கள்ளச்சாராயம் விற்பதில் ஏற்பட்ட நீண்டகால பகையும், போலீசாரின் அலட்சியமும் இளைஞர் கள் கொலையில் முடிந்துள்ளது.
மயிலாடுதுறை அருகிலுள்ள முட்டம் கிராமத்தில் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன்கள், தங்கதுரை, மூவேந்தன். முனுசாமியின் மருமகன் ராஜ்குமார். இவர் சமீபகாலமாக அந்தப் பகுதியில் காரைக்கால் சாராயத்தை வாங்கிவந்து குடியிருப்பு பகுதிகளில் விற்றுவந்துள்ளார். இது அருகிலுள்ள பெரம்பூர் காவல்துறையினருக்கும் தெரிந்தே நடந்ததாகக் கூறப்படுகிறது.
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கனிவண்ணன். கனிவண்ணனின் சகோதரர் கரிகாலன் வழக்கறிஞராக இருக்கிறார். அதே தெருவைச் சேர்ந்த இளைஞர் தினேஷ். இவரும் கனிவண்ண னுக்கு உறவுக்காரர்தான். அதே கிராமத்தில் ஹோல்சேல் வியாபாரியும் ஒருவர் இருந்தார். அவர் தற்போது சரக்கு கடத்துவதை நிறுத்திவிட்டு குடும்பத்தோடு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். சாராய வியாபாரியான ராஜ்குமார் குடும்பத்திற்கும், கனிவண் ணன் குடும்பத்திற்கும் சில ஆண்டுகளாக தொழில்மோதலும், குடும்பரீதியிலான சண்டைகளும் பலமுறை நடந்து காவல்நிலையம் வரை சென்றிருக்கிறது.
இந்தச்சூழலில் சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்றதாக கைதான ராஜ்குமார், 14-ஆம் தேதி ஜாமீனில் வெளியேவந்த நிலையில் ராஜ்குமாரின் மைத்துனரான மூவேந்தனும், அவரது சகோதரரான தங்கதுரையும், கனிவண்ணனின் உறவினரான தினேஷ் என்பவர்தான், தாங்கள் சாராயம் விற்பதைக் காட்டிக் கொடுத்ததாக தாக்கியுள்ளனர். அதைத் தடுக்கப்போன தினே ஷின் நண்பர்களான ஹரிஷுக் கும், ஹரிசக்திக்கும் கத்திக்குத்து விழுந்து பரிதாபமாக உயிரிழந் தனர்.
உயிரிழந்த ஹரிசக்தியும், ஹரீஷும் கல்லூரி மாணவர்கள் என்பதால் தமிழகம் முழுவதும் பரபரப்பானது. இதற்கிடையில் மாணவர்கள் உயிரிழந்த ஆத்திரத்தில் மக்கள், ராஜ்குமா ரின் வீட்டிற்கு தீவைத்ததோடு, தங்கதுரையின் வீட்டை அடித்துநொறுக்கினர். அங்கு விரைந்துவந்த போலீசார் இரட்டைப் படுகொலை குறித்து வழக்கு பதிவுசெய்து சாராய வியாபாரியான முனுசாமி, ராஜ்குமார், மூவேந்தன், தங்க துரை ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்ததோடு, அவரது குடும்பத்தினரையும் ரகசியக் காவலில் வைத்து விசாரித்துவருகின்றனர்.
இதுகுறித்து முட்டம் கிராமத்திற்கு சென்று சிலரிடம் விசாரித்தோம். "முனுசாமிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். முனுசாமியின் மகன்களான மூவேந்தனுக்கும், தங்கதுரைக்கு நெருக்கமானவர்களாக கனி வண்ணனும், அவரது நண்பர் களும் இருந்தாங்க. முனுசாமி யின் மகளை எதிர்வீட்டிலிருந்த ராஜ்குமார் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த சமயத்தில் ராஜ்குமார் குடும்பத்திற்கும் தங்கதுரை குடும்பத்திற்குமிடையே கலவரமே நடந்தது. அந்த சமயத்தில் தங்கதுரை, மூவேந்தன் குடும்பத்திற்கு உதவியாக கனிவண்ணனும் அவரது உறவினர்களும் இருந்தனர். காலப்போக்கில் ராஜ்குமாருக்கு குழந்தை பிறந்ததும், பகையை மறந்து மைத்துனரை சேர்த்துக்கொண்டனர். இதில் கனிவண்ணன் தரப்பு எரிச்சலடைந்தது.
பிப்ரவரி 13-ஆம் தேதி ராத்திரி மூவேந்தனுக்கும் தினேஷுக்கும் சண்டை வந்து தினேஷை அடிச்சுத் துவைச்சிட் டாங்க, அங்கிருந்த மக்கள்தான் சமாதானம் செய்து அனுப்பினாங்க. அந்த கோபத்தி லிருந்த தினேஷ் 16-ஆம் தேதி இரவு அவரோட சொந்தக்கார பசங்களான ஹரீஷ், சக்தி, அஜய் ஆகியோர் மூவேந்தனை அடிக்கநின்றனர். இதைக் கேள்விப்பட்ட அவனது அண்ணன் தங்கதுரையும், ராஜ் குமாரும், மூவேந்தனும் தினேஷிடம் தகராறு செய்து கத்தியால் தாக்க, அதனைத் தடுக்க வந்த ஹரீஷ், அஜய், சக்தியை கத்தியால் குத்திவிட்டனர். இறந்துபோன ஹரீஷ், ஹரிசக்தி, காயம்பட்ட அஜய் ஆகிய மூவருக் கும் தனிப்பட்ட எந்த முன்விரோதமும் இல்லை.
ஆனா முனுசாமி, கனிவண்ணன் தரப்புக்கு சாராயம் விற்பதில் துவங்கி, குடும்ப விவகாரம், கோயில் நிர்வாகிகள் நியமிக்கிறதுவரை பிரச்சனை இருக்கு. சம்பந்தப்பட்ட தினேஷும் காரைக்கால் பாட்டில் கடத்துவதாக பேசிக்கிறாங்க. அந்த போட்டியும் இந்த பிரச்சனைக்குரிய காரணங்களுள் ஒன்று''’என்கிறார்கள் ஆதங்கத்தோடு.
"இந்த கொலைக்கு காரணமே பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவள்ளி தான். அவர்மீது வழக்குப் பதிவு செய்து கைதுசெய்யவேண்டும்' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூறுகையில், "இந்த கொலை நடந்த அடுத்த நிமிடமே மூன்று தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை கைதுசெய்து விசாரித்து வருகிறோம், சாராய விற்பனையை தடுத்ததால்தான் இந்த கொலை நடந்ததா என்கிற கோணத்திலும், அவர்களுக்குள் இருந்த முன்பகை குறித்தும் விசாரணை நடத்திவருகிறோம். இந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் இருப்பின் அவர் களையும் கைதுசெய்து உரிய தண்டனை கிடைக்கச்செய்வோம். அதோடு போலீஸ் தரப்பில் தவறுநடந்திருந்தாலும் உரிய நடவடிக்கை உண்டு''’என்கிறார்.
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "2024 நவம்பர் 25 நக்கீரன் இதழில் வந்த "மீண்டும் கள்ளச்சாராயம்! பொங்கி எழும் பெண்கள்!'” என்கிற 3 பக்க கட்டு ரை மயிலாடுதுறை மாவட்டத்தை ஆட்டியெடுத்தது. அந்த செய்திக்கு பிறகு பல சாராய ரைடுகளும், குண்டாசும் போடப் பட்டது. அதேநேரம் தவறுக்கு துணைபோகும் காவல்துறையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கல. அதனால் மீண்டும் கள் ளச்சாராயம் துளிர்த்து கொலை யில் முடிந்துள்ளது. அதேபோல எஸ்.ஐ. அறிவழகன் தலைமையில் தனிப்படையில் ஒன்றான ரவுடி டீம் என்று இருக்கிறது. அந்த அறிவழகனிடம் எல்லா சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் லிங்க்ல இருக்கிறதா சொல்றாங்க. அவரைப் போன்றவர்கள் இருக் கும்வரை இந்த மாவட்டத்தில் குற்றம் குறைய வாய்ப்பேயில்லை. தமிழக முதல்வர் இந்த மாவட்டத் திலுள்ள காவல்துறை கூடாரத் தையே மாற்றியமைத்தால்தான் குற்றவாளிகளுக்கு பயம் வரும்''’ என்கிறார்.