ட நிலையில், யாரும் எதிர்பாராவிதமாக, "அம்மா, முதலமைச்சர் பேசுகிறார்'' என அஜித்குமாரின் அம்மாவிடம் போனை கொடுத்தார் அமைச்சர். "நடந்ததற்கு நான் வருந்துகின்றேன். வேதனையடைகின்றேன். உங்களுடன் இந்த அரசு இருக்கும்'' எனப் பரிவாக ஆறுதல் கூறிய முதல்வர், அடுத்ததாக தம்பி நவீனிடம் தன்னுடைய ஆறுதலை தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அஜித்குமாரின் தம்பி நவீனோ, "நான் ஐ.டி.ஐ. படித்துள்ளேன். எனக்கு அதற்கேற்ற வேலை வேண்டும் என்று கூறினேன், கண்டிப்பாக நான் செய்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்கு கொடுத்துள்ளார். மேலும் நடந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறதாகவும் தெரிவித்துள்ளார். அதுபோக எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்றும் கூறியுள்ளார்'' என்றார் அவர்.
தொடர்ந்து, "திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்'' என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி மற்றும் வீட்டுமனைப் பட்டாவை அமைச்சர் பெரியகருப்பன் அஜித்குமாரின் குடும்பத் தினரிடம் நேரில் வழங்கினார்.
அஜித்குமார் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே அனை வரின் விருப்பம்.