Advertisment

‘பெண்ணை ஆணாக நினைத்து முத்தமிட்டேன்!’ -ஒரு வழக்கறிஞரின் வாக்குமூலம்!

aa

து ஒரு மாதிரி சம்பவம்.

மதுரை கே.புதூரிலுள்ள வழக்கறிஞர் வேலுதாஸ் அலுவலகத்துக்கு சில ஆவணங்களோடு தனியாக வந்தார், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். தான் எப்படி தாக்கப்பட்டேன் என்பதை அந்தப் பெண் அவரிடம் விவரித்தபோது, உன்னுடைய உடம்பில் எந்தெந்த இடத்தில் அடி விழுந்தது என்று கேட்டவாறு, அங்கங்கே தன் கையால் தொட்டு உறுதிப்படுத்தியிருக்கிறார், வேல்தாஸ். அந்தப் பெண்ணின் முதுகையும். பின் புறத்தையும் தடவிக் கொடுத்திருக்கிறார். ஒருகட்டத்தில

து ஒரு மாதிரி சம்பவம்.

மதுரை கே.புதூரிலுள்ள வழக்கறிஞர் வேலுதாஸ் அலுவலகத்துக்கு சில ஆவணங்களோடு தனியாக வந்தார், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். தான் எப்படி தாக்கப்பட்டேன் என்பதை அந்தப் பெண் அவரிடம் விவரித்தபோது, உன்னுடைய உடம்பில் எந்தெந்த இடத்தில் அடி விழுந்தது என்று கேட்டவாறு, அங்கங்கே தன் கையால் தொட்டு உறுதிப்படுத்தியிருக்கிறார், வேல்தாஸ். அந்தப் பெண்ணின் முதுகையும். பின் புறத்தையும் தடவிக் கொடுத்திருக்கிறார். ஒருகட்டத்தில், அந்தப் பெண்ணின் இருபக்கக் கன்னங்களையும் தன் கைகளால் அழுத்தி, நெற்றியில் முத்தமும் கொடுத்திருக்கிறார்.

Advertisment

dd

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் வெள்ளந்திப் பேச்சைக் கேட்டு, அவளுடைய கணவர் இந்த நாட்டில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு, ‘எதிர்ப்பதற்குத் திராணியில்லாத பலவீனமான பெண்’ என முடிவெடுத்து, தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள நினைத்திருக்கிறார் வேல்தாஸ் என்பது, அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

நாம் வழக்கறிஞர் வேல்தாஸை தொடர்பு கொண்டோம். "பதற்றமாக இருந்த அந்தப் பெண் ணை ஆசுவாசப்படுத்தினேன். கெட்ட நோக்கத்தில் தொடவில்லை. நெற்றியில் முத்தம் கொடுத்தபோது மாஸ்க் அணிந்திருந் தேன். நீ தைரியமா இருக்கவேண்டு மென்று கூறினேன். வெரிகுட் என்று சொல்லி கை கொடுத்தேன். ஒரு சிஸ்டர் போலவே நடத்தினேன். அநீதியை எதிர்த்து வழக்கு போடத் துணிந்த அந்தப் பெண்ணை ஜான்சி ராணி என்று பாராட்டினேன். சரியாகச் சொல்வ தென்றால், அந்தப் பெண்ணை ஒரு ஆணாகவே பாவித்தேன். அந்த மாதிரி எண்ணம் உள்ளவனாக இருந்திருந்தால், இந்த தொழிலில் இந்த அளவுக்கு நான் உயர்ந்திருக்க முடியாது. நான் விவேகானந்தா கேந்திரத்தில் பயிற்சி எடுத்தவன். நான் செய்தது தப்பாகக்கூட இருக்கட்டும். அதற்காக அந்தப் பெண், அந்த நேரத்தில் என்னை செருப்பால் அடித் திருந்தால்கூட தப்பில்லை. அந்தப் பெண் ஃப்ரீயாகப் பேசியதால் தங்கச்சி என்று நினைத்து தொட்டேன். இதற்குமுன், ஜூனியர் ஒருவரிடம் நான் தப்பாக நடந்து, பஞ்சாயத்து பண்ணினார்கள் என்பதை நிரூபித்துவிட்டால், செருப்புக்கு காலாக இருப்பேன். நடந்ததெல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்''’என்று உணர்ச்சிவசப்பட்டார்.

"ஒரு பெண்ணை அவளது அனுமதியில்லா மல், அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதத்தில், அத்துமீறி ‘தொடுவதும் முத்தமிடுவதும்’ சட்டப் படி குற்றம்தானே?''’ என்று நாம் கேட்டபோது “"மன்னித்துக் கொள்ளுங்கள்''’என்று கூலாகச் சொன்னார், வேல்தாஸ்.

"வெளியே தெரிந்தால் மானம் போய்விடும்' என்ற பெண்களின் அச்சமே, ஆண்களின் சில்மிஷ சீண்டலுக்கு அடித்தளமாக உள்ளது.

Advertisment

nkn151221
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe