"கவனிப்பதற்கு யாருமின்றி, வறுமைக்கோட்டில் உள்ள 65 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் முதியவர்களுக்கு தமிழக அரசு முதியோர் உதவித்தொகை அளிக்கும்'' என்று மறைந்த முதல்வர் கலைஞர், 2007-ம் ஆண்டு நக்கீரன் செய்தியின் அடிப்படையில் உத்தர விட்டார். அத்திட்டத்தின்படி முதியோர் உதவித்தொகை பெற்று வந்த பெரியவர் கோவிந்தன், இறந்துவிட்டதாக வருவாய்த்துறை ஊழியர்கள் தவறாகப் பதிந்ததால் நிறுத்தப்பட்ட உதவித்தொகைக் காகப் போராடிக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து நாம் விசாரித்தோம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகாவில் உள்ள முட்டுவாஞ்சேரி ஊரைச் சேர்ந்தவர் 72 வயது கோவிந்தன். பிள்ளைகள் ஆதரவில்லாததால் அரசு வழங்கிவரும் முதியோர் உதவித்தொகையான ஆயிரம் ரூபாயைக் கொண்டு தனது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு வருகிறார். அவருக்கான உதவித் தொகை, ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு வருவாய்த் துறையினரால் அனுப்பப்பட்டு, வங்கி ஏஜென்டுகள் மூலம் கைரேகை பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும். தற்போது அந்த உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட, திரும்பப் பெறுவதற் காகப் போராடிக்கொண்டிருக் கிறார்.
இதுகுறித்து வங்கியில் கோவிந்தன் விசாரித்தபோது, "நீங்கள் இறந்து போனதாகக் கூறி உங்களுக்கு அனுப்பப் பட்ட பணத்தை வருவாய்த் துறையினர் நிறுத்திவைத் துள்ளனர். எனவே, கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று நீங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்று வாங்கி வாருங்கள்'' என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ள னர். அதன்படி பெரியவர் கோவிந்தன், கிராம நிர்வாக அலுவல ரைத் தேடிப்பிடித்து அவ ரிடம் அதற்கான சான்றை வாங்கிவந்து வங்கியில் கொடுத்தார். அப்படியும் வங்கி ஊழியர்கள் ஒப்புக் கொள்ளாமல், "எங்களுக்கு இது போதாது, வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று, நீங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றை வட்டாட்சியரிடம் வாங்கிவந்தால்தான் பணம் தர முடியும்'' என்று திருப்பியனுப்பி னர். வட்டாட்சியர் ஆனந்த னிடம் அழைத்துச் சென்றார் நமது நண்பர். பெரியவரின் மனுவைப் பார்த்துப் பதறிப் போன வட்டாட்சியர், ஊழி யர்களை அழைத்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
"ஏன் இப்படியானது?'' என்று பெரியவரிடம் விசா ரித்தபோது, "எங்கள் ஊரைச் சேர்ந்த பேச்சிமுத்து என் பவரது மகன் கோவிந்தன் என்பவரும் முதியோர் உதவித்தொகை பெற்று வந் தார். அவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்ததால், அவ ருடைய உதவித்தொகையை ரத்து செய்வதற்குப் பதிலாக பச்சமுத்து மகன் கோவிந் தன் ஆகிய என்னுடைய உதவித்தொகையை வரு வாய்த்துறை அலுவலர்கள் தவறுதலாக நிறுத்திவிட் டார்கள். நான் நேரில் விசாரிக்கையில்தான் உண்மை தெரிந்தது. எனக்குரிய உதவித் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்துள்ளார். நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்'' என்றார்.