Advertisment

ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜினாமா! -அதிர்ச்சியில் கோட்டை! பின்னணி சீகரட் !

ss

மிழக அரசின் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் அனீஷ்சேகர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் விவகாரம், கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பதாக அவர் கூறியிருந்தாலும் பின்னணியில் வேறு பல காரணங்கள் இருப்பதாக பேசப்படுகிறது.

Advertisment

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் அனீஷ் சேகர். அடிப்படையில் எம்.பி.பி.எஸ். டாக்டரான இவர், கடந்த 2011-ல் தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். பல்வேறு துறைகளில் பணிபுரிந்த அனீஷ்சேகர், கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக (எம்.டி.) நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் அனீஷ் சேகர்.

Advertisment

IAS officer

இதுகுறித்து எல்கா

மிழக அரசின் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் அனீஷ்சேகர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் விவகாரம், கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பதாக அவர் கூறியிருந்தாலும் பின்னணியில் வேறு பல காரணங்கள் இருப்பதாக பேசப்படுகிறது.

Advertisment

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் அனீஷ் சேகர். அடிப்படையில் எம்.பி.பி.எஸ். டாக்டரான இவர், கடந்த 2011-ல் தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். பல்வேறு துறைகளில் பணிபுரிந்த அனீஷ்சேகர், கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக (எம்.டி.) நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் அனீஷ் சேகர்.

Advertisment

IAS officer

இதுகுறித்து எல்காட் நிறுவன வட்டாரங் களில் விசாரித்தபோது, "கடந்த வாரம் எல்காட் நிறுவன அலுவலர்களை அழைத்துப் பேசிய அனீஷ்சேகர், தனது ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துள்ளதாகச் சொன்னதும் எல்லோருக்கும் அதிர்ச்சி. ஏன், சார் இந்த முடிவு என கேட்டபோதும், உண்மையான காரணத்தைச் சொல்லவில்லை.

"மக்களுக்கு சேவை செய்ய ஐ.ஏ.எஸ். பணிக்கு வந்தேன். அதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. என் சொந்த மாநிலமான கேரளா வுக்குச் செல்கிறேன். நானும் என் மனைவியும் டாக்டர்கள். திருவனந்தபுரத்தில் மருத்துவத் தொழிலை ஆரம்பிக்கப் போகிறோம். அதில் எனது மனநிறைவான சேவையை மக்களுக்குச் செய்வேன். கடந்த 10 மாத காலம் உங்களுடனும், 12 ஆண்டு காலம் தமிழ்நாடு மக்களுக்கும் பணிபுரிந்த நாட்களை என்னால் மறக்க முடியாது' என உருக்கமாகவும் ஜா-யாகவும் பேசி விடைபெற்றார் அனீஷ்சேகர்.

துறையின் அமைச்சருக்கும் அனீஷ் சேகருக்கும் மோதல் இருந்தது. ஆட்சியாளர்கள் சொல்வதை செய்ய இவர் மறுத்திருப்பார். பொதுவாக, ஆட்சியாளர்களோடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முரண்பட்டால், நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள் அல்லது என்னை வேறு துறைக்கு மாற்றிவிடுங்கள் என உயரதிகாரிகளிடம் கோரிக்கை வைப்பார்கள். மாறாக, பதவியை ராஜினாமா செய்திருக் கிறாரெனில் ஏதோ வில்லங்கம் நடந்திருக் கிறது''” என்கின்றனர்.

dd

அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இவருக்குமான மோதலும், சில டெண்டர் விவகாரங் களும்தான் ராஜினாமா வுக்கு காரணம். அதாவது, நடப்பு தி.மு.க. ஆட்சியில் மதுரை மாவட்ட கலெக்ட ராகவும், மதுரை மாநக ராட்சி கமிஷனராகவும் பணியாற்றினார் அனீஷ்சேகர்.

அமைச்சரின் சிபாரிசில் மதுரையிலிருந்து தூக்கியடிக்கப்பட்டு, அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசனிலும் பிறகு எல்காட்டிலும் நியமிக்கப்பட்டார் அனீஷ்சேகர். ஆனால், எல்காட் நிறுவனத்துக்கு இவர் மாற்றப் பட்டபோது இவருக்கு பாஸாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தார் பழனிவேல் தியாகராஜன்.

இந்த சூழலில், தனக்குத் தெரிந்த சில நிறுவனங்களுக்கு எல்காட்டின் டெண்டர்களை ஒதுக்கீடு செய்ய அமைச்சரின் உதவியாளர் ஒருவர் அனீஷ்சேகருக்கு உத்தரவுபோட, முடியாது என மறுத்துள்ளார். அமைச்சரின் இண்ட்ரஸ்ட் என உதவியாளர் அழுத்தமாகச் சொல்லியும் அனீஷ்சேகர் ஏற்கவில்லை.

இது ஒருபுறமிருக்க, எல்காட் நிறுவனத்துக்கு பல நூறு கோடிகள் மதிப்பிலான நிலங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கிறது. அந்த நிலங்களை தி.மு.க. அரசுக்கு வேண்டப்பட்ட கட்டுமான நிறுவனமான ஜி-ஸ்கொயர் நிறுவனத்துக்கு மிகக்குறைந்த விலையில் விற்கச் சொல்லியும், ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் கண்ட்ரோலிலிருக்கும் நிலங்களை அதிக விலைக்கு எல்காட் நிறுவனம் வாங்கிக்கொள்ளும்படியும் அனீஷ் சேகருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு அவர் சம்மதிக்க மறுத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நெருக்கடிகள் தொடர்ந்து அதிகரிக்கவே, பொறுத்துக்கொள்ள முடியாத அனீஷ்சேகர், துறையின் செயலாளர் தீரஜ் குமாரை சந்தித்து முறையிட்டுள்ளார். அவரோ இதை காது கொடுத்துக்கூட கேட்கவில் லையாம். அடுத்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனாவை சந்தித்து, அவமானப்படுத்தப் படுவதையும் நெருக் கடிகள் தரப்படு வதையும் சொல்லி, என்னை லீவில் செல்ல அனுமதி யுங்கள் அல்லது எல்காட்டிலிருந்து டம்மியான வேறு துறைக்கு மாற்றி விடுங்கள் என சொல்லியிருக்கிறார் அனீஷ்சேகர்.

சிவ்தாஸ்மீனாவோ, "அப்படியெல்லாம் செய்ய முடியாது; எல்காட்டிலேயே வேலைபாருங்கள்' என எடுத்தெறிந்து பேசியிருக்கிறார். இதனையடுத்து மேலும் சில முக்கிய அதிகாரிகளை அவர் சந்தித்து முறையிட்டபோதும் அவருக்கு ஆதரவாக எதுவும் நடக்கவில்லை. இதனையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாததால்தான் ராஜினாமா செய்யும் மனநிலைக்கு தள்ளப்பட்டார் அனீஷ்சேகர்''”என்று தலைமைச் செயலகத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

nkn060324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe