Advertisment

மணிமண்டபம் வேண்டும்! வீரப்பன் நினைவு நாளில் ஒலித்த குரல்கள்...

v

"வீரவணக்கம்... வீரவணக்கம்... வனத்தைக் காத்த மாவீரனுக்கு வீரவணக்கம்'' என்று கோஷங்கள் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடில் எதிரொலித்தன. வீரப்பனின் 18ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து மரியாதை செலுத்தியவர்கள் எழுப்பிய கோஷம்தான் அது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் வழக்கத்தை விட கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன. வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவு வர இயலாத சூழ்நிலை இருந்தது. வந்தவர்களையும் போலீஸ் தடுத்து கெடுபிடிகள் செய்தது. வீரப்பனின் உறவினர்கள் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள வீரப்பன் அபிமானிகள் மட்டும் கூடி நினைவு நாளில் மரியாதை செலுத்தினர். இந்த ஆண்டு அத்தகைய கடும் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் கண்காணிப்பு இருந்தது.

Advertisment

vv

2004ஆம் ஆண்டு அக். 18ஆம் தேதி வீரப்பன் சுட்டுக்கொல்லப் பட்டதாகக் கூறப்பட்டது. கொல்லப் பட்ட பின்பு பல்வேறு குழப்பங்கள், போலீஸ் மற்றும் அரசின் அழுத்தம், கொந்தளிப்பு என அனைத்தையும் தாண்டி வீரப்பன் குட

"வீரவணக்கம்... வீரவணக்கம்... வனத்தைக் காத்த மாவீரனுக்கு வீரவணக்கம்'' என்று கோஷங்கள் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடில் எதிரொலித்தன. வீரப்பனின் 18ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து மரியாதை செலுத்தியவர்கள் எழுப்பிய கோஷம்தான் அது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் வழக்கத்தை விட கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன. வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவு வர இயலாத சூழ்நிலை இருந்தது. வந்தவர்களையும் போலீஸ் தடுத்து கெடுபிடிகள் செய்தது. வீரப்பனின் உறவினர்கள் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள வீரப்பன் அபிமானிகள் மட்டும் கூடி நினைவு நாளில் மரியாதை செலுத்தினர். இந்த ஆண்டு அத்தகைய கடும் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் கண்காணிப்பு இருந்தது.

Advertisment

vv

2004ஆம் ஆண்டு அக். 18ஆம் தேதி வீரப்பன் சுட்டுக்கொல்லப் பட்டதாகக் கூறப்பட்டது. கொல்லப் பட்ட பின்பு பல்வேறு குழப்பங்கள், போலீஸ் மற்றும் அரசின் அழுத்தம், கொந்தளிப்பு என அனைத்தையும் தாண்டி வீரப்பன் குடும்பத்தின் பூர்வீக இடம் இருந்த மூலக்காட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேட்டூர் அணை கட்டப்படும் முன்பு வீரப்பனின் மூதாதையர்கள் அந்தப் பகுதியில் விவசாயம் செய்து வந்தனர். மேட்டூர் அணைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் சென்று குடியேறினர். அந்த ஊர்தான் இன்று வீரப்பனின் சொந்த ஊராகச் சொல்லப்படுகிறது. அங்கு அடக்கம் செய்தால் பிற்காலத்தில் நினைவை அனுசரிக்கவும் வழிபடவும் கர்நாடக அரசால் தடை வரும் என்று கருதி வீரப்பன் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன்பே வீரப்பனின் அண்ணன் மாதையனின் மகன் மணி விபத்தில் மரணமடைய அவரது உடலும் இங்குதான் அடக்கம் செய்யப் பட்டது. சமீபத்தில் மரணமடைந்த வீரப்பனின் அண்ணன் மாதையனின் உடல் வீரப்பனுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த இடம் நடுவில் வீரப்பன், அவருக்கு இடப்புறம் அவரது அண்ணன் மாதையன் வலப்புறம் மாதையன் மகன் மணி என மூவரின் நினைவிடமாக திகழ்கிறது.

கடந்த அக்டோபர் 18 அன்று காலை 7 மணியிலிருந்தே மக்கள் வரத்தொடங்கினர். மாலை, சூடம், பத்தியுடன் வந்து அவருக்கு மரியாதை செலுத்தி வணங்கிச் சென்றனர். "நான் வீரப்பனின் சமூகத்தை சேர்ந்தவனில்லை. ஆனால் சிறு வயதிலிருந்து அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் எனக்கு சாமி மாதிரி'' என்று கூறி தனது மனைவி யின் வளைகாப்புக்கான முதல் பத்திரிகையை வீரப்பனின் சமாதியில் வைத்து வழிபட்டார் திருச்சியிலிருந்து வந்திருந்த ஒரு இளைஞர். நாகர்கோவில், கடலூர், வந்தவாசி, வேலூர், காஞ்சி புரம், மதுரை என தமிழகத்தின் நாலாபுறத்திலிருந்தும் வீரப்பன் அபிமானிகள் வந்திருந்தனர். "நாங்க கன்னடிகாதான்... ஆனா எங்களுக்கு அவரை பிடிக்கும்...'' என்று ஆச்சரியம் அளித்தது மைசூரிலிருந்து வந்த ஒரு இளைஞர் டீம். கர்நாடகத்தின் இன்னும் சில ஊர்களில் இருந்தும் இளைஞர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.

vv

Advertisment

மொத்த கூட்டத்தின் கவனத்தையும் கவர்ந்தது ஒரு மீசைப் படை. வீரப்பன் போலவே மீசை வைத்து அவர் போன்ற தோற்றத்தில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். "இந்த மீசை வச்சா, என்னா வீரப்பன் மாதிரி இருக்க என்று நாலு பேர் கேக்குறாங்க. அதுவே எங்களுக்குப் பெருமை. அவர் மறைந்தும் எங்கள் நினைவில் இருக்கிறார் என்பதன் அடையாளம் தான் இந்த மீசை'' என்கிறார்கள் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பொறுப்பு வகிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழரசுக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் தனித்தனியே கோஷமிட்டு வீர வணக்கம் செலுத்தினர். முத்துலட்சுமி வரும் வரை பெரும்பாலான மக்கள் காத்திருந்து அவருடன் சேர்ந்து மரியாதை செலுத்தினர். வழக்கமாக வீரப்பன் நினைவு நாளில் அங்கே அன்னதானம் செய்யும் முத்துலட்சுமி, இந்த ஆண்டு மாதையன் மறைந்த காரணத்தினால் சம்பிரதாயப்படி அன்னதானம் செய்யக்கூடாது என்பதால் நினைவிடத்தில் எந்த ஏற்பாடுகளும் செய்யாமல் எளிமையாக மரியாதை செலுத்தி வணங்கினார். வேறொரு ஆதரவற்றோர் இல்லத்தில் உணவளித்துவிட்டு நினைவிடம் வந்தார். அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இந்த உலகத்துல தப்பு செய்யாத மனிதர்களே இல்லை. சூழ்நிலையால் என் கணவர் தவறுகள் செய்திருந்தாலும் அதைத் தாண்டி மக்களுக்கு நன்மைகள் செய்தார். எவ்வளவோ ஊழல் செய்தவர்களுக்கெல்லாம் இங்கு மரியாதை கிடைக்கிறது. என் கணவருக்கு மணிமண்டபம் கட்ட பல வருடங்களாக கோரிக்கை வைத்தும் அரசு வழிவகை செய்யவில்லை. நான் உயிரோடு இருக்கும்போதே அது நடக்க வேண்டும்'' என்று கண்கலங்கினார்.

vv

வீரப்பனை "குலதெய்வம், கடவுள், அண்ணன்' என்று கூறி மரியாதை செலுத்திய அனைவரின் கோரிக்கையும் வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்ப தாக இருந்தது. "அனுமதி மட்டும் கொடுத்தால் போதும், நாங்கள் கட்டி விடு வோம்'' என்று உணர்வு பொங்கக் கூறினர். நடந்த அனைத்தையும் அமைதியாகக் கவ னித்தது உளவுத்துறை யும் காவல்துறையும். அரசை செய்தி சென்றடைந்திருக்கும். "அரசியலில் நுழைய வேண்டும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்' என்ற தனது ஆசையை நக்கீரன் பேட்டியில் சொல்லியிருந்தார் வீரப்பன். இந்த அன்பைப் பார்த்து அவரது ஆன்மா ஆனந்தப் பட்டிருக்கும்.

-சுப்பு

nkn221022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe