ரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியிருக்கிறது அந்தத் திருமணம். தி.மு.க.வின் திருவண்ணாமலை தெற்குமாவட்ட கழக துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன். முரசொலி கவிஞர் என்கிற அடைமொழியோடு தலைமைக் கழக பேச்சாளராகவும், 30 ஆண்டுகளாக ஊராட்சிமன்றத் தலைவராகவும் உள்ளார். இவர் இளம்வயது பெண் ஒருவருடன் மாலையும் கழுத்துமாக உள்ள ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

dmk

இதுபற்றி கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ""திருவண்ணாமலையைச் சேர்ந்த சாதாரண ஆட்டோ ஓட்டும் தொழிலாளியின் மகள் அபிதா. பிரபல தனியார் கல்லூரியில் பயிலும்போதே பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக பேசிக்கொண்டு இருந்தார். கல்லூரிப் படிப்பு முடித்தபின் நகரில் நடந்த இலக்கிய மேடைகளில் பேசத்தொடங்கிய அபிதாவுக்கு தி.மு.க. பிரமுகரான சாவல்பூண்டி சுந்தரேசன் அறிமுகமானார். சுந்தரேசன் உதவியால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சி, பட்டிமன்றத்தில் அபிதா கலந்துகொண்டார். பின்னர் தனி வீடு வாங்கித்தந்து அபிதாவை அதிகாரப்பூர்வமற்ற துணையாக வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தினார்.

Advertisment

68 வயதான சுந்தரேசனுக்கு மனைவி, மகன், மகள், பேத்திகள் உள்ளனர். வெளிநாட்டிலிருந்த சுந்தரேசன் மனைவி, மகன் ஆகியோருக்கு இந்த இரண்டாவது வீடு விவகாரம் தெரிந்து, குடும்பத்தில் புயல் வீசத்துவங்கியது. அபிதா இருந்த வீட்டுக்கே சென்று சக்களத்தி சண்டை போட்டனர். இது கட்சியின் மாவட்டத் தலைமை முதல் மாநில தலைமை வரை செல்ல, எந்த அரசியல்வாதிதான் சின்னவீடு வச்சிருக்கல என்கிற கேள்வியோடு பஞ்சாயத்து முடிந்தது.

விவகாரம் பெரியதானதும் 3 மாதத்துக்கு முன்பு சுந்தரேசன் - அபிதா திருமணம் சிம்பிளாக முடிந்தது. தற்போது சுந்தரேசனும் 28 வயதான அபிதாவும் மாலையும் கழுத்துமாக ஜோடியாகவுள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் யாரோ வெளியிட மீண்டும் சர்ச்சையானது. தனது இரண்டாவது திருமணத்தை பெரியார், கலைஞருடன் ஒப்பிட்டு, நானும் அதுபோன்ற சூழ்நிலையில் திருமணம் செய்துகொண்டேன் என்றார். இது கட்சியினரையே கடுப்பாக்கிவிட்டது.

Advertisment

இதுபற்றி நாம் சாவல்பூண்டி சுந்தரேசனிடம் கேட்டபோது, ""புது விவகாரம் போல் இதைக் கிளறிக்கொண்டு உள்ளார்கள்'' என ஒரே வரியில் முடித்துக்கொண்டார். 68 வயது தாத்தா, 28 வயது இளம்பெண்ணை மணந்தார் என சமூக வலைத்தளங்களில் கேலியும், கிண்டலும் செய்துகொண்டுள்ளனர் தி.மு.க. எதிர்ப்பாளர்கள். அத்துடன், சொந்தக் கட்சிக்குள் இருப்பவர்களே அதிகம் பரப்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-து.ராஜா