Advertisment

சாலைக்காக போராடினால் மிரட்டறாங்க -குமுறும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

ss

"நாங்கள் பாதிக்கப்படுகிறோம்' என போராடினால் போராடியவர்கள் மீது எம்.எல்.ஏ. உத்தரவில் வழக்கு போடுகிறார்கள்' என புலம்பு கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியின் ஏ கஸ்பா பகுதியின் பிரதான வீதி வழியாக தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள். இந்த சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. "தினம், தினம் நாற்றத்தை சகித்துக் கொண்டு வாழும் இந்த பகுதி மக்கள் நடந்துபோக சரியாக சாலை வசதியி

"நாங்கள் பாதிக்கப்படுகிறோம்' என போராடினால் போராடியவர்கள் மீது எம்.எல்.ஏ. உத்தரவில் வழக்கு போடுகிறார்கள்' என புலம்பு கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியின் ஏ கஸ்பா பகுதியின் பிரதான வீதி வழியாக தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள். இந்த சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. "தினம், தினம் நாற்றத்தை சகித்துக் கொண்டு வாழும் இந்த பகுதி மக்கள் நடந்துபோக சரியாக சாலை வசதியில்லை' என கடந்த சில மாதங்களாக போ ராட்டம் நடத்திவருகின்றனர்.

Advertisment

dd

இந்நிலையில், நேதாஜி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தின் சார்பில் நகராட்சி முற்றுகை போராட்டம் நடைபெற்றுள்ளது. அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் வாழ்கின்ற னர். அவர்கள் வீட்டிலிருந்து வந்தாலும், போனாலும் சாலை சரியாக இல்லாததால் ஆட்டோ டேமேஜாகிறது. வெளி ஸ்டான்ட் ஆட்டோக்களும் இந்தப் பகுதிக்கு வருவதில்லை என்ப தால் பொதுமக்களோடு இணைந்து ஆட்டோ ஓட்டு நர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட் டம் முடிந்த நிலையில்... போராட்டத்தில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்களின் இரண்டு ஆட்டோக்களை பறிமுதல் செய்துள்ளது வட்டார போக்குவரத்து அலுவலகம்.

dd

இதுபற்றி நம்மிடம் பேசிய காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான சுரேஷ்பாபு, "போராட்டம் முடிந்ததும் அந்த ஆட்டோ ஸ்டாண்டை குறி வைத்து ஆர்.டி.ஓ. ஆய்வு செய்து இன்சூரன்ஸ் இல்லை, எஃப்.சி செய்யவில்லை என ரமேஷ், வெங்கடேசன் என இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் களது ஆட் டோக்களை யும் பறிமுதல் செய்துள்ளார். இது திட்ட மிட்டே நடத் தப்பட்ட மிரட் டல். காரணம், வேறு எங்கும் இப்படி ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆய்வு செய்யா மல், இங்கு மட்டும் நடத்தி யுள்ளனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதியின் உத்தரவுப்படிதான் அதிகாரிகள் இப்படி நடந்துள்ளார்கள். எங்க ளின் வாழ்வாதாரத் தேவைக் காகக்கூட போராடக்கூடாது என அதிகாரிகளை வைத்து மிரட்டு வது எந்தவிதத்தில் நியாயம்?'' என கேட்டார்.

அதிகாரிகளிடம் சொல்லி வழக்கு போட வைத்தது ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன் என தகவல் வந்ததால், அவ ரிடம் இதுபற்றி கேட்டபோது, "பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் இப்போது கொஞ்சம் கொஞ்ச மாகப் போடப்பட்டு வருகின்றன. விரைவில் அந்தப் பகுதி சாலைகள் புதியதாக போடப் படும். ஆட்டோக்கள் பறிமுதல் என்பதே நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். கூலித்தொழி லாளிகள், மக்களுக்காக ஓட்டும் ஆட்டோக்களை நான் ஏன் பிடிக்கச்சொல்லப் போகிறேன்? வீணாக என் மீது தவறான தகவலை சொல்லியுள்ளார்கள்'' என்றார்.

-கிங்

nkn110123
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe