நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியில் சேரப் போகிறேன் என்பதை தெளிவு படுத்துவேன் எனத் தெரிவித்திருந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் நடிகர் சத்யராஜ் மகளுமான திவ்யா சத்யராஜ், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். நக்கீரனுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்...
திவ்யா சத்யராஜ் பின் னணி என்ன?
பள்ளிப் பருவத்திலேயே சக மாணவர்களுக்கு உதவும் மனப் பான்மை எனக்கு உண்டு. அரசுப் பள்ளிகளுக்கு செல்வதும், அவர் களுக்கு உதவுவதும் அவர்களோடு பிறந்தநாளை கொண்டாடுவதுமாக இருந்தேன். அதனைத் தாண்டி மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என ஆசை இருந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஊட்டச்சத்து நிபுணராக எனது தொழிலை தொடங்கும்போது "மகிழ்மதி இயக்கம்' என ஆரம்பித்தேன். இந்த தொண்டு நிறுவனம் முழுக்க முழுக்க எனது உழைப்பின் மூலம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பலதரப்பட்ட மக்களை சந்திக்கும்போது, அவர்களுடைய பிரச்சினைகள் தெரியவந்தது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்வது இல்லை. காரணம், அதற்கான பொருளாதாரம் அவர்களுக்கு இல்லை. எங்களால் முடிந்தவரை ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அந்த மக்களுக்கு வழங்கி வருகிறோம். சிறு வயதாக இருக்கும்போது எனது வீட்டில் அரசியல், சினிமா தொடர்பான பேச்சுக்களும், விவாதங்களும் நடக்கும். விவரம் தெரிந்த நாள் முதல் நானும் அதில் பங்கேற்பேன். அரசியலில் பயணிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு.
நிறைய கட்சிகள் இருக்கின்றன, தி.மு.க.வை தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்?
தி.மு.க. மீது சிற

தி.மு.க. மீது சிறுவயதில் இருந்தே ஒரு ஈர்ப்பு உண்டு. கட்சி தொடங்கப்பட்ட வரலாறை நான் படிக்கும்போது கட்சிமீது மேலும் மரியாதை உயர்ந்தது. எல்லா மதங்களுக்கும் மரியாதை தரும் கட்சி. ஊட்டச்சத்து நிபுணராக முழு ஈடுபாட்டுடன் இருக்கும்போது தி.மு.க. கொண்டு வந்த காலை சிற்றுண்டி திட்டத்தை மனதார வரவேற்றேன். இந்தத் திட்டத்தை நான் வரவேற்கும்போது, "இவருக்கு என்ன தெரியும்... காலை சிற்றுண்டி திட்டம் நல்லாவே இல்லை' என விமர்சித்தார்கள். எது ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு, எது ஊட்டச் சத்து குறைந்த காலை உணவு என்று ஊட்டச்சத்து நிபுணரான எனக்குத் தெரியும் என பதிலடி கொடுத்தேன்.
புதுமைப் பெண் திட்டம், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை என பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி தி.மு.க. கலைஞரின் குடும்பத்திலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து முன்னுதாரணமாக இருக்கிறார்கள். கனிமொழிக்கு அரசியலில் இருக்க விருப்பம், இன்று எம்.பி.யாக இருக்கிறார். கிருத்திகா உதயநிதிக்கு இயக்குனராக விருப்பம், "காதலிக்க நேரமில்லை' படத்தை இயக்கியிருக்கிறார். "எந்த துறையில் விருப்பமோ அந்த துறையில் பயணம் செய்யுங்கள்' என தனது வீட்டுப் பெண்களையும் ஊக்கப்படுத்துகிறார்கள்.
2021 தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்கும்போது கொரோனா காலகட் டம். மிகச்சவாலான நேரம். அந்த காலகட் டத்தில் எனக்கு ஒரு பல்கலைக்கழகம் சார் பில் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக் கிறார்கள். அதற்கு போகலாமா, வேண்டாமா எனப் பயந்தேன். உலகமே வெளியில் போக லாமா, வேண்டாமா என பயந்த நேரம். எல்லோரும் பயந்த காலத்தில் கொரோ னாவை தைரியமாக எதிர்கொண்டவர் ஸ்டாலின். அவர் முதல்வரான பின்னர்தான் கொரோனாவே குறைய ஆரம்பித்தது.
பா.ஜ.க. என்ன செய்தது? வீட்டு பால்கனியில் விளக்கு ஏற்றச் சொன்னார் பிரதமர். ஒரு பிரதமர் இப்படி சொல்ல லாமா? தடுப்பூசி பிரச்சினை இருந்தது. அந்த நேரத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக இருந்தது பா.ஜ.க. அரசு. வெள்ளம் வந்தபோது பா.ஜ.க. அரசு என்ன செய்தது? இங்கிருந்த பா.ஜ.க. என்ன செய்தது? ஆளும்கட்சியை விமர்சனம் செய்யும் விஜய், அரசியலுக்கு வருகிறோம் என்று முடிவு செய்த பிறகுதான் உதவி செய்ய முன்வந்தார். அதற்கு முன் என்ன செய்தார்?
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக விவகாரத் தில் சொல்கிறார்கள். அந்த விவகாரத்தில் கைது நடவடிக்கையை அரசு செய்தது. விசாரணை செல்கிறது. லண்டன் சென்று வந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் சவுக்கால் அடித்துக்கொண்டார். தி.மு.க. அரசு போகும் வரை செருப்பு அணிவதில்லை என்கிறார். சத்தியமா ஒன்று சொல்கிறேன். அண்ணே (பா.ஜ.க. மா.தலைவர்) தயவுசெய்து செருப்பு போடுங்க. செருப்பு போடாம முள்ளு குத்தினால் எங்களை குறை சொல்லுவீங்க. ஏனென்றால் 2026ல் எங்களை வீழ்த்த முடியாது.
அப்பாவுக்கு அரசியல் பார்வை அதிகம், அதனை ஒட்டிய கருத்துக் களும் தெரிவிப்பார். அப்பா என்ன சொன்னார்?
என்மீது பெற்றோர் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த முடிவை சொன்னபோது, "மக்கள் பணி செய்யும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இதில் ப்ளஸ், மைனஸ் இரண்டும் இருக்கும். நல்லா முடிவு பண்ணிட்டியா?' என்றார். "தகப்பனாக, நண்பனாக எந்த உதவியும் செய்யத் தயார், உன் உழைப்பு மீது நம்பிக்கை உள்ளது' என்றார்.
அப்பாவின் புகழைப் பயன்படுத்தி தி.மு.க.வில் சேர்ந்தீர்களா?
ஊட்டச்சத்து நிபுணர் பணிக்காக பிரசாந்த் மருத்துவ மனைக்கு சென்றபோது இரண்டு மணி நேரம் இன்டர்வியூ நடந்தது. பணிக்கு சேர்ந்து சில நாட்களுக்கு பிறகுதான் சத்ய ராஜ் மகள் என தெரிந்து அடடே என்றார்கள். எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்பது முழுக்க, முழுக்க நான் எடுத்த முடிவு. அதில் அப்பா தலையிடவே இல்லை. அப்பாவின் புகழைப் பயன்படுத்தி எந்த இடத்திலும் செல்லவில்லை. கருப்பு சிவப்பு வளையல், கருப்பு சிவப்பு சேலை என கட்சியில் சேருவதற்காக தயாராகிக்கொண்டிருந்தேன். நகத்துக்கு Nail polish மட்டும்தான் கருப்பு சிவப்பு அடிக்கவில்லை என்று அப்பா கலாய்த்தார்.
கட்சியில் சேரும்போது முதல்வர் என்ன சொன்னார்?
மிக சந்தோஷமாக வரவேற்றார். என்னுடைய மகிழ்மதி இயக் கம் தொடங்குவதற்கு முன்பே ஸ்டாலினை சந்தித்து, தொண்டு நிறு வனம் ஆரம்பிப்பதை தெரிவித்தேன். அப்போது தி.மு.க. ஆளும்கட்சி கிடையாது. வாரிசு அரசியல் என எல்லோரும் சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஸ்டாலினின் உழைப்பு சின்ன வயதிலிருந்தே பிடிக்கும் என்பதால் மகிழ்மதி இயக்கம் தொடங்குவதை தெரிவித்து, அப்போதே வாழ்த்து பெற்றேன்.
பெண்களுக்காக தி.மு.க. நிறைய செய்கிறது என்கிறீர் கள். மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் எல்லாமே வாக்கு அரசியலுக் காக தி.மு.க. செய்கிறது என்ற விமர்சனம் இருக்கிறதே?
இந்த விமர்சனத்தை ஏற்க முடியாது. 2026ல் தி.மு.க.வை வெல்ல முடியாது என்பதால், குறை சொல்ல எதுவும் இல்லை என்பதால் இதனைச் சொல்கிறார்கள். எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண்களை அவமரியாதையாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களை நீக்கம் செய்தது தி.மு.க. தலைமை. இதேபோல் வேறு எந்தக் கட்சியும் செய்யாது. இது ஒன்றே போதும் பெண்களை மதிக்கும், பாதுகாக்கும் இயக்கம் தி.மு.க. ஒன்றுதான் என்பதற்கு.
பெரியார் சிந்தனைகள், பெரியார் மண் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது... அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் ஒரு பெரியாரிஸ்ட். பெரியார் குறித்து யார் எதிராகப் பேசினாலும் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
யாராக இருந்தாலும் பொதுவாழ்க்கை, அரசியல் என வந்துவிட்டால் விமர்சனம் கடுமையாக இருக்கும். அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா?
தயாராக இருக்கிறேன். அப்பாவை துணைக்கு அழைக்கமாட் டேன். இது என்னோட போர்க்களம்... தனியாக நின்று சந்திப்பேன்.
பா.ஜ.க.வில் அழைப்பு வந்ததா?
2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது எனக்கு பா.ஜ.க.விலிருந்து அழைப்பு வந்தது. பா.ஜ.க.வே வேண்டாம் என மறுத்துவிட்டேன்.
தி.மு.க.வில் சேர்ந்த பின்னர் அடுத்த மேயர் என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடப்படுகிறது. எம்.பி. சீட்டா, எம்.எல்.ஏ. சீட்டா, மேயர் சீட்டா? எது உங்களது விருப்பம்?
இதையெல்லாம் தலைவர்தான் முடிவு செய்யணும். பதவிக்காகவோ, தேர்தலில் நிற்கவோ அரசியலுக்கு வரவில்லை. மக்கள் பணி செய்வதற்குத்தான் தி.மு.க.வில் இணைந்தேன். தலைவர் என்ன சொல்கிறாரோ, அதனைத் தட்டாமல் செய்வதே எனது பணி.
சந்திப்பு: -வே.ராஜவேல்