டந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னடத் திரையுலகில் போதைப் பொருள் விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், நடிகை ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தொழிலதிபர் பரத் மற்றும் நடிகையும் மாடலுமான சோனியா அகர்வால் வீட்டில் அண்மையில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

SONIAAGARWAL

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் வெளியான செய்தியில், கன்னட நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்திற்கு பதிலாக, "7ஜி ரெயின்போ காலனி', "புதுப்பேட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படங்கள் பகிரப்பட்டு... இந்தச் செய்தி வெளியாகி திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் நடிகை சோனியா அகர்வாலை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். இந்த நிலையில், முறையாக விசாரிக்காமல் இது குறித்து செய்தி வெளியிட்டவர்களை நடிகை சோனியா அகர்வால் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தொடர்ச்சியாக வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் எனக்கும் என் குடும்பத்திற்கும் அதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் உண்மையை அறியாமல் செய்தி வெளியிட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது, நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான "23-ஆம் புலிகேசி' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தன்னுடைய "எஸ்' பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். "23-ஆம் புலிகேசி' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற் பைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்த படக்குழு, கடந்த 2017-ஆம் ஆண்டு அதற்கான பணி களைத் தொடங் கியது. இரண்டாம் பாகத்திற்கு "24-ஆம் புலிகேசி' என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்த படக்குழு, சென்னைக்கு அருகில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பைத் தொடங் கியது. படப்பிடிப்பு தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே படத்தின் நாயகன் வடிவேலுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட் டது. இதையடுத்து, ஒதுக்கிய தேதி யில், படப்பிடிப்பில் கலந்துகொள்ளா மல் வடிவேலு காலம் தாழ்த்தினார். இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷங்கர், தமிழ்த் திரைப்பட தயாரிப் பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த போதிலும், இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு எட்டப்படாமல் இருந்தது.

Advertisment

VV

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவ்விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், வடி வேலுக்கு விதிக்கப்பட்ட தடையானது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், 24ஆம் புலிகேசி திரைப்பட சர்ச்சை முடிவுக்கு வந்தது குறித்தும், மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பது குறித் தும் பேசிய வடிவேலு, "நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி. லைகா நிறுவனம் தயா ரிப்பில் 5 படங்களில் நடிக்கவுள்ளேன். இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது. எனக்கு நல்ல நேரம் பிறந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார். மேலும், திரையில் தோன்றி மீண்டும் நடிக்க இருப்பது, முதன்முதலில் நடிக்க வாய்ப்பு தேடியபோது இருந்த உணர்வைத் தருவதாகக் கூறினார்.

Advertisment

"36 வயதினிலே' படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நடிகை ஜோதிகா, அதன் பின்னர் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த "மகளிர் மட்டும்', "ராட்சசி', "ஜாக்பாட்', "பொன்மகள் வந்தாள்', "காற்றின் மொழி' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து தற்போது இவர் சசிகுமாருடன் ‘"உடன்பிறப்பே'’ படத்தில் நடித்துள்ளார்.

JJ

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ள நிலையில்... இதுவரை எந்த சமூக வலைத்தளங்களிலும் கணக்கு தொடங்காமலிருந்த நடிகை ஜோதிகா, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சமூக ஊடகத்தில் முதல் முறையாக இணைந்துள்ளேன். ஊரடங்கில் கழித்த நாட்களில் இருந்து நிறைய நல்ல விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்'' எனக்கூறி கையில் தேசியக்கொடியை ஏந்திய புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். நடிகை ஜோதிகாவின் சமூக வலைத்தள என்ட்ரிக்கு கணவர் சூர்யா மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

-இரா.சிவா