Advertisment

ஒரு தொண்டர் புகார் செய்தால் பதவி விலகுவேன் -உறுதி தரும் எம்.பி!

mp

ன்னமும் நாடாளு மன்றக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், மக்கள் நலன் தொடர்பான கேள்விகளை எழுத்துப் பூர்வமாகக் கேட்டிருக்கிறார் அண்மையில் மாநிலங்களவை எம்.பி.யான நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப் பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார். தன்னுடைய முதல் மாத ஊதியத்தையும் இளைஞரணி வளர்ச்சிக்காக உதயநிதி எம்.எல்.ஏ.விடம் வழங்கியிருக்கிறார்.

Advertisment

mp

"பதவி பெரிதல்ல -கொள்கையே பெரிது' என கலைஞரால் பாராட்டப்பட்ட அண்ணா காலத்து தி.மு.க. பிரமுகர் கே.ஆர்.ராமசாமி. அவரின் பேரன்தான் ராஜேஷ் குமார். மாணவப் பருவத்

ன்னமும் நாடாளு மன்றக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், மக்கள் நலன் தொடர்பான கேள்விகளை எழுத்துப் பூர்வமாகக் கேட்டிருக்கிறார் அண்மையில் மாநிலங்களவை எம்.பி.யான நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப் பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார். தன்னுடைய முதல் மாத ஊதியத்தையும் இளைஞரணி வளர்ச்சிக்காக உதயநிதி எம்.எல்.ஏ.விடம் வழங்கியிருக்கிறார்.

Advertisment

mp

"பதவி பெரிதல்ல -கொள்கையே பெரிது' என கலைஞரால் பாராட்டப்பட்ட அண்ணா காலத்து தி.மு.க. பிரமுகர் கே.ஆர்.ராமசாமி. அவரின் பேரன்தான் ராஜேஷ் குமார். மாணவப் பருவத்தில் பத்திரிகையாளராக செயல் பட்டவர். சட்டமன்றத் தேர்தலில் தங்கமணியின் பணபலத்தை எதிர்த்து, தனது மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற வைத்தவர்.

Advertisment

நவம்பர் 10-12 தேதியிட்ட நக்கீரன் இதழில் "மந்திரிக்கு வாய்ப்பூட்டு! மா.செ. கறார் உத்தரவு!' என்ற தலைப்பிலான செய்திக்கு தன்னுடைய விளக்கத்தையும் அளித்துள்ளார். "நான் திடீரென பொறுப்புக்கு வர வில்லை. கிளைச் செயலாளர், ஒன்றிய துணைச் செயலாளர், மாவட்ட பிரதிநிதி 10 ஆண்டு காலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், பிறகு மாவட்ட கழக பொறுப்பாளர் என கழகத்தில் முறையாக பொறுப்புகளை ஏற்று பணியாற்றி வருகிறேன். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நான் மாவட்ட பொறுப்பாளர் என்ற முறையில் கட்சி வளர்ச்சி தொடர்பான விசயங்களை என்னுடன் ஆலோசனை செய்வார்.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறவில்லை என கட்டுரையில் குறிப்பிடப்பட்டி ருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பே பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு 3000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, அதில் 2000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விரைவில் பயனாளிகளுக்கு உத்தரவு வழங்கப்பட உள்ளது.

mm

அதுபோல, தேர்தலுக்கு முன்பும் பின்பும் தேர்தலுக்கு முன் கட்சிக்காரர்கள் வீட்டில் கல்யாணம் என்றால், சொந்த செலவில் தங்கக்காசு அன்பளிப்பாக வழங்குவதை தொடர்ந்து வருகிறேன். இறுதிச் சடங்கு என்றாலும் செலவுக்கு பணம் கொடுப்பது என் வழக்கமாக உள்ளது. கொரோனா காலத்தில் இறந்த கட்சிக்காரர்களின் குடும்பத்திற்கு தொகையை உயர்த்தி ரூபாய் 50,000 என தலைவர் கலைஞர் குடும்ப நல நிதி என்ற பெயரில் விண்ணப்பம் வழங்கப்பட் டுள்ளது.

விபத்தில் பாதிக்கப் பட்ட கிளைச் செயலாளர் சுந்தரராஜனுக்கு உரிய உதவி கள் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க. உறுப்பினர் அட்டை வைத்துள்ள எளிமையான ஒரு தொண்டன் என் மீது குற்றம்சாட்டினால் போதும், நான் பதவி விலகத் தயார்''’என்கிறார்.

உள்ளாட்சி இடைத் தேர்தலில் இவரது மாவட்டத்திற்குட்பட்ட வெண் ணாந்தூரில் மாவட்ட கவுன்சில் தேர்தலில் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்துள்ள நிலையில்... அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தி.மு.க.வில் இணைத்துள்ளார் ராஜேஷ் குமார்.

-கீரன்

nkn271121
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe