டந்து செல்லும் தூரத்திலேயே அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் இருந்தும், அதை வாங்குவ தாகச் சொல்லிக்கொண்டு பைக்கில் சுற்றித் திரிபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காகவே போக்குவரத்து ஆய்வாளர்களிடம் ஐந்து லாரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து விடுபட அத்தியாவசி யப் பணியில் ஈடுபட்டுள் ளோர், தன்னார்வலர் கள் வந்து கியூ-ஆர் கோடு பாஸ் வாங்கிக் கொள்ளலாம் என்ற தகவல் மதுரை போலீசாரிடையே வாட்ஸ்அப்பில் பரவியது.

mdu

இந்தத் தகவல் பொதுத்தளத்தில் வைரலான நிலையில், 24ந்தேதி காலை 7 மணிக்கெல்லாம் பாஸ் கேட்டு, அரசு மற்றும் வங்கி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். நேரம் செல்லச்செல்ல, மெயின்ரோடு வரை கட்டுக்கடங்காமல் கூட்டம் சேர்ந் தது. நான்கு மணிநேரத்துக்கும் மேலாகியும் அதிகாரிகள் தரப்பில் சலனமில்லாததால், சிலர் பாஸ் கேட்டு முழக்க மிடத் தொடங்கினர். தனி மனித இடை வெளிக்கு வாய்ப்பே இல்லாமல், நிலைமை மோசமான தால் புதிய அறிவிப்பை ரத்துசெய்து, பழைய நடைமுறையே தொடரும் என்று கலெக்டர் வினய் உத்தரவிட்டார்.

கலெக்டரின் உதவியாளர் ராஜசேகர், தாசில்தார்கள் முன்வந்து இந்தத் தகவலை மைக் மூலம் அறிவித்தபிறகே, மக்கள் கூட்டம் கலைந்தது. அவர்களில் சிலர், இதுபோல கியூ-ஆர் கோடு பாஸ் தருவதாக இருந்தால், அதை ஆரம்பத்திலேயே mduதந்திருக்க வேண்டும். அல்லது அறிவிப்பையாவது முன்கூட்டி செய்திருக்க வேண்டும். இப்படி ஊரடங்கு அமல்படுத்தி 27 நாட்களுக்குப் பிறகு, திடீரென நடைமுறைப் படுத்தினால் பொதுமக்கள் மத்தியில் அதை வாங்குவதற்கான பதட்டமும், குழப்பமும் எழத்தானே செய்யும் என்று விரக்தி யுடன் பேசினார்கள்.

Advertisment

கால்கடுக்க காத்திருந்து அதிருப்தியுடன் கலைந்துசென்ற பெண்கள் பேசும்போது, ""காய்கறி வாங்கி விற்பனை செய்கிறோம். இதுபோன்ற பாஸ் இருந்தால்தான் வியாபாரம் செய்யமுடியும் என்றால், எங்களைப் போன்றவர்கள் இப்படி வந்து நிற்கத்தானே செய்வார்கள். கொரோனா பயத்தை விடவும், அன்றாடப் பிழைப்புதானே எங்களை அனுதினமும் அச்சுறுத்துகிறது'' என்றனர். இந்தக் குழப்பத்தின் பின் னணி குறித்து, மதுரை வழக்கறிஞர் குமார் என்பவரிடம் கேட்டபோது, ""மதுரை மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை யில் பணிபுரியும் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நீதிபதிகளே அடையாள அட்டையை வழங்கி இருக்கிறார்கள். ஆனால், இந்த அடையாள அட்டை எல்லாம் செல் லாது என்று போலீசார் தடுக்கிறார்கள். நீதிபதிகளின் அனுமதியையே காவல்துறை மதிக்கவில்லை. பிறகு, மாவட்ட நிர்வாகம் கொடுக்கும் பாஸ் வாங்க மக்கள் கூட்டம் கூடத்தானே செய்யும்'' என்றார்.

“மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட் ஆசீர் வாதத்திடம், விக்ரம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர், தேவையில்லாமல் mduஇருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிபவர்களைக் கட்டுப்படுத்த கியூ-ஆர் கோடு பாஸ் வழங்கலாம். அதற்கான சாஃப்ட்வேர் எங்களிடம் இருக்கிறது’ என்று யோசனை கூறியுள்ள னர். இந்தத் தகவலை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் தெரிவிக்க, அவரும் பச்சைக் கொடி காட்டி இருக்கிறார். இதுதொடர்பான ஆடியோ வைரலான பிறகே, மாவட்ட கலெக்டர் வினய், கமிஷனர் டேவிட் ஆசீர்வாதம், கொரோனா சிறப்பு அதிகாரி காமராஜ் ஆகியோர் அவசர மீட்டிங் போட்டு, நாளையிலிருந்து புதிய கியூ-ஆர் கோடு பாஸ் கட்டாயம் என்ற உத்தரவைப் பிறப்பித்துள் ளனர். இதில், கமிஷனரின் பங்களிப்பே அதிகம். அவர் ஆட்சியரிடம் எந்தவித ஆலோசனையும் செய்வதில்லை’என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றிருக்கும் டேவிட் ஆசீர்வாதம், மதுரையின் பொறுப்பு கமிஷனராக தொடர்கிறார். சென்னைக்கு பணி மாற்றம் கேட்டு, அது தாமதமாகி வரும் நிலையில், கீழே இருக்கும் அதிகாரிகளைத் தாறுமாறாக வேலை வாங்குகிறார். மாவட்ட நிர்வாகத்துக்கு சரியான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதனால், கலெக்டருக்கும், கமிஷனருக்கும் இடையே போதுமான கம்யூனி கேஷனே கிடையாது. ஏற்கனவே, கறிக்கடைகளை இடமாற் றம் செய்வது தொடர்பாக, கலெக்டர் போட்ட உத்தரவை கார்ப்பரேஷன் கமிஷனர் விசாகனும், போலீஸ் கமிஷனர் டேவிட் ஆசீர்வாதமும் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

Advertisment

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். ஈகோ பிரச்சனையில், ஊரடங்கு காவல் பணியிலும், கொரோனா தடுப்புப் பணியிலும் இரவுபகலாக இருக்கும் காவல்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் பாதிக்கப் படுகிறார்கள். போலீசாரோ, ""எங்க கமிஷனர் எங்களை நன்றாக விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார். மதுரையை பொறுத்தவரை கார்ப்பரேஷனும், மாவட்ட நிர்வாகமும் டோட்டல் ஜீரோ. மதுரையில் கரோனாவை கட்டுப்படுத்துவது போலீசார்தான்'' என்று விசும்புகிறார்கள்.

அதிகாரிகளின் ஈகோ அதிகாரப் போட்டி, முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதம் போன்ற வற்றால், இத்தனை காலம் அரசு அறிவுறுத்தி வந்த ‘தனித்திரு, விழித்திரு, வீட்டிலேயே இரு’என்ற வசனமெல்லாம் காற்றில் பறந்ததுதான் மிச்சம். சமூகப் பரவலைத் தடுக்க வேண்டியவர்களே, அதற்குக் காரணமாகி விட்டார்கள் என்று புலம்புகிறார்கள் பொதுமக்கள்.

-அண்ணல்