ஐ.பி.கோட்டை! அழகிரி பேரவை! -திண்டுக்கல் தி.மு.க. நிலவரம்!

ip

"என்னை கட்சியில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார்னு பலமுறை சொல்லிட்டேன். ஆனால் அந்தப் பக்கத்திலிருந்துதான் எந்தப் பதிலும் இல்லை''’-இப்படியெல்லாம் மு.க.அழகிரி பலமுறை சொன்னாலும், தன்மீது கவனம் திரும்பும் என முயன்றுதான் பார்க்கிறார்.

iperiyasamy

அதில் ஒரு வழிதான் திண்டுக்கல் மாவட்டத்தில் அவரது என்ட்ரி. மாவட்டத்தில் இருக்கும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய நான்கு தொகுதிகளை தன்வசம் வைத்து தி.மு.க. இங்கு வலுவாகவே உள்ளது. மாஜி அமைச்சரும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமியின் கண்ட்ரோலில் இங்கு தி.மு.க. ஸ்ட்ராங்காக இருக்கிறது.

அதே நேரத்தில் ஐ.பி. மற்றும் அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோரால் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு இப்போது வலை வீச ஆரம்பித்திருக்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள். திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரேமசந்திரன், லேப் கண்ணன், பி

"என்னை கட்சியில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார்னு பலமுறை சொல்லிட்டேன். ஆனால் அந்தப் பக்கத்திலிருந்துதான் எந்தப் பதிலும் இல்லை''’-இப்படியெல்லாம் மு.க.அழகிரி பலமுறை சொன்னாலும், தன்மீது கவனம் திரும்பும் என முயன்றுதான் பார்க்கிறார்.

iperiyasamy

அதில் ஒரு வழிதான் திண்டுக்கல் மாவட்டத்தில் அவரது என்ட்ரி. மாவட்டத்தில் இருக்கும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய நான்கு தொகுதிகளை தன்வசம் வைத்து தி.மு.க. இங்கு வலுவாகவே உள்ளது. மாஜி அமைச்சரும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமியின் கண்ட்ரோலில் இங்கு தி.மு.க. ஸ்ட்ராங்காக இருக்கிறது.

அதே நேரத்தில் ஐ.பி. மற்றும் அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோரால் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு இப்போது வலை வீச ஆரம்பித்திருக்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள். திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரேமசந்திரன், லேப் கண்ணன், பிரபாகரன் ஆகியோர் 1995-லிருந்து அழகிரி பாசறை என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். அதை இப்போது அழகிரி பேரவையாக்கி, ஐ.பி.க்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களுக்கு வலைவீசி வருகின்றனர். (இதுகுறித்து நக்கீரன் ராங்-கால் பகுதியில் ஏற்கனவே எழுதியுள்ளோம்)

அவர்களின் முதல் இலக்கும் முக்கிய இலக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான ஒட்டன்சத்திரம் காளியப்பனும் வேடசந்தூர் காந்திராஜனும். இவர்கள் இருவரும் ஐ.பி.யால் ஓரங்கட்டப்பட்டவர்கள் என்கிறார்கள் ஆதரவாளர்கள். அதிலும் வேடசந்தூர் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஒக்கலிக கவுண்டர் சமூகத்தின் காந்திராஜனுக்கு கடந்த தேர்தலில் சீட் கிடைக்க விடாமல் ஐ.பி. முட்டுக்கட்டை போட்டதால் ரொம்பவே அப்செட் மூடில் இருக்கிறது காந்திராஜன் சமூகம்.

முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஐ.பெரியசாமி என்பதால் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வில் உள்ள மற்ற சமூகத்தினரைக் கணக்குப் போட்டுத்தான் காய் நகர்த்தி வருகிறது அழகிரி பேரவை. இதுகுறித்து பேரவையின் மும்மூர்த்திகளான பிரேமசந்திரன், பிரபாகரன், கண்ணன் ஆகியோரிடம் கேட்டபோது, ""ஐ.பி.யும் அவரது மகன் செந்தில்குமாரும் ஜாதி ரீதியாகவும் தங்களுக்கு ஆமாம் சாமி போடுபவர்களுக்கும்தான் கட்சியில் பதவியும் எம்.எல்.ஏ. சீட்டும் வாங்கித் தருகிறார்கள். மாவட்டத்தில் இருக்கும் 14 ஒன்றியங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கடந்த வாரம் மதுரையில் அழகிரி அண்ணனைச் சந்தித்தோம். அப்போது, அதிருப்தியில் இருக்கும் சீனியர்களை எப்படி அணுகுவது, பேரவையை எப்படி பலப்படுத்துவது என்பது பற்றி ஆலோசனைகள் வழங்கினார்.

ip

அதன்படி நாங்களும் களத்தில் இறங்கியிருக்கிறோம். மாவட்டத்தில் பெரும்பாலான அதிருப்தியாளர்கள் எங்கள் பக்கம் வருவது கன்ஃபார்ம் ஆனதும் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்திற்காக அழகிரி அண்ணன் திண்டுக்கல் வரும்போது, அவரது முன்னிலையில் பேரவையில் இணைவார்கள். அப்போது தெரியும் எங்க அண்ணனின் பலம் என்னவென்று''’’ என விரிவாகவே நம்மிடம் பேசினர்.

"அழகிரி பேரவையில் இணையப் போகிறீர்களா?' என முன்னாள் எம்.எல்.ஏ. காளியப்பனிடம் கேட்டபோது, ""தலைவர் எனக்கு 89-ஆம் ஆண்டு சீட் கொடுத்து ஜெயிக்க வைத்தார். அன்றிலிருந்து இன்றுவரை கட்சித்தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறேன். சுயமரியாதை உள்ள நான், அழகிரி பின்னால் கை கட்டி நிற்கவேண்டிய அவசியம் என்ன? இங்க (திண்டுக்கல்) இருக்கும் ஒரு பையனும் மதுரையிலிருந்து மன்னனும் என்னிடம் பேசியது உண்மைதான். தலைவர் கலைஞருக்குப் பின் தளபதி ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்ட நான், யார் பின்னாலும் போகமாட்டேன் என தெளிவாகச் சொல்லிவிட்டேன். என்போன்ற ஆட்களை வளைப்பதன் மூலம் தொகுதிக்கு 10 ஆயிரம் ஓட்டுக்களையாவது பிரிக்கலாம் என தப்புக்கணக்குப் போடுகிறார் அழகிரி. அது ஒருபோதும் நடக்காது''’என்றார் திட்டவட்டமாக.

ipsenthikumarஅடுத்ததாக காந்திராஜனிடமும் அதே கேள்வியைக் கேட்டோம். ""அ.தி.மு.க.விலிருந்து வந்த சில வருடங்களிலேயே தலைவர் எனக்கு எம்.பி. சீட் கொடுத்தபோது, "என்னய்யா உனக்கு எந்த எதிர்ப்புமே இல்லாம இருக்கு. சரியான ஆளைத்தான்யா ஐ.பி. ரெகமெண்ட் பண்ணிருக்காரு' என்றார். கொஞ்ச ஓட்டு வித்தியாசத்தில் நான் தோற்றாலும் தலைவர் சொன்ன அந்த வார்த்தை ஒண்ணே எனக்கு போதும். போன சட்டமன்றத் தேர்தலில் கூட, "வேடசந்தூர் தொகுதியை காங்கிரஸ் கேட்குது. ஆனா காந்தி நீ ஓ.கே.னா நான் உனக்கு சீட் வாங்கித் தர்றேன்'னு ஐ.பி. என்னிடம் சொல்லத்தான் செய்தார். எனக்கு அப்ப இருந்த நிதி நெருக்கடியால "அடுத்தமுறை பார்த்துக்கலாம்ணே' என ஐ.பி.யிடம் சொல்லிட்டேன். இதுதான் உண்மையே தவிர அண்ணன் ஐ.பி. ஒருபோதும் ஜாதி அரசியல் பண்ணியதே இல்லை''’என்றார்.

""மதுரையிலும் தேனியிலும் கொஞ்சபேர் அழகிரி பக்கம் இருக்கிறார்கள். ஆனால் திண்டுக்கல் தி.மு.க. ஐ.பி.யின் கோட்டை. இதில் ஓட்டை போட நினைக்கும் அழகிரியின் கனவு பலிக்காது''’’ என்கிறார்கள் மாவட்டத்தின் பெரும்பாலான உ.பி.க்கள்.

-சக்தி

nkn091018
இதையும் படியுங்கள்
Subscribe