Advertisment

பட்டியலினத்தவர்கள் புறக்கணிப்பு! தி.மு.க. உட்கட்சி உரசல்!

dd

தி.மு.க.வின் 15வது உட்கட்சித் தேர்தல் நடந்துவருகிறது. ஒன்றியச் செயலாளர்கள், ஒன்றிய கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர் களின் பட்டியலை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் சில மாவட்டங்களில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Advertisment

dmk

திருப்பத்தூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 15 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் உள்ளன. 15 ஒன்றியங்களில் ஒரேயொரு ஒ.செ. பதவி கூட பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்படவில்லை. இது நியாயமா? என, தி.மு.க. பிரமுகர் சிலம்பரசன், ஆனந்தன் ஆகியோர் கேள்வியெழுப்பியுள்ளனர். இது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, "மாவட்டப் பொறுப்பாளர் எம்.எல்.ஏ. தேவராஜ், சாதி வன்மத்தோடு செயல்படுகிறார் எனத் தலைமைக்கு புகார் அனுப்பினோம். தலைமை அதனைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது வெளிவந்துள்ள பட்டியலே அதற்கு சாட்சி. எங்கள் மாவட்டத்தில் ஆம்பூர், திருப்பத்தூர் தொகுதிகளில் அதிகளவில் பட்டியலின மக்கள் உள்ளார்கள். திருப்பத்தூர், கந்திலி, மாதனூர் ஒன்றியங்களில

தி.மு.க.வின் 15வது உட்கட்சித் தேர்தல் நடந்துவருகிறது. ஒன்றியச் செயலாளர்கள், ஒன்றிய கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர் களின் பட்டியலை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் சில மாவட்டங்களில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Advertisment

dmk

திருப்பத்தூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 15 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் உள்ளன. 15 ஒன்றியங்களில் ஒரேயொரு ஒ.செ. பதவி கூட பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்படவில்லை. இது நியாயமா? என, தி.மு.க. பிரமுகர் சிலம்பரசன், ஆனந்தன் ஆகியோர் கேள்வியெழுப்பியுள்ளனர். இது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, "மாவட்டப் பொறுப்பாளர் எம்.எல்.ஏ. தேவராஜ், சாதி வன்மத்தோடு செயல்படுகிறார் எனத் தலைமைக்கு புகார் அனுப்பினோம். தலைமை அதனைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது வெளிவந்துள்ள பட்டியலே அதற்கு சாட்சி. எங்கள் மாவட்டத்தில் ஆம்பூர், திருப்பத்தூர் தொகுதிகளில் அதிகளவில் பட்டியலின மக்கள் உள்ளார்கள். திருப்பத்தூர், கந்திலி, மாதனூர் ஒன்றியங்களில் 8 ஒ.செ.க்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் கூட பட்டியலினத் தவர் இல்லை. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என நான்கு நகரச் செயலாளர்களில் ஒருவர் கூட பட்டியலினத்தவர் கிடையாது. ஆம்பூர் அ.தி.மு.க.வில் 20 ஆண்டுகளாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ந.செ.வாக இருக்கிறார். வாணியம்பாடியிலும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் ந.செ.வாக இருக்கிறார். ஆனால் எங்கள் கட்சியில் 3 பேரூராட்சியில் ஆலங்காயம், உதயேந்திரம் பேரூர் செயலாளர் பதவியை பட்டியலினத்துக்கு ஒதுக்கியவர்கள், 15 ஒன்றியம், 4 நகராட்சிகளில் பட்டியலினத்தை ஒதுக்கிவிட்டார்கள். அந்தந்த பகுதியில் வலி மையாகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நிர்வாகிகளாக நியமிப்பது தானே முறை? அதையேன் செய்யவில்லை?'' என்றார்கள்.

Advertisment

dmk

பட்டியலின மக்களை ஏமாற்றியவர்கள், கட்சியில் ஆக்டிவான நிர்வாகிகள் சிலரையும் சுயநலத்துக்காக மாற்றி யுள்ளார்கள் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நாட்றம்பள்ளி கிழக்கு ஒ.செ. முரளியின் பதவி பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ளார் என்றார்கள். நாம் அவரைத் தொடர்பு கொண்ட போது நம்மிடம் பேச மறுத்துவிட்டார். அவரது ஆதரவு கவுன்சிலர் ஒருவரிடம் பேசியபோது, "நாட்றம்பள்ளி ஒன்றியம், பேரூராட்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சூர்யகுமார் ஆதிக்கம்தான். நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் கட்சி வீக்காக இருக்கிறது என ஓராண்டுக்கு முன்பு ஒன்றியத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து, சூர்யகுமார் மேற்கு ஒ.செ.வாகவும், கிழக்கு ஒ.செ.வாக முரளியையும் நியமித்தார் மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜ். சட்டமன்ற, உள்ளாட் சித் தேர்தலில் கிழக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க.வின் பலமான வாக்கு வங்கியை உடைத்து தி.மு.க.வை வெற்றி பெறவைத்த முரளிக்கு கட்சியில் செல்வாக்கு கூடியது. முரளி வளர்ந்தால் தனக்கு ஆபத்து என்று, "நான் சொல்றதைக் கேளுங்க, உங்க ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குறேன்' எனச்சொல்லி, முரளி ஆதரவாளர்களை தன்பக்கம் இழுத்தார் சூர்யகுமார். உட்கட்சித் தேர்தலில் முரளி யைத் தூக்கிவிட்டு கிழக்கு ஒ.செ.வாக மாவட்ட கவுன்சிலர் சாமுண்டியை நியமிக்க வச்சிட்டார். தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டுமென டம்மி யானவருக்கு பதவி வாங்கித் தந்து கட்சியை வீக்காக்கும் சூர்யகுமார் மீது அதிருப்தியில் இருக்காரே தவிர, கட்சி மீது அவருக்கு அதிருப்தியில்லை'' என்றார்.

வேலூர் மாவட்டத்தில் 19 ஒன்றியம், 2 நகராட்சி, 4 பேரூராட்சி, 1 மாநகராட்சி உள்ளன. இதில் கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சீத்தாராமன், பேரணாம்பட்டு மேற்கு ஒ.செ. டேவிட் இருவர் மட்டுமே பட்டியலினத்தவர் கள் எனக் குமுறுகிறார்கள். பேரணாம்பட்டு கிழக்கு ஒ.செ.வும், ஒன்றியச் சேர்மனுமான ஜனார்த்தனனுக்கு எடுபிடியாக இருக்கும் டேவிட்டை மாற்றுங்கள், தகுதியான நபரை ஒ.செ.வாக்குங்கள் என குண்டளப்பள்ளி சீனு தலைமையில் நிர்வாகிகள் மா.செ.விடம் முறையிட்டும் மாற்றவில்லை. ரிசர்வ் தொகுதியான குடியாத்தம் ஒன்றியம் நான்காகப் பிரிக்கப்பட்டு, இரண்டு நாயுடு, ஒரு முதலியார், ஒரு வன்னியர் ஒ.செ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

dmk

குடியாத்தம் தெற்கு ஒன்றியத்தில் 13 ஊராட்சிகள் உள்ளன. அதில் 9 ஊராட்சியில் பட்டியலினத்தவரும், 3 ஊராட்சியில் வன்னியர்களும், ஒரு ஊராட்சியில் முதலியார் சமூகத்தினரும் வசிக்கின்றனர். இங்கு இரண்டாயிரம் ஓட்டு மட்டுமேயுள்ள முதலியார் சமுதாயத்தை சேர்ந்த அன்பரசனுக்கு ஒ.செ. பதவி தரும்போது 30 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ள பட்டியலினத்தவருக்கு ஏன் பதவி தரவில்லை? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாள ரான குடியாத்தம் கவுன்சிலர் அரசு, "வாழ்க்கையில் சுய மரியாதையையும், தன்மானத்தையும் சுமந்துகொண்டு இருப்பவர்களுக்கு இந்தக் காலத்தில் அரசியலில் பதவி கிடைப்பது மிகவும் கடினம்' எனப் பதிவிட்டு தனக்கு ந.செ பதவி தரவில்லை என்கிற கோபத்தை வெளிப்படுத்தினார். அவரை நந்தகுமார் அழைத்து, "நீ மா.செ. மாதிரி, நீயேன் கவலைப்படற' எனச் சமாதானம் செய்துள்ளார்.

கட்சிப் பதவியில் சமூக நீதி பின்பற்றவில்லையென பட்டியலினப் பிரமுகர்களும், கட்சியில் தகுதியான உழைப்பாளிகளுக்கு பதவி தரவில்லை யென பாதிக்கப்பட்டவர்களும், சம்பந்தப் பட்ட மாவட்ட நிர்வாகிகள் மீது அதிருப்தியில் உள்ளனர். சிலர் கட்சிப் பணியிலிருந்து சைலண்ட்மோடுக்கு போகின்றனர்.

nkn240822
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe