டலூர் மாநகரிலுள்ள புதுப்பாளையம் சக்கரபாணி தெருவில் எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில், பெண்களுக்கு சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்துவந்ததாக பயிற்சி மையத்தின் உரிமையாளர் சிவகுரு நாதன், அவரது மனைவி செவி லியர் உமாமகேஸ்வரி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி கைதுசெய்து சிறையிலடைத் துள்ளனர்.

2020-ல் கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி பகுதியைச் சேர்ந்த டி.பார்ம் மட்டுமே படித்த முருகேசன், இந்திலி பகுதியில் ஆள் நடமாட்டமற்ற காட்டுக்கொட்டாய் பகுதியில் வீடெடுத்து தங்கி, பெண் களுக்கு கருக்கலைப்பு செய்துவந்த தகவல் மருத்துவ அலுவலர் பங்கஜத்துக்குத் தெரியவர, அவர் சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவலளித் தார். இதையடுத்து முருகேசன், நர்சு சத்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் முருகேசன் ஏற் கனவே சட்ட விரோத கருக் கலைப்பு செய்ததற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர்.

2023-ல் கச்சிமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன், ராமநத்தம் பகுதியில் மருந்துக்கடை வைத்து நடத்திவந்தார். பெரம்பலூர் மாவட்டம் மேலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனிதா தன் வயிற்றில் வளரும் குழந்தை பெண்ணாக இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் கருவைக் கலைப்பதற்காக முருக னிடம் வந்துள்ளார். அவருக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்ததில் அனிதாவுக்கு ரத்தப் போக்கு அதிகரித்து, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந் தார், முருகன் கைது செய்யப்பட்டார். 

Advertisment

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர்கள் முத்துமாரி, கவிதா ஆகி யோரிடம் கருக்கலைப்பு செய்து கொண்ட செல்வி, பெரியநாயகம், ஆகிய இரு பெண்கள் கருக்கலைப் பின்போது ரத்தப்போக்கு அதி கரித்து உயிரிழந்துள்ளனர். முத்து மாரி, கவிதா இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். 

அசகளத்தூர் பகுதியில் மருந்துக் கடை நடத்திவந்த வடிவேல் இதே போன்று பெண் களுக்கு சட்ட விரோத கருக் கலைப்பு செய்து வந்ததாக கைது செய்யப்பட்டார். இவரும் ஏற்கனவே இதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேப்பூரை அடுத்துள்ள கழுதூர் கிராமத்தில் அசகளத்தூரைச் சேர்ந்த மணிவண்ணன் மருந்துக்கடை நடத்திவந்தார். இவரது கடையில் உதவியாளராக கௌதமி என்ற பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துவந்துள்ளனர். வேப்பூர் அரசு மருத்துவர் அகிலன் தந்த தகவலின் பெயரில் போலீசார் மணிவண்ணன் மருந்தகத்திற்கு சென்று அங்கிருந்த சொகுசுக் காரை ஆய்வு செய்தபோது காரின் உள்ளே பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் கருவிகள் இருந்துள்ளன. ஒரு இடத்தில் வைத்து கருக்கலைப்பு செய்தால் காவல் துறையினர் கண்டறிந்து கைதுசெய்து விடுகிறார்கள் என்பதால் சொகுசுக் காரில் நடமாடும் கருக்கலைப்பு மையத்தை நடத்தி வந்துள்ளனர். இதுசம்பந்தமாக மணிவண்ணன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி தொடரும் சட்டவிரோத கருக்கலைப்பின் தொடர்ச்சி யாகத்தான் கடலூரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisment

கைது செய்யப்பட்டுள்ள கடலூர் சிவகுருநாதன், உமாமகேஸ்வரி தம்பதி, தாங்கள் நடத்திவந்த செவிலியர் பயிற்சிக் கல்லூரியையே சட்டவிரோத கருக்கலைப்பு மையமாகப் பயன்படுத்திவந்துள்ளனர். சிவகுருநாதன் -உமாமகேஸ்வரி தம்பதி, செவிலியர் கல்லூரியில் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெறும் தகவல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக் குமாருக்கு தெரியவர, அவர் இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் மாவட்ட நலப்பணிகள் இயக்குனர் மணிமேகலை தலைமையிலான மருத்துவக் குழுவினர், காவல்துறை டி.எஸ்.பி. ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தீபா ஆகியோர் சிவகுருநாதனின் செவிலியர் பயிற்சி மையத்தில் திடீர் சோதனை நடத்தி அவர்களையும், அவர்களோடு தொடர்புடையவர்களையும் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து மாவட்டக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், “"கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த சிவகுருநாதன் நடத்திவந்த நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்துவந்துள்ளனர். பி.எஸ்.சி. வேளாண்மை பட்டம் படித்துவிட்டு, டெல்லியில் சித்த மருத்துவம் படித்ததாக சான்றிதழ் பெற்றுள்ள சிவகுருநாதன், 2012-ஆம் ஆண்டு முதல் நர்சிங் பயிற்சி மையத்தை நடத்திவந்துள் ளார். இவரது மனைவி உமாமகேஸ்வரி நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு பழக்கமான மருந்து விற்பனை பிரதிநிதிகள் மூர்த்தி, வீரமணி, ஆகியோர் கருக் கலைப்புக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், உப கரணங்களை அவ்வப்போது வழங்கிவந்துள்ளனர். அரசு சுகாதார நிலைய தலைமை செவிலியர் அபியம்மாள், மருந்தாளுநர் தங்கம் ஆகியோரும் இவர்களுக்கு கருக்கலைப்புக்கு உதவிசெய்து வந்துள்ளனர்.

 இந்த மையத்திற்கு கள்ளக்காதலில் கருவுறும் பெண்கள் அதிக அளவில் வந்து கருக்கலைப்பு செய்து கொண்டதாகத் தெரியவரு கிறது. செவிலியர் மையத்தை சட்டத்திற்கு விரோதமாக கருக்கலைப்பு மையமாக நடத் தியதால் அந்த மையத்தை மூட மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே போல் வீரமணி என்பவர் விருத்தாசலத்தில் நடத்திவந்த பயிற்சிமையத்திலும் இதுபோன்ற கருக்கலைப்பு சம்பவங்கள் நடந்துள்ளனவா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' ’என்கிறார்.