தன்னுடைய தற்குறி அரசியலுக்கு 41 உயிர்களை களப்பலி கொடுத்த நடிகர் விஜய், மீதமுள்ள மக்களைக் காப்பாற்றாமல் அங்கிருந்து எஸ்கேப்பானது ஊருக்கே தெரியும். இருந்தாலும், கரூரில் எங்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற வார்த்தைகளை பிரயோகிக்கிறது த.வெ.க. தரப்பு. இந்தவேளையில் விஜய்யை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் போட்டிபோட்டு வேலைசெய்தது. இதற்காக விஜய் அழைக்கவில்லை என்றாலும் விஜய்யுடன் நாங்கள் இருக்கின்றோம் என வாண்டடாக கூட்டணி என வண்டியைக் கட்டின அ.தி.மு.க., பா.ஜ.க.
"வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதியன்று உயிரிழந்த 41 குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்கூற கரூர் வருகின்றார் விஜய் என தங்களுடைய ஐ.டி. விங்க் மூலமாக பரப்பியது த.வெ.க. இதில், கரூர் - ஈரோடு பைபாஸ் சாலைக்கு அருகில் ரெட்டிபாளை யத்தில் இருக்கும் எக்ஸ் எம்.எல்.ஏ. வடிவேலுக்குச் சொந்தமான கே.ஆர்.வி. மெரிடியன் ஹோட்டலையும், தாந்தோனிமலைப் பகுதியிலுள்ள எஸ்.கே.பி. மஹால் என்ற திருமண மண்டபத்தையும் வி.ஆர்.எஸ். திருமண மகாலையும் த.வெ.க. நிர்வாகிகள் பார்வையிட்டுள்ளனர்.
இதில் கே.ஆர்.வி. மெரிடியன் ஹோட்டலும், வி.ஆர்.எஸ். திருமண மகாலும் அன்றைய தேதியில் புக் ஆகிவிட்டது. மிச்சமுள்ள எஸ்.கே.பி. மஹாலில் 300 நபர்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற தகவல் வர, காவல் துறையோ பந்தோ பஸ்துக்கு நாங்கள் பொறுப்பு என்றது. அதாவது, பேரி கார்டு அமைத்து பந்தோபஸ்து தரு கின்றோம் என்றார் கள். உண்மையான நிலவரப்படி அந்த எஸ்.கே.பி. மஹாலில் குறைந்தது 800 நபர்கள் அமரலாம், டைனிங்கில் 600 நபர்கள் அமரலாம் என்கின்றது மண்டப விவரம்.
த.வெ.க. பொறுப்பாளர்களில் ஒருவரான அருண்ராஜை அழைத்து, "முந்தைய இரு இடங் களும் புக் ஆகிவிட்டது. நீங்கள் அனுமதி வாங்கி யிருந்தால் மட்டுமே அங்கு பாதுகாப்பு கொடுக்க முடியும். இப்பொழுது எஸ்.கே.பி. மஹால் மட்டும் மிச்சம். அதையாவது புக் செய்யுங்கள். கடிதம் கொடுங்கள். கண்டிப்பாக பாதுகாப்பு கொடுப் போம்' என்றார் மாவட்ட உயரதிகாரி. பாதுகாப்பு கொடுக்கவேண்டியது மட்டும்தான் காவல்துறை யின் வேலை. மண்டபத்தை புக் செய்து தருவது எங்கள் வேலையா? அதை விடுத்து எங்களின் வருகையை தடைசெய்ய நினைக்கின்றது தமிழக அரசும், காவல்துறையும் என அருண்ராஜ் பொய் தகவலை பரப்புகின்றார். இது எந்தவகையில் நியா யம்..? காவல்துறையை கட்சி நடத்த சொல்கிறதா த.வெ.க...?'' என்கின்றது மாவட்ட காவல்துறை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/sangavi1-2025-10-30-16-23-40.jpg)
த.வெ.க.வின் பொய்களை காவல்துறை அடித்துத் துவைக்க, "உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட 41 குடும்பங்களை ஆறுதல்கூற அழைத்தார் நடிகர் விஜய். இதில் சில குடும்பங்கள் வருவதில் ஆர்வம்காட்டாததால், பலியானவர்களுடன் நெருக்கமான உறவுகளான தந்தை-தாய், மனைவி இவர்களை விடுத்து அடுத்தகட்ட உறவுகளை மகாபலிபுரத்திற்கு வரவழைத்துள்ளது. குறிப்பாகக் கூறவேண்டுமெனில் பலியான ரமேஷின் மனைவி உயிரோடிருக்க, அவரை விட்டுவிட்டு அவருடைய அக்காவையும், அக்கா கணவரையும் கூப்பிட்டு கணக்கு காண்பித்தது த.வெ.க. டீம்.
அக்டோபர் 28-ஆம் தேதி மாமல்லபுரம் தனியார் சொகுசு விடுதியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் விஜய். இதற்கு பதிலடியாக நடிகர் விஜய் வங்கிக் கணக்கில் செலுத்திய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பியனுப்பி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் கோடாங்கிப்பட்டியை சேர்ந்த சங்கவி.
இதுதொடர்பாக சங்கவியைத் தொடர்பு கொள்ள அவரது எண்ணிற்கு அழைத்த நிலையில், அவருடைய மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்தது. அவரைத் தேடியலைந்த நிலையில், "மரணமடைந்த 41 நபர்களில் கோடாங்கிப்பட்டியை சேர்ந்த ரமேஷும் ஒருவர். ராயனூர் பகுதியில் டெய்லர் வேலை பார்த்துவந்த ரமேஷிற்கு போயம்பள்ளியைச் சேர்ந்த சங்கவியை 2022-ல் திருமணம் செய்து வைத்தனர் பெரியவர்கள். ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலை யில் டெய்லர் வேலைக்கு ரமேஷ் செல்ல, குடும்ப வறுமை காரணமாக கரூரில் இருக்கும் ரேவதி மளிகைக்கடையில் வேலை பார்த்துவந்தார் சங்கவி. தற்பொழுது ரமேஷும், சங்கவியும் ராமகவுண்டனூர் பகுதியில் குழந்தை யுடன் வசித்து வந்த நிலையில், ரமேஷ் விஜய்யைப் பார்க்கச்சென்று கூட்டநெரிசலில் இறந்துபோனார். விஜய் அறிவித்தபடி ரூ20 லட்சம் சங்கவிக்கும் வந்தது. ஆறுதல் கூறுவதற்காக விஜய் மகாபலிபுரத் தில் காத்திருக்கின்றார்'' என த.வெ.க. -திருச்சி மாவட்ட செயலாளர், தொட்டியம் மாவட்டச் செயலாளர் இருவரும் நேரில்வந்து நான்கு மணி நேரம் காத்திருந்து குழந்தையின் எதிர்காலத்திற்காக நீங்கள் வரவேண்டும் என கூறி சங்கவியின் மனதை குழப்பிப் பார்த்தனர். ஆனால் சங்கவியோ, "ஆறுதல் சொல்ல வேண்டுமென்றால் விஜய்தான் வரவேண்டும்' என விடாப்பிடியாக இருந்ததால் வேறு வழியில்லாமல் கணக்கு காண்பிப்பதற்காக, அக்கா பூமதி, அவரது கணவர் அர்ஜுன், சின்ன மாமனார் பாலு ஆகியோரை சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. நிர்வாகிகள் குழு. இவர்கள் தனக்குத் தெரியாமல் சென்னைக்கு சென்றது தெரியவர... தனக்கு வந்த ரூபாய் 20 லட்சத்தை த.வெ.க.விற்கே திருப்பியனுப்பினார் சங்கவி. அவரின் செய்கை பாராட்டுக்குரியதே'' என்றார் சங்கவியின் உறவினர் ஒருவர்.
20 லட்சம் முக்கியமில்லை… ஆறுதல் சொல்பவர் நேரில் வர வேண்டியதுதான் முக்கியம் என தமிழ் பாரம்பரியத்துக்கு முன் னுரிமை தந்த சங்கவிக்கு அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துவருவது குறிப்பிடத்தக்கது.
சங்கவி விவகாரம் இப்படியிருக்க, த.வெ.க. நிர்வாகிகளிடமும் அருண்ராஜ் ஒரு படி மேலே சென்று, எந்த மீடியாவிற்கும் புகைப்படமோ, வீடியோவோ, செய்தியோ கொடுக்கக்கூடாது என கட்டளை யிட்டதும், குறிப்பாக 41 பேர் பலியானதில் எந்த ஊடகங்களெல்லாம் உண்மை பக்கம் இருக்கோ அவற்றைப் புறக்கணிக்கவேண்டும் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/sangavi2-2025-10-30-16-23-59.jpg)
மகாபலிபுரம் சென்ற குடும்பங்களுக்கு தனித்தனி அறைகளை புக் செய்து வைத்துக் கொண்ட த.வெ.க. டீம், "விஜய் உங்களுக்கு ஆறுதலளிப்பதற்காக காத்திருக்கின்றார். ஒவ்வொரு குடும்பமாக அவரைப் பார்த்து ஆறுதல் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றிருக்கிறார்கள். கரூருக்கு ஆறுதல் கூறப் போகாததே அதிகம். இதில் மாமல்லபுரத்துக்கு வந்தவர்களின் அறைகளுக்குக் கூட செல்ல விஜய்யால் முடியவில்லை. காலை 9.03 மணியிலிருந்து வந்தவர்களை தன் அறைக்கு அழைத்து ஆறுதல் கூறியிருக்கின்றார்.
கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த சந்திரா வின் உறவினர் முருகேசன் பேட்டியளிக்கையில், “உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவதாகவும், காப்பீடு மற்றும் கல்விச் செலவு உள்ளிட்ட எந்த உதவியாக இருந்தாலும் செய்து தருவதாகவும் விஜய் எங்களிடம் தனித்தனியாக பேசினார் என்றார். மேலும், கரூரில் உயிரிழந்த குடும்பத்தினரை சென்னை வரவழைத் துப் பேசுவதற்காக விஜய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார்.
"துயரத்தில் இருப்பவர்களை அழைத்து ஆறுதல் கூறுவதாகச் சொல்லி அனைத்து கேலிக் கூத்துகளையும் நிகழ்த்திவிட்டு அரசை யும், காவல்துறையும் குறைகூறு கின்றார். அவருடைய பேச்சை தண்ணீரில்தான் எழுதணும்'' என் கின்றனர் பொதுமக்கள்.
அரசியலுக்கு என ஒரு கலாச்சாரம் இருக்கிறது. ஒரு நடிகர் அரசியலுக்கு வரும்போது, அரசியல் களத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ளவேண்டுமே தவிர, அரசியலை சினிமா கொட்டாய் கலாச்சாரத்துக்கு மாற்றக்கூடாது. மாறாக, விஜய் அரசியலுக்கு வந்தது முதலே இன்னும் கேரவன் கலாச்சாரத்தில் இருக்கிறாரே தவிர, அரசியல் கலாச்சாரத்துக்கு மாற மறுக்கிறார் என்பதையே மாமல்லபுரம் சம்பவம் காட்டுகிறது.
_______________
இறுதிச் சுற்று!
பசும்பொன்னில்இணைந்த கைகள்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/sangavibox-2025-10-30-16-24-11.jpg)
முத்துராமலிங்க தேவரின் 118ஆவது ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழாவிற்கு, மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக இருவரும் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். மேலும் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக அஞ்ச- செலுத்தி கூட்டாக செய்தி யாளர்களைச் சந்தித்தார்கள். அதன்பிறகு சசி, ஓ.பி.எஸ்., செங்ஸ் மூவரும் சந்தித்து பேசினார்கள்.
-ஆதித்யா
பரபரப்பான ஏற்படுத்திய தேவர் பூஜை
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/sangavibox1-2025-10-30-16-24-23.jpg)
30ம் தேதி அரசியல் கட்சித்தலைவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என்ற நிலையில், இந்திய குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அக்டோபர் 29 அன்றே கோவை விமான நிலையத்திலிருந்து ராணுவ தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந் தார். இதே வேளையில் தென்காசியில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார். மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த இந்திய குடியரசு துணைத்தலைவரை மரியாதை நிமித்தமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் புதிய அதிர்வுகளை உண்டாக்கியது. இதேவேளையில், அ.தி.மு.க.வால் பிரிந்து கிடக்கும் முக்குலத்து சமூக வாக்குகளை தாங்கள் எப்படியும் அறுவடை செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்திய குடியரசு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணனை பசும்பொன்னிற்கு அனுப்பியது பா.ஜ.க.
எடப்பாடி பழனிச்சாமியின் வருகையின்போது பிரச்சினை ஏற்படலாம் என்ற நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரோ, "முக்குலத்து பேரவை மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் இணைந்து நடத்தவுள்ள அன்னதானக்கூடத்தை பழனிச்சாமி திறக்கவுள்ளார்'' என சமூக மக்களிடம் பேசியது பழனிச் சாமிக்கு எதிரான எதிர்ப்பை குறைத்தது என்றே கூறலாம்.
காலையிலேயே பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா சகிதமாக இந்திய குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பசும்பொன்னாருக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்திய நிலையில், அடுத்ததாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, நேரு, ராஜ கண்ணப்பன், மூர்த்தி ஆகியோருடன் பசும்பொன்னிற்கு வந்து தேவர் திருமகனாருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய கையோடு, பசும்பொன்னார் வாழ்ந்த இல்லத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தார். பசும்பொன் தேவர் திருமகனா ருக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வைகோவும் மரியாதை செலுத்திவிட்டுக் காத்திருப்பதை யறிந்து சீமான் வழிவிட்டார். சீமானை அரவணைத்து, தேர்த-ல் வெற்றிபெற வாழ்த்திய வைகோ, "சீமான் தமிழ் உணர்வை ஊட்டி வளர்ப்பவர்' என்றார்.
தேவர் நினைவிடத்தில் மூ.மு.க. தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மரியாதை செலுத்த தனது ஆதரவாளர்களுடன் வந்தபோது அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட, வழிபாடு நடத்தும் பூசாரிகள் மீது தாக்குதல் நடந்தது. இதையடுத்து நடந்த வாக்குவாதத்தில், ஸ்ரீதர் வாண்டையார் ஆதரவாளர்களோடு தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த செங்கோட்டையன் சமாதானம் செய்யவும், அங்கிருந்து கிளம்பினர். சசிகலா தனது ஆதரவாளர்களுடன் வந்து அஞ்ச- செலுத்தினார்.
-வேகா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/30/sangavi-2025-10-30-16-23-09.jpg)