ட்டாசு ஆலை விபத்துகளில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் நிவாரணமாக அக்குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு ஆலை நிர்வாகத் தரப்பிலிருந்தும் ரூ.5 லட்சம் தரப்படுகிறது. விதிமீறலான பட்டாசு விபத்துகள் தொடர்ந்து நடப்பதும், உயிர்ப் பலிகளுக்கான நிவாரணத் தொகை அதிகரித்துக்கொண்டே போவதும், பட்டாசு ஆலைகளில் தொழிலாளர் களின் பாதுகாப்பினை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இதற்கெல்லாம் தீர்வுகாண முடியாத நிலையில், விதிமீறலான சில சம்பவங்கள் விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து நடக்கின்றன. 

Advertisment

கடந்த 21-ஆம் தேதி பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருளான சல்பர் 16 டன், தடையின்மைச் சான்று இல்லாமல் விதிமீறலாக கேரளாவிலிருந்து லாரி மூலம் கொண்டுவந்தபோது பிடிபட்டது. விருதுநகர் -சூலக்கரை காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து, கொள்முதல் செய்த சந்திரா கெமிக்கல் உரிமையாளர் சந்திரனையும், டிரைவர் கருப்பசாமியையும் கைது செய்து, 16 டன் சல்பரையும் பறிமுதல் செய்தனர். இதே போல், கடந்த ஜூன் 28-ஆம் தேதி, சிவகாசி,  ஸ்ரீராம் கெமிக்கல்ஸுக்காக கேரளாவிலிருந்து லாரி மூலம் கொண்டுவரப் பட்ட 400 கிலோ சல்பரை சிவகாசி கிழக்கு காவல்நிலையம் பறிமுதல் செய்தது. 

நாம் களமிறங்கினோம். பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தகவல்களைக் கொட்டினார்கள். கையெறி குண்டு போன்றவற் றைத் தயாரிக்கக்கூடிய சமூக விரோதச் செயல்களுக்கும் பயன்படும் கந்தகம் (நமகஎமத) விதிமீறலாக கேரளாவிலிருந்து சப்ளை செய்யப்படும் அபாயகரமான பின்னணியை விவரித்தனர்.   

“முதலில் சல்பர் குறித்து நாம் தெரிந்து கொள்ளவேண்டும். பயமுறுத்தும் எரிபொரு ளான சல்பரில் இருந்துதான் சில படிகளைக் கடந்து சல்பூரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. ஜெயிலர் திரைப்படத்தில்கூட  வில்லன் கேரக்டர், தனக்குத் துரோகம் செய்பவர்களை கந்தக அமிலத்தில் (நன்ப்ச்ன்ழ்ண்ஸ்ரீ ஆஸ்ரீண்க்) மூழ்கடித்து ஊறவைத்து உருத்தெரியாமல் கொடூரமாகக் கொலை செய்வதுபோல் காட்டியிருப்பார்கள். வெடிக்கும் தன்மை காரணமாக சல்பருக்கு கடுமையான பாதுகாப்பு மற்றும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் தேவை. சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு அபாயகரமான பொருளாகவே சல்பர் வகைப்படுத்தப்பட்டுள்ளது.  சல்பர் உரிமம்,  ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து விதிகளின் கீழ் வழங்கப்படுகிறது. 

Advertisment

salphur1

பட்டாசு உற்பத்தியின் மூலப்பொருள் களில் முக்கியமான ஒன்றாக சல்பர் உள்ளது. சல்பர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள், சல்பர் விநியோகம் செய்யும் கெமிக்கல் நிறுவனங் களிடமிருந்து சல்பர் கொள்முதல் செய்வதற்கு சில விதிமுறைகள் உண்டு. எந்தப் பட்டாசு ஆலைக்கு, விதிகளின்படி எவ்வளவு சல்பர்  தேவைப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட ரிஜிஸ்டரில் பதிவிட்டு,   வருவாய்த்துறையிடம் தடையின்மைச் சான்று பெற்ற பிறகே, கொள்முதல் செய்யமுடியும். இந்தப் பாதுகாப்பு விதிகளை எல்லாம் மீறி,  விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் "அக்ரி டஸ்டிங் பவுடர்' என்ற பெயரில் மோசடியாக பில் போடப்பட்டு,  அரைக்கப்பட்ட சல்பர் பொடி கேரளாவிலிருந்து  விருதுநகர் மற்றும் தூத்துக்குடி  மாவட்டங்களுக்கு சர்வசாதா ரணமாக லாரிகளில்  கொண்டு வரப்படுகிறது. 

தொடர்ந்து இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடக்கூடிய சல்பர் கெமிக்கல்ஸ் உள்ளிட்ட மூன்று கெமிக்கல் நிறுவனங்கள் கேரளாவில் இயங்கி வருகின்றன.  மோசடி பில் மூலம் இந்த நிறுவனங்களிடமிருந்து சல்பர் கொள்முதல் செய்யும் நிறுவனங் கள், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் உள்ளன. அதிக விலை கொடுத்து இந்நிறுவனங்களிட மிருந்து வாங்கப்படும் சல்பர் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா?

Advertisment

சட்டத்துக்குப் புறம்பாக கிணற்றுக்கு வெடி வைப்பவர் கள், கள்ளத்தனமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்கள், உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளை விதிமீறலாக குத்த கைக்கு எடுத்து நடத்துபவர்கள், பேராசை காரணமாக வரை யறுக்கப்பட்ட அளவைக் காட்டி லும் பல மடங்கு பட்டாசு உற்பத்தி செய்பவர்கள் எனப் பாதுகாப்பு விதிகளை மதிக் காதவர்களுக்கு, இந்த நிறு வனங்களிடமிருந்து சல்பர் தாராளமாகக் கிடைக்கிறது. எங்கெங்கோ சமூக விரோதச் செயல்களில் ஈடுபடு பவர்களும் இவர்களி டம் சல்பர் வாங்கிச் செல்வதும் நடக்கிறது. 

கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி, சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த பொன்னுபாண்டியனின் வீட்டில் கள்ளத்தனமாகப் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பலியாகி, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்கப்பட்டது. இது மனிதநேயச் செயல் என்றாலும், கள்ளத்தனமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பதையும், அங்கு வேலை பார்ப்பவர்களையும் ஊக்குவிக்கும் செயலாக அல்லவா இருக்கிறது என்று இன்னொரு கோணத்தில் விமர்சிக்கப்படுகிறது.  

கள்ளத்தனமாக நடத்தப்படும் இந்த சல்பர் வியாபாரத்தை வருவாய்த்துறையோ, காவல்துறை யோ கண்டுகொள்வதே இல்லை. ஆய்வு செய்து நடவடிக்கையும் எடுப்பதில்லை. அபாயகரமான சல்பர், தவறானவர்களின் கையில் கிடைப் பதும்,  வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்கள் பறிபோவதும் வாடிக்கை யாகிவிட்டது. மோசடியான சல்பர் வியாபாரத்தை தடுத்து நிறுத்தினாலே போதும்.  வெடி விபத்துகள் பெருமளவில் குறைந்துவிடும்.  

salphur2

கடந்த 21-ஆம் தேதி, 16 டன் சல்பரை ஏற்றிவந்த லாரியை தனிப்பிரிவு காவல்துறை யினர்தான் மடக்கிப் பிடித்துள்ளனர்.  உண்மையான சரக்கின் (சல்பர்) மதிப்பைக் காட்டிலும் குறைவாக பில் போடப்பட்டிருந்த நிலையில். ரூ.10 லட்சம் வரை பேரம் பேசி,  மூன்று அதிகாரிகள் பங்கு பிரித்துக்கொண்டார்களாம்.  இதுபோன்ற வழக்குகளில், ஆதாயம் கருதி நீக்குபோக்காகவே காவல்துறை நடந்துகொள்கிறது. வழக்கும் நடவடிக்கையும் ஒப்புக்குத்தான்''’என்றனர். 

சிறப்பாக சேவையாற்றுகிறார் என விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழ் பெற்றுள்ள தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஓவி ரெட்டியை நாம் தொடர்புகொண்டபோது, "சல்பர் லாரியைப் பிடித்துக் கொடுத்ததோடு தனிப்பிரிவு போலீசாரின் வேலை முடிந்துவிட்டது.  மற்றபடி எந்த பேரமும் நடக்கவில்லை; யாரும் பணம் வாங்கவும் இல்லை; பங்கு பிரிக்கவும் இல்லை. நான் கண்டிப்பாகவும் நேர்மையாகவும் செயல்படுவதால் என்னால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்த டீம் எனக்கு எதிராகச் செயல்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற அவதூறான பேச்சுக்கு நான் ஆளானால், இங்கிருந்து மாற்றலாகிப் போய்விட வேண்டியது தான்''’என்று சலித்துக்கொண்டார். 

சந்திரா கெமிக்கல் உரிமையாளர் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்த சூலக்கரை காவல்நிலைய ஆய்வாளரும் விசாரணை அதிகாரியுமான மாதவன், "இந்த வழக்கு விஷயமாகவோ, வேறு எதுவும் குறித்தோ,  என்னுடைய மேலதிகாரியின் அனுமதி இல்லாமல் நான் பேசக்கூடாது.  பேரம் நடந்தது குறித்து என்னிடம் கேட்கவேண்டாம். அது எனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம். நான் வழக்கு பதிவு செய்திருக்கிறேன் அவ்வளவு தான்...''’என்று முடித்துக்கொண்டார். 

பட்டாசு வெடி விபத்துகளின்போது சொல்லப்படும் காரணங்களின் உண்மைத்தன்மை பற்றியும்,  சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத்துறை யினரும் பட்டாசு விவகாரங்களில் அடைந்துவரும் அதீத ஆதாயங்கள் குறித்தும்,  ஆதி முதல் அந்தம் வரை தோண்டியெடுத்து கடுமையான நடவடிக் கைகளை இந்திய ஒன்றிய அரசும், தமிழக அரசும் எடுத்தால் மட்டுமே, பட்டாசுத் தொழிலாளர் களுக்கு  உயிர்ப் பாதுகாப்பு கிடைக்கும்.   

சட்டவிரோதமான சல்பர் புழக்கம் நாட்டின் பாதுகாப்புக்கே சவால்விடுமளவு அபாயகர  மானது!