த.மு.மு.க.வின் 31ஆம் ஆண்டு துவக்க நாள் விழா, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட த.மு.மு.க. சார்பில் தாம்பரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம், ரத்ததான முகாம், உணவு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் த.மு.மு.க. நிர்வாகக்குழு உறுப்பினர் அனிபா, த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் யாகூப் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டணிக் கட்சி களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தி.மு.க. தரப்பில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, வி.சி.க. சார்பில் சாமுவேல், திராவிடர் கழகத்தை சேர்ந்த முத்தையா உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில், தி.மு.க.வின் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தவிர்த்து, மற்ற அனைவரின் பெயர்களும் அழைப்பிதழில் அச்சிடப்பட்டி ருந்தது, எம்.எல்.ஏ. தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் கொதிப்படைந்த எஸ்.ஆர்.ராஜா, தி.மு.க.வினர் யாரும் அந்த நிகழ்ச்சியில்
த.மு.மு.க.வின் 31ஆம் ஆண்டு துவக்க நாள் விழா, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட த.மு.மு.க. சார்பில் தாம்பரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம், ரத்ததான முகாம், உணவு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் த.மு.மு.க. நிர்வாகக்குழு உறுப்பினர் அனிபா, த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் யாகூப் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டணிக் கட்சி களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தி.மு.க. தரப்பில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, வி.சி.க. சார்பில் சாமுவேல், திராவிடர் கழகத்தை சேர்ந்த முத்தையா உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்ட நிலையில், தி.மு.க.வின் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தவிர்த்து, மற்ற அனைவரின் பெயர்களும் அழைப்பிதழில் அச்சிடப்பட்டி ருந்தது, எம்.எல்.ஏ. தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் கொதிப்படைந்த எஸ்.ஆர்.ராஜா, தி.மு.க.வினர் யாரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். இந்த விவகாரம் காஞ்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சரு மான தா.மோ.அன்பரசனுக்கு தெரிவிக் கப்பட்டது. கூட்டணி தர்மத்தின்படி அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமென்று அமைச்சர் தரப்பிலிருந்து தெரிவிக்கவே, தாம்பரம் மேயர், துணைமேயர் உள்ளிட்ட கட்சியினர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இது, எம்.எல்.ஏ. தரப்பில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சனை தொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப்பிடம் பேசினோம். "தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அதில் சுமார் 25 சதவீத சிறு பான்மையினரின் வாக்குகள் அத்தொகுதியின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்றன.
கடந்த 25 ஆண்டுகளாக பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக தற்போதைய தாம்பரம் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா செயல்பட்டு வருகிறார். தாம்பரம் பஸ் நிலையம் மற்றும் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில் நடைபாதை வியாபாரிகளை அப்புறப் படுத்தியதால் சிறுபான்மையின மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இதனால் கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி, த.மு.மு.க., அ.தி.மு.க.வை ஆதரித்தன. அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சின்னையா 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அந்த தேர்தலில் எஸ்.ஆர்.ராஜா தோல்வியடைந்தார்.
2016, 2021 தேர்தலில் தி.மு.க.வுடன் மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. கூட்டணி அமைத்ததால் எஸ்.ஆர்.ராஜா 40,000 வாக்குகள் அதிகம் பெற்று சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவரோ, இந்துத்துவா அமைப்பினரின் பிள்ளையார் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களில் கலந்துகொள்வது சிறுபான்மை மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக இதுபோல் செய்துவருவதில் சிலவற்றை குறிப்பிடுகிறேன். தாம்பரம் மாநகராட்சி அருகே செஞ்சிலுவை சங்கத்தின் கட்டடம், தாம்பரத்தில் செயல்படும் சென்னை கிறிஸ்தவ கல்லூரிக்கு சமூக மேம்பாட்டுக் கல்லூரி நடத்திக்கொள்ள லீசுக்கு வழங்கப்பட்டது. அந்த லீஸ் முடிவடையவும், எம்.எல்.ஏ.வின் ஆதரவாளரான தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டல குழு தலைவர் இந்திரனின் ஆட்கள், சமூக மேம்பாட்டுக் கல்லூரிக்கு பூட்டு போட்டுவிட்டு, 5வது மண்டலக்குழு அலுவலகம் என்று போர்டு வைத்தனர். இதைப்பற்றி மாநகராட்சி கூட்டத்தில் நான் கேள்வியெழுப்பினேன். மேயர் வசந்தகுமாரி, அதைப்பற்றி தெரியாதெனக் கூறினார். இதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போராட்டம் நடத்திய அனைவர் மீதும் தடியடி நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது நீதிமன்றத்தில் இந்த இடம் தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.
அதேபோல தாம்பரம் கஸ்தூரிபாய் நகரில், தாம்பரம் ஜமாத்துக்கு சொந்தமான மதரஸா நடத்தப்படுகிறது. அதனருகே செல்வகுமார் என்பவர் தனக்கு சொந்தமான இடமெனக்கூறி பிள்ளையார் சிலையை வைத்தார். போராட்டம் நடத்தியபின்பே சிலையை அப்புறப்படுத்தினர்.
இந்த விவகாரத்தின் பின்னணியில் எஸ்.ஆர்.ராஜா செயல்பட்டது சிறுபான்மை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இவரின் தூண்டுதலின் பேரில், இந்த பகுதியில் பாங்கு ஓதுவதால் இந்து முஸ்லிம் பிரச்சினை ஏற்படுமென்று புகாரளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட இவர் பொதுக்கூட்டங்களில் பாய் பாய் என்று இஸ்லாமியர்களை அழைப்பது எங்களை இழிவுபடுத்துவதாகத் தோன்றுகிறது.
தாம்பரம் நேஷனல் பள்ளி, விஷ்வ இந்து பரிசத்தின் வசம் தற்போது உள்ளது. இது 1969ல் நாராயணராவ் என்பவரால் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு, சேவை மனப்பான்மையில் செயல்பட்டு வந்தது. பின்னர், அ.தி.மு.க.வின் முனுஆதி சபாநாயகராக இருந்தபோது ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக இந்த இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிறு பான்மையினருக்கு தி.மு.க. பாதுகாப்பு கேடயமாக இருப்பதால் தொடர்ந்து கூட்டணியில் இருந்துவருகிறோம். ஆனால் இவரோ தொடர்ச்சியாக சிறுபான்மையினர், பட்டியலினத்தோருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பட்டியலினத்தை சேர்ந்த தாம்பரம் மேயர் கடந்த சில வருடங்களாக இவரால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார் என்பது இப்பகுதி மக்களுக்கு நல்லாவே தெரியும். இவரால் கூட்டணிக்கு சிக்கல் வருமெனத் தோன்றுகிறது'' என்று முடித்துக்கொண்டார்.