மிழகத்தில் பத்திரப்பதிவுத் துறையில் தொடர்ந்து போலி மோசடிப் பதிவுக்குத் தடை, அரசு இடம் ஆக்கிர மிப்பு தடுப்பு, அறநிலையத்துறை இடம், சதுப்புநிலம், நீர்நிலைகள் ஆவணப்பதிவு தடையென, பல மாற்றங்களை முன்னெ டுத்துவந்த பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.க்கு, இத்துறையிலிருந்து வெளியில்சென்றால் போதும் என்ற அளவிற்கு மனஉளைச் சலை ஏற்படுத்திவருகிறார்களாம் சிலர். 

பத்திரப் பதிவுத்துறையிலுள்ள பல சிக்கல்களால் வேறு துறைகளில் பணிபுரி யும்  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பத்திரப் பதிவுத்துறைக்கு ஐ.ஜி.யாக நியமிக்கக் கேட்டால், அந்தத் துறை எங்களுக்கு வேண்டாம் என அனைவரும் தட்டிக் கழித்து வருகின்றனர். தற்போதைய பத்திரப்பதிவு ஐ.ஜி.யும் மூன்று முறை வேறு துறைக்கு என்னை மாற்றிவிடுங்கள் எனக் கேட்டுள்ளாராம். 

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலிருந்து 10 ஆண்டுகளாக இன்றுவரை பயணித்து வரும் கூடுதல் ஐ.ஜி. நல்லசிவம், "தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத் துறையில் தனக்கென ஒரு டீம் அமைத்து தனி ராஜ்ஜியத்தையே நடத்திவருகிறாராம். தன்னுடைய ட்ரைவரான சுரேஷ்குமார் மூலமாக தமிழகம் முழுவதும் 1-1-21 முதல் 21-10-24 வரை ஆன் லைன் மூலமாக எமர்ஜென்சி டோக்கன் ரிஜிஸ்ட்ரே ஷன் செய்யும் விவகாரத்தில், கோடிக்கணக்கில் வசூல் செய்துகொடுத்தார். தற்போது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு இந்த வசூல் குறித்து கடிதம் அனுப்பிய வரே நல்லசிவத்தின் டிரைவரான சுரேஷ்குமார்தான் என்பது ட்விஸ்ட். இப்படி தமிழகம் முழுவதும் நல்ல சிவம் தனி டீம் அமைத்து அதில் ஏ.ஐ.ஜி கண்ணன், டி.ஆர். செந்தில், டி.ஆர்.குமார், சிவராஜ், சுரேஷ், செந்தூரப்பாண்டி யன் ஏ.ஐ.ஜி. பிரபாவதி, ரவீந்திர நாத் இவர்களின் மூலமாக பத்திரப் பதிவில் வேண்டியதை செய்துதர, அதற்கான பலன்கள் கண்ணனை வந்தடையும். பிறகு தலைமை நல்லசிவத்திற்கு வந்து சேருமாம்..   

Advertisment

அந்தவகையில் திருப்பூர், கோவை, விழுப்புரம், திண்டிவனம் என ஆன்லைன் வழி ஆவண ரசீதில் கோல்மால் செய்துள்ளனர். ஒரு கட்டடம் ஹெவி ரிஜிஸ் ட்ரேஷன் செய்யும்போது அதற்கு ஸ்டாம்ப் பீஸ் போடுவது வழக்கம். அதில் இவர்கள் முதலில் 20,000 என கணக்கு காட்டி பிறகு அந்த பில்லை கேன்சல்செய்து 2000 என கணக்குக் காட்டி அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்து வர். இப்படி ஒரு வருடத்தில் மட்டும் 2 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியுள்ளதை அங்குவந்த டி.ஆர். ஆன விஜயசாந்தி கண்டறிந்து டி.பீ. இ.ஓ. டேட்டா என்ட்ரி ஆபிசர் முதல் அங் குள்ள ரிஜிஸ்ட்ரார் வரை இதில் தொடர்பிருப் பதைத் தெரிவித்திருக்கிறார். அதேபோல சேலம் எடப்பாடியில் அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான புலம் எண் 66, 69, 70-ல் உள்ள 300 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. கட்சித் தலைவர் எடப்பாடியின் உறவினர் ஒருவ ருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார் கு.செந்தில்குமார். இதனைக் கண்டறிந்த வரு வாய் கோட்டாட்சியரான லோகநாயகி உடனடி யாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்த பின் னரும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது பதிவுத்துறை.  தற்போது அதே செந்தில்குமார் கூடுதல் பொறுப்பாக மூன்று மாவட்டங்களில் மாவட்டப் பதிவாளராக உள்ளார். தமிழகம ் முழுவதும் பதிவுசெய்ய முடியாத ஆவணங் களை இவர் கட்டுப்பாட்டிலுள்ள மூன்று மாவட்டங்களில் வேறு மாவட்டங்களிலுள்ள நிலத்தோடு சேர்த்து, இவரது உதவியாளரை வைத்து பதிவுசெய்துவருவது தொடர்கதையாக இருக்கிறது. தஞ்சை இணை1 சார்பதிவாளர் அலுவலகத்தில் பலகோடி மதிப்புள்ள டவுன் வார்டு 3-ல் ஒரு ஏக்கர் 82 சென்ட் அரசு நிலத்தை தனிநபருக்கு பதிவு செய்துகொடுக்க உதவியுள்ளார். மேலும் பல ஏக்கர் கோவில் நிலங்களை தஞ்சை மன்னார்குடியில் தனிநபர்களுக்கு பதிவுசெய்து கொடுத்துள்ளார்.

registrar1

Advertisment

அதேபோல சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் பத்திரப்பதிவு செய்யக்கூடாத கலைமகள் சபா இடம், திருச்சி சுரேஷ் பி.ஏ.சி.எல். நிறுவனத்தின் இடங்களை பத்திரப்பதிவு செய்துள்ளார்.  குன்றத்தூரிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை செந்தூரப்பாண்டியன் பதிவு செய்து கொடுத்துள்ளார். சென்னை, கிண்டி, கூடுவாஞ்சேரி பகுதியில் ஆவணத்தை போலியாகத் திருத்தம் செய்த விவகாரத்தில் அப்போது பணிபுரிந்த ஏ.ஐ.ஜி.யான ரவீந்திரநாத் கைதுசெய்யப்பட்டார். (இந்த விவகாரத்தை பத்திரப்பதிவுத்துறையில் ஒரு கறுப்பாடு என நக்கீரனில் வெளியிட்டோம்.) ஆனால் சொத்து விவரம் மாற்றம் செய்யும்போது ரவீந்திரநாத் கைரேகை வைத்தபிறகு, டி.சி.எஸ்.ஸாக உள்ள நல்லசிவத்தின் கைரேகையை வைத்தால்தான் அது இறுதிசெய்யப்படும். அப்படியிருக்கும் சூழ்நிலையில் நல்லசிவத்துக்குத் தெரியாமல் ஆவணத்திருத்தம் நடந்திருக்க வாய்ப்பில்லையெனில் நல்லசிவம் மீது ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? 

இப்படி அனைவரையும் தமிழகம் முழுவது முள்ள டி.ஆர். ரிஜிஸ்டர்களை தன் கையில் வைத்துக் கொண்டு வசூல்செய்வதும், இதில் சிக்கல்வந்தால் அவர்களை விசாரணை செய்ய ஒரு குழு அமைத்து, குழுவில் வேண்டிய ஆட்களை நியமித்து அத்தனை பேரையும் காப்பாற்றிவிடுவதே வழக்கம். அத்துடன் டி.ஆர். ஆக இருந்தவர்களுக்கு தற்போது ஏ.ஐ.ஜி.யாக பதவி உயர்வும் வழங்கிவருகிறார். திருப்பூரில் நடந்த ரசீது மோசடியை விசாரிக்க நல்லசிவம் தலைமையில் தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இவையனைத்தையும் மாற்றுவதற்காக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஜி. முழுமூச்சாக செயல்பட்டு வந்தார். அதற்கு பத்திரப் பதிவுத் துறைக்கான முன் னாள் செகரெட்ரியை தன் கையில் வைத்துக்கொண்டு கூடுதல் ஐ.ஜி. நல்லசிவம் முட்டுக்கட்டையாக இருந்துவருகிறார். இதனால் விட்டால்போதுமென ஐ.ஜி. புலம்பிவருகிறாராம். தற்போது புதிதாக வந்துள்ள செகரெட்ரியாவது இதை மாற்றுவாரா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  

இப்படியாக, பத்திரப்பதிவுத் துறையில் தனி ராஜ்ஜியம் நடத்தும் அதிகாரியை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கண்டுகொள்வாரா?          

-சே