வட இந்தியாவில் புதிதாக ஒரு பிரச்சனை வெடித்திருக்கிறது. இந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி கொண்டாடுவது போல் இஸ்லாமியர்களும் இஸ்லாமின் தூதரான முகமது நபி பிறந்த நாளை மிலாடி நபியாகக் கொண்டாடுகின்றனர். செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்படும் மிலாடி நபி விழாவுக்காக, செப்டம்பர் 4-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநி லம் கான்பூர் அருகேயுள்ள ரவாத்பூர் கிராம மக் கள், "ஐ லவ் முகமது' என்ற வாசகம் அச்சிட்ட பேனருடன் ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.

இதற்கு அக்கிராமத்திலுள்ள இந்துத்துவர் கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், ஊர்வலத்தில் இருந்தவர்களையும், பேனர்களையும் தடியால் அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர். உத்தரப்பிர தேச காவல்துறை இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட 21 பேர் மீது வழக்குப் பதிவுசெய்தது.
இதையடுத்து இந்த விவகாரம் உத்தரப் பிரதேசம் முழுவதும் பரவிய நிலையில், "ஐ லவ் முகமது' பேனர்களையும், போஸ்டர்களையும் மாநிலம் முழுவதும் பலரும் ஒட்டியிருக்கின்ற னர். விவகாரம் மாநிலத்தைத் தாண்டி மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரகாண்ட் மாநிலங்களுக்கும் பரவியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் செப்டம்பர் 26-ஆம் தேதி அப்பகுதி மதகுருவான மௌலானா வின் அழைப்பை ஏற்று ஐ லவ் முகமது போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டக் காரர்கள் ஊர்வலம் சென்றனர். முதலில் ஊர்வலத்துக்கு அனுமதியளித்த காவல்துறை கடைசி நேரத்தில் மறுப்புத் தெரிவித்திருக்கிறது. ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டு போராட்டக் காரர்கள் தடுக்கப்பட்டனர். போராட்டத்தை வாபஸ் பெறுவதற்கு தொடக்கத்தில் ஒப்புக்கொண்ட மௌலானா பின்பு மறுக்கவே நிலைமை மோசமடைந்தது. கும்பலைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இதேபோல மகாராஷ்டிர மாநிலம் அகில்யா நகரிலும் செப்டம்பர் 29-ஆம் தேதி லத்தி சார்ஜ் நடத்தப்பட்டுள்ளது. அகில்யா நகரில் சாலையில் "ஐ லவ் முகமது' என எழுதியது பிரச்சனையாகி மோதல் வெடித்துள்ளது. இவ்விவகாரத்தில் 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் இவ்விவகாரத்தை முன்வைத்து இந்தியாவெங்கும் 21 எஃப்.ஐ.ஆர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 1,324 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 68 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்குப் போட்டியாக உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவர்கள் சிவனின் உருவ பேனர்களுடன் ஊர்வலம் செல்வது, மசூதிகளின் அருகில் கூட்டமாகத் திரள்வது என போட்டி ஊர்வலங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதை யடுத்து உ.பி. அரசு இத்தகைய ஊர்வலங்களுக்கு கடும் கெடுபிடி விதிக்க ஆரம்பித்துள்ளது.