கொடநாடு கொலை வழக்கின் புதிய திருப்பமாக கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் டீமால் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தக் கைதுகளின் பின்னணி குறித்து போலீசாரிடம் விசாரித்தோம்.

dhanapal

ஆரம்பத்தில் இருந்தே தனபால் மாற்றி மாற்றி பேசி வந்தார். "2017-ல் எடப்பாடி பழனிச்சாமிதான் என் தம்பி கனகராஜின் மரணத்திற்கு காரணம் எனச் சொன்னார் . அதற்குப் பிறகு அவர் சில இடங்களில் மாற்றி மாற்றிப் பேசினார். இடையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டதாக செய்திகள் கசிந்தபோது, மறுபடியும் எடப்பாடி பழனிச்சாமிதான் கனகராஜை அடித்துக் கொன்றுவிட்டு விபத்தில் சிக்கி இறந்துபோனதைப் போல காண் பித்துவிட்டார்கள் எனப் பேசினார்.

இவரும், கனகராஜின் உறவினர் ரமேஷும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை வைத்தே அவர்கள் இரு வரையும் கைது செய்து விசாரித்தோம். அந்த விசாரணை கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்தது. அப்போதுதான் அந்த உண்மையைச் சொன்னார் தனபால்.

Advertisment

dd

"ஆமாம் சார், கனகராஜ் வைத்திருந்த பட்டன் போனைத்தான் போலீசிடம் ஒப்படைத் தேன். கனகராஜ் உபயோகப்படுத்திய ஆண்ட் ராய்டு போனில் நிறைய ஆதாரங்கள் இருந்தன. அந்த போனை சிலர் எரிக்கச் சொன்னார்கள். நான்தான் அதை எரித்துவிட்டேன்'' என ஒப்புக் கொண்டார்.

ff"யார் எரிக்கச் சொன்னார்கள்?' என்கிற கேள்விக்கு தனபாலிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. கூடிய சீக்கிரம் எப்படியும் அந்த உண்மையை வரவைத்து விடுவோம். இந்த கொலைக்குப் பின்னால் இருக்கும் எடப்பாடியை முன்னுக்கு கொண்டுவந்துவிடுவோம் என்கிறார்கள் உண்மையாய்.

Advertisment

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட தனபால் மற்றும் ரமேஷ் இவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 201, 211, 404 பிரிவுகளின் கீழ் சாட்சி களை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்லவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

f

கூடலூர் சிறையில் இருவரையும் அடைத்த நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வரும் கோத்த கிரி ஆய்வாளர் வேல்முருகன் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன் றத்தில் இருவரையும் தங்க ளது கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து கனகராஜின் சகோதரர் தனபாலை தற்போது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, கனகராஜின் சகோதரர் தனபாலை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 5 நாட்கள் அனுமதியளித்து உத்தர விட்டிருக்கிறார்.

இந்நிலையில் கொடநாடு வழக்கின் வழக்கறிஞரான விஜயனோ, "இந்த கொடநாடு வழக்கு சரியான திசையில் போய்க்கொண்டி ருப்பதாக எல்லோரும் உணர்ந்துகொண்டிருந்த நிலையில்... சற்று திசை மாறுவதாக ஒரு தோற்றம் தென்படுகிறது. சரியான கோணத்திற்கு திரும்பவும் வர வேண்டும் என்பதில் போலீசார் உறுதியாய் செயல்பட வேண்டும்'' என்கிறார்.