மத்துவம், போதைப்பொருள் விழிப்புணர்வு, போதைப்பொருள் ஒழிப்பு, சாதிமத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கடந்த 2-ஆம் தேதி திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணத்தைத் தொடங்கினார். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி யசைத்து தொடங்கிவைத்தார். இந்நடைபயணத்தின் நிறைவுக்கூட்டம் மதுரையில் ஓபளா படித்துறைப் பகுதியில் நடந்தது. இதில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தி.மு.க. எம்.எல்.ஏ. தளபதி, நடிகர் சத்யராஜ், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பேசினர்.

Advertisment

சத்யராஜ் பேசியபோது, “"சாதாரண மனிதர் கள் வியந்து பார்க்கும் மாமனிதர் வைகோ. சம தர்மத்துக்காக 6000 கிமீ நடந்த தலைவன். நிழல் ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ ஹீரோவாக இருப்பவர் வைகோ. வரும் தேர்தலில் திராவிட கொள்கைக்கு எதிராக தமிழருக்கு, தமிழ் மக்களுக்கு எதிராக மதவாத போர்மேகம் சூழ்ந்துள்ளது. இதை எதிர்கொள்ள வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., திமுக போன்ற இயக்கங்களின் அவசியத்தை புரிந்துகொள்ள வேண்டும்''’என்றார். 

Advertisment

 மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "வைகோ தமிழகத்திற்கு கிடைத்த அரிய பொக் கிஷம். நாடாளுமன்றத்தில் பாசிச கூட்டத்தைக் கதிகலங்கவைக்கும் குரல். எந்தவித சமரசமு மின்றி மொழியறிவால், அரசியல் தெளிவால் 360 டிகிரியில் நின்று சுழன்று  இந்திய நாடாளு மன்றத்தில் பேசக்கூடிய ஒரே தலைவர் வைகோ தான். இந்தியாவில்  மத நல்லிணக்கத்தைக் கெடுத்து வெறுப்புணர்வைத் தூண்டி மதக்கல வரத்தை உண்டாக்கத் துடிக்கும் மதவாத சக்தி களை விரட்டியடிக்க சமத்துவப் பயணத்தை தொடங்கிய அண்ணன் வைகோவின்  நடை பயணத்தை வாழ்த்தி வணங்குகிறேன்''’என்றார். 

கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, "உலகத்தை அச்சுறுத்துபவை அணு ஆயுதமும் போதைப் பழக்கமும்தான். போதை கலாச்சாரம், உள்ளூர் கலாச்சாரம் அல்ல, உலக கலாச் சாரம். தமிழர்கள் அதிலிருந்து வெளியே வர வேண்டும். இந்த ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பது வைகோவின் கனவு. தமிழகத்தில் சமத்துவம் தழைத்தோங்கி நிற்கிறது, அதற்கு எந்தவித குந்தகமும் ஏற்பட்டுவிடக்கூடாது என அவர் நினைக்கிறார். எல்லாவற்றையும் விட மனிதநேயம் மேன்மையானது. தமிழகத்தில் அதை உயர்த்திப் பிடிப்போம், வைகோவோடு கரம் கோர்ப்போம்''’என்றார்.

Advertisment

அடுத்து பேசிய ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ, "இதுவரை 11 முறை தமிழர் நலனுக்காக நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். ’பொதுவாழ்க்கையில் 62 வருடங்கள் செலவிட்ட தலைவர், இப்போது இந்துத்துவ மதவாத சக்திகளுக்கு எதிராக தமிழ்நாட்டைக் காக்க சமத்துவ நடைபயணம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தந்துள்ளது. இது திராவிட பூமி. இதை எங்கள் உயிரை தந்தாவது காப்போம்'' என்று முடித்துகொள்ள... 

vaiko1

கடைசியாகப் பேசிய வைகோ, "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தமிழ் மரபில் வந்த நான், இங்கு சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் எந்த மோதலும் ஏற்பட்டுவிடக் கூடாது என நினைக்கிறேன். தமிழகத்தில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால் போதைக்கு எதிராக நடைபயணம் நடைபெறுமென அறிவித்தேன். நாங்கள் இந்துக்களுக்கும், சைவ சமயம், வைணவங்களுக்கும் எதிரிகள் அல்ல. இந்த நடைபயணம் அனைத்து சமயத்தின் நலனுக்கும் பொதுவானது. திருப்பரங்குன்றத்தில் முருகனும், அதற்கு அடுத்துள்ள தர்காவில் சிக்கந்தரும் இருக்கிறார்கள். தேவையில்லாமல் மதக்கலவரத் தை தூண்டும்விதமாக தர்கா அருகில் விளக் கேற்றவேண்டும் என்று இந்த மண்ணில் இந்துத்துவ சக்திகள் கலவரம் ஏற்படுத்த முயற் சிக்கின்றன. இதை முறியடித்தே ஆகவேண்டும். நீதிபதி ஒருவர் இந்த தூணில்தான் விளக்கேற்ற வேண்டும் என்று சொல்கிறார். அதனைத் தொடர்ந்து தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளும் அதே கருத்தை சொல்வது மனவேதனை யளிக்கிறது. இந்த நீதிபதிகள் சட்டத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டுகிறார்கள், மீறுகிறார்கள். இதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். 

2022-ஆம் ஆண்டு இந்த இந்துத்துவ மத வாத சக்திகள் மராட்டியத்தில் ஒரு மாநாட் டைக் கூட்டினார்கள். அதில் ஒரு பிரகடனத் தை வெளியிட்டார்கள். அதில், அரசியல் சட்டத்திலுள்ள இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற வாக்கியத்தை நீக்குவோம். இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஓட்டுரிமையை, குடியுரிமையைப் பறிப்போம். இனி டில்லி இந்தியாவின் தலைமையகம் இல்லை. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிதான் தலைமையகம். இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே எட்டாவது அட்டவணையில் இடம்பெறும் என்று ஒரு பிரகடனம் செய்தார்கள். 

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நாங் கள் சும்மா இருக்கமுடியாது. அமித்ஷா சொல் கிறார், "தி.மு.க.வை, திராவிடத்தை ஒழிக்காமல் அழிக்காமல் விடமாட்டேன்' என்று. அமித்ஷாவே... என்ன திமிர் இருந்தால் 75 வருடம் பாரம்பரியமிக்க திராவிட இயக்கங் களை அழிப்பேன், ஒழிப்பேன் என்கிறாய். உனக்கு திராவிட இயக்க வரலாறு தெரியுமா? 

உங்கள் கூட்டத்தை இந்த மண்ணிலிருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி யெறியாமல் இந்த வைகோ சாகமாட்டான். இந்த திராவிட இயக்கத்துக்காக, இந்த மக்களுக்காக, சாதிய மத மோதலை உண்டாக்கும் சக்திகளுக்கு எதிராக என் உயிர் உள்ளவரை போராடுவேன். திராவிடத்தை பங்குபோட்டு குளிர்காய நினைக்கும் இந்த பாசிச சக்திகளை விரட்டியடிக்கும்வரை இந்த வைகோ ஓயமாட்டான்''’என சூளுரைத்தார்.