கவுன்சிலர்களால் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவதால் பணபலம் உள்ளவர்கள் மட்டுமே கோவை மேயர் தேர்தல் ரேஸில் வரிந்துகட்டு கிறார்கள். கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் விருப்ப மனுக்களை ஆளுந் தரப்பின் மாவட்ட அமைப் பாளர்கள் பெற்றுக் கொண்டி ருந்த நிலையில்... "நான்தான் கோவை மாநகராட்சியின் மேயர்...'' என எல்லா கட்சிக் குள்ளும் இருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் ஆணா, பெண்ணா? என அறிவிக்கப்படாத நிலையிலும்.... தி.மு.க.வில் பெண் வேட்பாளர்கள் குஷியாக இருக்கின்றனர்.
"கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சண்முகசுந்தரம் மனைவி அமிர்தவள்ளி ரேஸில் நிற்கிறார். அதே போல கோவை வடக்கு தொகுதியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட மீனா லோகுவும் கோவை மாநகராட்சியின் மேயர் ரேஸில் இருக்கிறார்.
கட்சிக்குள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் வந்த மீனா ஜெயக்குமாரும் "நான்தான் மேயர்' எனச் சொல்கிறார்' என்கிற உடன்பிறப்புகள்... "வெயிட்டான வட மாவட்ட அமைச்சர்தான் மீனா ஜெயக்குமாருக்கு சப்போர்ட்' என்கிறார்கள்.
இவர்களில் எல்லாவற்றுக்கும் மேலாக இருபது வருடங்களாக கட்சிப் பணியில் உள்ள கோவை மாநகர் மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் மாலதியும் மேயர் வேட்பாளர் எனச் சொல்லுகிறார்.
முன்னாள், இந்நாள்... என அனைத்து மாவட்ட செயலாளர் களிடமும் மகளிரணி செயலாள ராக பணியாற்றிய அனுபவம்மிக்க மாலதி, பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் பணக் களத்தில் நிற்கும் திறமை கொண்டவராகவும் இருக்கிறார்.
ஆண் மேயருக்கு வாய்ப்பிருந் தால் கோவை மாநகராட்சி யின் முன்னாள் துணை மேயரும் சிங்காநல்லூர் தொகுதியின் எக்ஸ் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த் திக் "நான்தான் மேயர்' என்கிறார். அதேபோல மாநில மருத்துவ அணி செயலாளரும், ஸ்டாலினின் குட்புக்கில் இருப்பவருமான டாக்டர் கோகுலும் நம்பிக்கையாய் சொல்லுகிறார்.
இப்போது கோவையின் 10 சட்டமன்றத் தொகுதியிலும் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதால், மேயர் வேட்பாளராக கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரும், பொருளாதாரத்தில் மேம்பட்டு இருப்பவரையுமே மேயர் வேட்பாளராக நிறுத்த தி.மு.க. தலைமை விரும்புகிறது. அந்த மேயர் வேட்பாளர் மூலம் 4 சட்டமன்றத் தொகுதி களை கவர் செய்துவிடலாம் என தி.மு.க. தலைமை கணக்கிடுவதால், புறநகர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் மருதமலை சேனாதிபதி எதிர்பார்ப்போடு இருக்கிறார் என்கிறார்கள் உடன்பிறப்புகள். முன்னாள் மேயராக இருந்த அ.தி.மு.க. வின் பி.ஆர்.ஜி.அருண் குமார் தி.மு.க.வுக்கு வந்து விட்டதால், அவரும் மேயர் என்கிறார் அசராமல்.
தி.மு.க. விருப்ப மனு பெற்றுக்கொண்டிருப்பது போல அ.தி.மு.க.விலும் இதய தெய்வ மாளிகையில் விருப்ப மனுக்களை பெற்ற னர். ஆண் களுக்கு மேயர் வாய்ப்பு என் றால், எல்லோ ரின் விரல்களும் ஒருவரை நோக் கியே நீள் கிறது. அது முன்னாள் மினிஸ் டரும், முன்னாள் மேயரு மான செ.ம.வேலுச் சாமிதான். கட்சியின் நீண்டகால விசுவாசி என் கிற பெயரோடு அவர் இருப்பதால் எல்லோரின் சாய்ஸாக இருக்கிறார்.
பெண் மேயராக இருந்தால் கேள்வியே வேண்டாம்... எக்ஸ் மினிஸ்டர் வேலுமணியின் வலது கை எனச் சொல்லப்படும் வடவள்ளி சந்திரசேகரின் மனைவி டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர்தான் அ.தி.மு.க.வின் மேயர் வேட் பாளராக இருப்பார். இருந்தாலும் பீளமேடு எக்ஸ் கவுன்சிலர் செந்திலின் மனைவி கிருபாகினியும் ஒரு தைரியத்தில் "நான்தான் மேயர் வேட்பாளர்' என்கிறார் .
அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பி.ஜே.பி.யும் கோவை மாநகருக்குள் பெரும் செல்வாக்கு உள்ளதெனச் சொல்லிக்கொண்டு, மேயர் சீட் வேண்டும் எனக் கேட்கிறது. மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமியும், மாநில செயற்குழு உறுப் பினரான மைதிலியும் தலைமையிடம் நெருக்கம் பாராட்டு கிறார்கள். இவர்களைப் போலவே மாநில பொறுப்பிலிருக்கும் கீதா, ஜெயலட்சுமி ஆகியோரும் மேயர் கனவில் ஜொலிக்கிறார்கள்.
ஆண் மேயர் என்றால் மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாஜி தலைவர் செல்வகுமார் ஆகியோரும் மேயர் சீட்டுக்காக கமலாலயத்திற்கு நடையாய் நடக்கின்றனர். அதேபோல, நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசும், மேயர் சான்ஸ் கேட்கிறது.
பெண் மேயராக இருந்தால் எக்ஸ் கவுன்சிலர் ஷோபனா செல்வம் பெயர் அடிபடுகிறது. ஆண் என்றால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நின்று தோல்வியுற்ற மயூரா ஜெயக் குமார் கேட்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
மொத்தத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வுமே கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் முனைப்பு காட்டி கோவையை கலகலத்துப் போகவைக்க, பலம் காட்ட நிற்கின்றன... வெற்றி காண்பதற்கு!