ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சான்றிதழ் முறைகேடு! -வெடிக்கும் பூஜா கேட்கர் விவகாரம்!

ss

திகார துஷ்பிரயோகம் மற்றும் முறை கேடு குற்றச்சாட்டுகளால் பூஜா கேட்கர் தேசிய அளவில் கவனிக்கப்படும் முகமாகியிருக்கிறார்.

யார் இந்த பூஜா கேட்கர்?

pooja

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த திலிப், மனோரமா தம்பதியின் மகள் பூஜா. இவர் சமீபத்திய யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் 821-வது இடம்பெற்றார். இதையடுத்து பயிற்சி யளிக்கும்விதமாக புனேவில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் தனது ஆடி காரில் சிவப்புச் சுழல் விளக்குப் பொருத்தி ஓட்டியது, சிலரை மிரட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் கேட்கர் மீது எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாக பலரும் பூஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். யு.பி.எஸ்.சி. தேர்வில் பூஜா கேட்கர் தனக்கு பார்வைக் குறைபாடு மற்றும் சில மனநலக் குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவித்து அதற்கான சலுகையைப் பெற்றுள்ளார். ஆனால் பூஜா 2007-ஆம் ஆ

திகார துஷ்பிரயோகம் மற்றும் முறை கேடு குற்றச்சாட்டுகளால் பூஜா கேட்கர் தேசிய அளவில் கவனிக்கப்படும் முகமாகியிருக்கிறார்.

யார் இந்த பூஜா கேட்கர்?

pooja

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த திலிப், மனோரமா தம்பதியின் மகள் பூஜா. இவர் சமீபத்திய யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் 821-வது இடம்பெற்றார். இதையடுத்து பயிற்சி யளிக்கும்விதமாக புனேவில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் தனது ஆடி காரில் சிவப்புச் சுழல் விளக்குப் பொருத்தி ஓட்டியது, சிலரை மிரட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் கேட்கர் மீது எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாக பலரும் பூஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். யு.பி.எஸ்.சி. தேர்வில் பூஜா கேட்கர் தனக்கு பார்வைக் குறைபாடு மற்றும் சில மனநலக் குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவித்து அதற்கான சலுகையைப் பெற்றுள்ளார். ஆனால் பூஜா 2007-ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது தனக்கு எந்தவித உடல் குறைபாடும் இல்லையென அந்தக் கல்லூரியில் பிரமாணப் பத்திரம் அளித்துள்ளார்.

பார்வைக் குறைபாடு குறித்து சோதிப்பதற் காக 2022-ல் ஆறு முறை அழைத்தபோதும், சாக்குப்போக்கு சொல்லி ஆஜராவதைத் தவிர்த் தாரே தவிர பூஜா சோதனைக்குச் செல்லவில்லை. பின், தனியார் மருத்துவமனையில் சோதித்து, கண் பார்வைக் குறைபாடு இருப்பதாகச் சான்றிதழ் அளித்துள்ளார். மேலும் தேர்வுக்கு முன்பாக அளித்த சில சான்றிதழ்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. 2020-ல் தனது வயது 30 எனக் குறிப்பிட்டிருந்த பூஜா, 2023-ல் வேறொரு சான்றி தழில் தனது வயது 31 என குறிப்பிட்டுள்ளார். ஓ.பி.சி. பிரிவின்கீழ் இட ஒதுக்கீடு கோரியதிலும் சர்ச்சைகள் எழுந்துள் ளன. இதையடுத்து அம்மாநில அரசாங்கம் பூஜாவின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷனை நியமித்தது. விசாரணையில், பூஜா மீதான குற்றச்சாட்டுகள் நிரூ பிக்கப்படும் பட்சத்தில் அவர் ஐ.ஏ.எஸ். பணி யில் தொடரமுடியாது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ். பணிகளில் சேர்வதற்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் வெற்றி பெறுவது முக்கிய மாகும். இத்தேர்வுகளில் நல்ல ரேங்குடன் வெற்றிபெற்று பணியில் சேர்வதென்பது அத்தனை எளிதானதல்ல. இதற்காகவே இத்தேர்வுகளில் பயிற்சியளிப்பதற்கு முக்கிய நகரங்கள்தோறும் பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சமீபகாலமாக யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் வெற்றிபெறுவதற்காக, பல்வேறு நபர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பூஜா கேட்கர் போன்று முறைகேடாக பதவியைப் பெற்றதாக இன்னும் சில யு.பி.எஸ்.சி. பணியாளர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

pooja

2010 ஐ.ஏ.எஸ். பேட்ஜை சேர்ந்தவர் அபிஷேக் சிங். இவர் தனக்கு லோகோமோட்டிவ் குறைபாடு இருப்பதாக சான்றிதழ் அளித்து அதன்கீழ் சலுகைபெற்றார். லோகோமோட்டிவ் குறைபாடு என்பது கை, கால் அசைப் பதில், பயன்படுத்து வதில் இருக்கும் குறைபாட்டைக் குறிக்கும். இத்த கைய நபர் ஒரு பொருளை எடுப்பதி லோ, நடப்பதிலோ, பிடித்திருப்பதிலோ சிரமங்கள் இருக்கும். ஆனால், அபிஷேக் சிங் தனது சமூக ஊடகக் கணக்குகளில், நடன, உடற்பயிற்சி வீடி யோக்களைப் பதிவிட, சர்ச்சை வெடித்து தகுதி யிழப்புக்கு உள்ளானார். எலும்பியல் குறைபாடு உடையவர், மாற்றுத் திறனாளி என்று சான்றிதழ் அளித்து ஐ.ஏ.எஸ்.ஸுக்குத் தேர்வானவர் பிரியன்சு காதி. ஆனால் இத்தகைய குறைபாடுகளை போலியாகக் காட்டி இவர் சான்றிதழ் அளித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

2014 ஐ.ஏ.எஸ். பேட்ஜை சேர்ந்த நிகிதா கண்டேல்வால் தனது கண் பார்வைக் குறை பாட்டை காரணமாகக் காட்டி, பார்வையற்றோர் ஒதுக்கீட்டின்கீழ் பணியில் சேர்ந்தார். ஆனால் அவர் செல்போனில் வீடியோ கேம் விளையாடும் ஒரு வீடியோ வெளியானதையடுத்து, அவரது சான்றிதழ் மீதும், அவருக்கு பணி வழங்கப்பட்டது குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்தியாவின் உயர் நிர்வாகப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இத்தகைய சர்ச்சைக்குரிய நபர்கள், அதிகார மட்டத்தில் உள்ளவர்களின் ஆதரவின்றி இப்படி போலிச் சான்றிதழ்களை அளித்து பணியில் சேர்ந்துவிடமுடியாது.

ஆக, தேர்வுச் செயல்பாட்டின் ஏதோ ஒரு இடத்தில் இவர்களது உடல் குறைபாடுகள் குறித் தோ, இட ஒதுக்கீடு குறித்தோ தவறான சான்றிதழ் கள் கொடுப்பதை மௌனமாக அங்கீகரிக்கும் போக்கு இருப்பது தெரியவருகிறது. இத்தகைய ஊழல்கள், நமது நாட்டின் நிர்வாகத் திறமையையே கேள்விக்குறி ஆக்குவதோடு, யு.பி.எஸ்.சி. பணிகளிலும் கவனிக்கவேண்டியவர்களை உரிய விதத்தில் கவனித்தால் வெற்றிபெற்றுவிடலாம் என்ற மனப்பான்மையைத் தோற்றுவிக்கிறது.

கவனிக்குமா இந்திய அரசு?

nkn240724
இதையும் படியுங்கள்
Subscribe