Advertisment

கலைஞரின் அரசாணையை முடக்கும் ஐ.ஏ.எஸ்.கள்! -போராட்டத்தில் அரசு மருத்துவர்கள்

ss

ன்றிய அரசின் மருத்துவத்துறை மருத்துவர்களுக்கு சமமாக, மாநில அரசின்கீழ் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றவிடாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தடுப்பதாகக் குற்றம்சாட்டுகிறது மாநில அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு.

Advertisment

dd

இதுபற்றி நம்மிடம் பேசிய அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் பெருமாள்பிள்ளை, "7வது ஊதியக்குழு அடிப்படையில்தான் மத்திய-மாநில அரசுகள் எம்.பி.பி.எஸ். மருத் துவர்களை பணிக்கு எடுத்த

ன்றிய அரசின் மருத்துவத்துறை மருத்துவர்களுக்கு சமமாக, மாநில அரசின்கீழ் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றவிடாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தடுப்பதாகக் குற்றம்சாட்டுகிறது மாநில அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு.

Advertisment

dd

இதுபற்றி நம்மிடம் பேசிய அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் பெருமாள்பிள்ளை, "7வது ஊதியக்குழு அடிப்படையில்தான் மத்திய-மாநில அரசுகள் எம்.பி.பி.எஸ். மருத் துவர்களை பணிக்கு எடுத்து மாத ஊதியமாக 56,100 ரூபாய் தருகிறார்கள். மத்திய அரசின் கீழ் பணியாற்றும் மருத்துவர்கள், பணிக்கு சேர்ந்த 4வது ஆண்டு, 9, 13, 20வது ஆண்டுகளில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் பெறுகிறார்கள். அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் பணியாற்றும் மருத்துவர்கள், முதல் ஊதிய உயர்வையே 15வது ஆண்டில்தான் பெறுகிறார்கள். 9 ஆண்டுகளில் பெற வேண்டியதை 17வது ஆண்டிலும், 13வது ஆண்டில் பெற வேண்டியதை 20 ஆண்டுகள் முடிந்தபிறகே பெறுகின்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த ஊதிய வித்தியாசம் இருக்கக்கூடாதென, கலைஞர் முதல்வராக இருந்தபோது, 23.10.2009ஆம் தேதி அரசாணை வெளியிட்டார். அந்த அரசாணையை கடந்த 13 ஆண்டுகளாக நிறைவேற்றவேயில்லை.

2019 அக்டோபர் மாதம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, எங்கள் ஆட்சிவரும்போது நிறை வேற்றுவோமென்றார் மு.க.ஸ்டாலின். முதல்வ ராக இருந்த இ.பி.எஸ்., போராட்டத்தைக் கைவிட்டால் கோரிக்கையை நிறைவேற்று வோம் எனக்கூறினார். ஆனால், போராடிய 118 அரசு மருத்துவர் களை நீண்ட தூரத்துக்கு இட மாற்றம் செய்து பழிவாங்கினார் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். தற் போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் எங்கள் கோரிக்கையை சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியத்திடம் எடுத்துவைத் தோம். இதில், தங்களுக்குச் சம மாக மருத்துவர்களும் சம்பளம் பெறுவார்களோ என்ற ஈகோ வால், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவிடாமல் ஆட்சிப் பணியிலுள்ள ஐ.ஏ.எஸ். அதி காரிகள் தடுக்கிறார்கள்'' என்றார்.

dd

Advertisment

அமைப்பின் செயலாளர் சையத் தாகீர் உசேன் நம்மிடம், "கொரோனா காலத்தில் 11 அரசு மருத்துவர்கள் இறந்தனர். திரு வள்ளுவர் மாவட்டம் பள்ளிப் பட்டு ஈ.என்.டி மருத்துவர் விவேகானந்தனும் ஒருவர். இவரது மனைவி திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவேண்டும் என பலமுறை கோரிக்கை வைத் தோம். இதுகுறித்து அமைச்சரே, கொரோனா சிறப்பு கேஸ்படி வேலை கொடுங்கள் என அதி காரிகளுக்கு உத்தரவிட்ட பின்பும் ரூல்ஸ்படி தான் தருவோமென்று அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்'' என்றார்.

சுகாதாரத்துறையில் தமி ழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதற்கு காரணமான அரசு மருத்துவர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதில் தமிழக அரசு தயக்கம் காட்டக்கூடாது என்கிறார்கள்.

nkn311222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe