வெளிநாடுகளிலிருந்து கடல் வழியே வரும் கேபிள் இணைப்பை நிலப்பகுதியில் இணைக்கும் வேலைக்கு பீச் மேன்ஹோல் எனப் பெயர். இந்த இணைப்பை கடற்கரையில் செய்வதால் அப்பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்கள் அழியும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று நம்மிடம் பேசிய தென்னிந்திய மீனவர் சங்க தலைவர் பாரதி, விரிவாக விளக்கினார்.

"ஆமைகள் தற்போது அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டு சர்வதேச அளவில் அதைப் பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, மயிலாப்பூரை அடுத்த பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியான பிளாக் எண்:101 & 102 பகுதியில், சட்டத்திற்கு புறம்பாக பீச் மேன்ஹோல் எனப்படும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வெளி நாட்டிலிருந்து கடல் வழியே வரும் கேபிள் ஒயர்களுக்காக கடற்கரை பகுதியில் பீச் மேன் ஹோல் அமைப்பதால் கடல்வாழ் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

dd

Advertisment

இப்பணி நடந்துவரும் இடமானது, பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதி. மத்திய சுற்றுச்சூழல் வனம், காலநிலைமாற்றம் துறை கடித எண்: எ.சர். 12-8-2018 -ஒஆ-ஒஒஒ உஹற்ங்க் : 24-10-2018 மூலம் அங்கீகரிக்கப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரை பட எண்: பச 109-ல் கடல் ஆமைகள் முட்டை யிடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக (ஈதழ-ஒஆ) காண்பிக் கப்பட்டுள்ளது.

கடல் ஆமைகள் முட்டை யிட்டு குஞ்சு பொறிக்கும் பருவம் என்பதால், சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பகுதியில் பீச் மேன்ஹோல் போன்ற பணிகள் கடற்கரை ஒழுங்கு முறை மண்டல அறிவிப்பாணை 2011-ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதால் நடந்துவரும் பீச் மேன்ஹோல் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தி, இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, இயக்குநர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், வன அலுவலர் ஆகியோருக்கு புகார் மனு (02.04.2022) அன்று அனுப்பினோம்,

அதன்பேரில் நிறுத்திவைக்கப்பட்ட பீச் மேன்ஹோல் அமைத்தல் மற்றும் பழுது பார்க்கும் பணி தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. கடற்கரையில் அமைக்கும் இந்த பீச் மேன்ஹோலை கரைக்கு சற்று அப்பால் நிலப்பகுதியில் அமைத் தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது. அப்படி அமைத்தால் தனியார் நிறுவனங்களுக்கு வாடகை, லீஸ் என செலவாகும் என்ற காரணத் தால் கடற்கரையில் அமைக்கின்றனர்''’என்றார் ஆவேசமாக. இதைப்பற்றி சம்பந்தப்பட்ட டிவிஷன் இஞ்ஜினீயர் உமயகுஞ்சராமிடம் பேசினோம். “"முறையான அனுமதியுடன்தான் நடக்குது. சைதா பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ளவர்களை அணுகவும்'' என்று தொடர்பைத் துண் டித்தார். துறைச் செயலாளர் சுப்ரியா சாஹூவை பல முறை தொடர்பு கொண்டும் அழைப்பை எடுக்கவில்லை.