(2) சபாஷ் சரியான போட்டி!
எனக்கும் பானுமதிக்கும் நடிப்பு விஷயத்தில் போட்டி. அது எப்போது நடந்தது என்கிறீர்களா? அது எங்களை அறியாமலேயே ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்துவிட்டது.
அந்தக் காலத்தில் நட்சத்திரங்களிடையே போட்டியிருந்தது... பொறாமை இருந்ததில்லை. எனக்கும் பானுமதிக்கும் நடிப்பில் போட்டி நடப்பதுபோல ஒரு சம்பவம் படப்பிடிப்பில் நடந்தது. இதை நான் கவனிக்கவில்லை. ஏவி.எம்.குமரன் கவனித்து பதிவு செய்திருக்கிறார்.
ஏவி.எம். தயாரித்த "அன்னை' படத்தில் நான் தங்கையாகவும், பானுமதி அக்காவாகவும் நடித்தோம். கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ஷன். வசனம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அதில் பெற்ற தாய்க்கும், வளர்ப்புத் தாய்க்குமான பாசப் போராட்டத்தைக் காட்டும் ஒரு உணர்ச்சிகரமான கட்டம். பெற்ற தாயாக நானும், வளர்ப்புத் தாயாக பானுமதியும் அந்தக் குழந்தையின் மீது யாருக்கு அதிக உரிமையிருக்கிறது என்பதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினோம்.
அந்தக் காட்சியில் யார் சிறப்பாக நடித்தார் கள்? இரு தாய்களின் உரிமைப் போரில் யாருடைய நடிப்பு உணர்வுப்பூர்வமாக வெளிப்பட்டது என்பதை நான் சொல்வதை விட பொதுமனிதராக தயாரிப்பாளர் ஏவி.எம்.குமரன் அன்றைக்கு நடந் ததை, படப்பிடிப்புத்தளத்தில் அவர் பார்த்ததை அவருடைய வார்த்தைகளில் தருகிறேன்.
ஒரே வீட்டில் கண்ணெதிரே வளர்ந்துவரும் குழந்தையை வேறு எவருக்கோ பிறந்ததுபோல் அ
(2) சபாஷ் சரியான போட்டி!
எனக்கும் பானுமதிக்கும் நடிப்பு விஷயத்தில் போட்டி. அது எப்போது நடந்தது என்கிறீர்களா? அது எங்களை அறியாமலேயே ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்துவிட்டது.
அந்தக் காலத்தில் நட்சத்திரங்களிடையே போட்டியிருந்தது... பொறாமை இருந்ததில்லை. எனக்கும் பானுமதிக்கும் நடிப்பில் போட்டி நடப்பதுபோல ஒரு சம்பவம் படப்பிடிப்பில் நடந்தது. இதை நான் கவனிக்கவில்லை. ஏவி.எம்.குமரன் கவனித்து பதிவு செய்திருக்கிறார்.
ஏவி.எம். தயாரித்த "அன்னை' படத்தில் நான் தங்கையாகவும், பானுமதி அக்காவாகவும் நடித்தோம். கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ஷன். வசனம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அதில் பெற்ற தாய்க்கும், வளர்ப்புத் தாய்க்குமான பாசப் போராட்டத்தைக் காட்டும் ஒரு உணர்ச்சிகரமான கட்டம். பெற்ற தாயாக நானும், வளர்ப்புத் தாயாக பானுமதியும் அந்தக் குழந்தையின் மீது யாருக்கு அதிக உரிமையிருக்கிறது என்பதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினோம்.
அந்தக் காட்சியில் யார் சிறப்பாக நடித்தார் கள்? இரு தாய்களின் உரிமைப் போரில் யாருடைய நடிப்பு உணர்வுப்பூர்வமாக வெளிப்பட்டது என்பதை நான் சொல்வதை விட பொதுமனிதராக தயாரிப்பாளர் ஏவி.எம்.குமரன் அன்றைக்கு நடந் ததை, படப்பிடிப்புத்தளத்தில் அவர் பார்த்ததை அவருடைய வார்த்தைகளில் தருகிறேன்.
ஒரே வீட்டில் கண்ணெதிரே வளர்ந்துவரும் குழந்தையை வேறு எவருக்கோ பிறந்ததுபோல் அதனிடம் பாசம் காட்ட முடியாமல் ஏங்கித் தவிக்கும் தாய்க்கும், அடுத்தவள் குழந்தை என்று தெரிந்துவிட்டால் தன்மீதுள்ள பாசம் குறைந்து வெறுப்பு வந்துவிடுமே என்று பயந்து, அந்தக் குழந்தையை பெற்றவளிடம் நெருங்கவிடாமல் கண்காணித்துவரும் வளர்ப்புத் தாய்க்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டம்தான் படத்தின் கதை.
குழந்தை வளர்ந்து பெரியவனாகிறான். ஒருகட்டத்தில் அவனுக்கு கடுமையான காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாய் கிடக்கிறான். பிள்ளையின் அருகிலேயே வளர்ப்புத் தாய் இருந்து கண்கொட் டாமல் பாதுகாக்கிறாள். பிள்ளையை நெருங்க முடியாமல் பெற்ற தாய் கலங்குகிறாள். காவலை மீறி பிள்ளையைப் பார்க்க அருகில் செல்கிறாள்.
கோயிலுக்குச் சென்று மகனுக்காக மனம் உருகி வேண்டிக்கொண்டு குங்குமம், திருநீறு கொண்டுவருகிறாள் பெற்ற தாய் சௌகார் ஜானகி. இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக பின்வாசல் வழியாக நுழைந்துவிடுகிறார். பிள்ளையின் அருகில் மெதுவாகச் சென்று நெற்றியில் திருநீறு பூசும்போது சுவர்க் கடிகாரம் சத்தமிட்டதும், கட்டிலின் அருகில் உட்கார்ந்து உறங்கிக்கொண்டிருந்த வளர்ப்புத் தாய் விழித்தெழுந்து, பெற்ற தாயைப் பார்த்ததும் திடுக்கிடுகிறாள். கோபமாக அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் வீட்டின் கீழ்த்தளத்தில் தள்ளிவிட்டு திட்டுகிறாள். எதுவும் பேச முடியாமல் கண்ணீர் வடிக்கிறாள் தங்கை.
"கைகளில் தூக்கி, மார்பில் தாங்கி என் பிள்ளையை நான் வளர்க்காமல் இருக்கலாம், பத்து மாதம் இந்த வயிற்றில் சுமந்திருக்கிறேனே... பெற்றெடுத்த பிள்ளை என் கண்முன்னே உணர்வற்றுக் கிடப்பதை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும் அக்கா'' என்று கலங்கி அழுவார் சௌகார் ஜானகி.
இருவரும் சேர்ந்து இப்படி உணர்ச்சிமய மான காட்சியில் நடிக்கும்போது, பெற்ற பாசத்தில் கதறும் சௌகார் ஜானகியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. பானுமதி சிறப்பாக நடித்தாலும், பெற்ற தாயின் கதறலுக்குத்தான் ரசிகர்களிடம் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதனால் தன்னுடைய நடிப்புத் திறன் எடுபடாமல் போய்விடுமோ என்று அஞ்சிய பானுமதி, சௌகார் ஜானகி உணர்ச்சிபொங்க நடித்துக்கொண்டிருக்கும்போது, தனக்கு இருமல் வந்துவிட்டது போல இரும ஆரம்பித்துவிட்டார்.
இருமலின் பாதிப்பு அதிகமாக இருக்கவே... டைரக்டர் "கட்' சொல்லிவிட்டார்.
அந்தக் காலத்தில் டப்பிங் செய்வது கிடையாது. படப்பிடிப்பு நடக்கும்போதே "லைவ்'வாகத்தான் (லைவ் சவுண்ட்) வசனத்தை பதிவு செய்தாகவேண்டும். அதனால் "ஷாட்'டை அடுத்த டேக் எடுக்கும்போது முதல் டேக்கில் நடித்த அளவுக்கு சௌகார் ஜானகி யால் செய்ய முடியவில்லை. பானு மதியின் உள்நோக்கத்தை அறிந்து கொண்ட டைரக்டர், பிறகு அந்தக் காட்சியை தனித் தனியாக எடுத்தார். பானுமதியின், சௌகார் ஜானகியின் உணர்வுகளை தனித் தனி ஷாட்டாக எடுத்து, அவர்களின் திறமையான நடிப்பை பதிவு செய்தார்.
(பானுமதி ஒரு உணர்ச்சிப் பூர்வமான நடிப்பின்போது அப்படி இருமியதற்குக் காரணம்... ஒரு நூலிழை அளவு மீறினாலும் தன் நடிப்பு வில்லித்தனமாய்போய்விடும் என்பதால்தான் என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்)
"பெற்ற தாய்க்கும், வளர்ப்புத் தாய்க்குமான இந்தப் பாசப் போராட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது' என்று ஏவி.எம். குமரன் பதிவு செய்திருப்பது உண்மைதான்.
என்னை பட்டு மாமியாக உருவாக்கியதும், பட்டு மாமியின் நடை, உடை, பாவனை, துள்ளலான பேச்சு... என்று அசல் பட்டு மாமியாக உருவாக்கி திரைப்படத்தில் உலவவிட்டு அழகு பார்த்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.
இந்த தலைமுறைக்கு என்னைப் பற்றி பெரிதாகத் தெரிய நியாயமில்லை. எனவே நான் எப்படி? என் நடிப்பு எப்படி? என் பழக்க வழக்கம் எப்படிப்பட்டவை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, டைரக்டர் பாலசந்தர் என்னைக் குறித்து சொன்னவைகளை அப்படியே வார்த்தை மாறாமல் தருகிறேன் அடுத்த இதழில்!
(பேசுறேன்...)
___________
பட்டு மாமியின் குட்டி டீச்சர்கள்!
கடந்த 70 வருட ரீல் வாழ்விலும், ரியல் வாழ்விலும் பல தலைமுறைகளைப் பார்த்துவிட்டார் சௌகார் ஜானகி. அவரது கலை வாரிசான மகள்வழி பேத்தி வைஷ்ணவி 1989ல் பாண்டியராஜன் ஜோடியாக, நாயகியாக "நெத்தியடி' மற்றும் தலைவனுக்கோர் தலைவி, சந்தனக் காற்று, புலன் விசாரணை, தர்மதுரை, வா அருகில் வா, ஒரு வீடு இரு வாசல், நாட்டாமை, மகாபிரபு, மாநகர காவல் என தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், திருமணமானதும் நடிப்பை நிறுத்திவிட்டார். சில நடிகைகளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துவருகிறார். சமீபத்தில் "ராக்கெட்' படத்தில் சிம்ரனுக்கு குரல் கொடுத்தார். வைஷ்ணவியின் கணவர் அரவிந்த் ஓர் ஒளிப்பதிவாளர். பேத்தி வைஷ்ணவி வழி மகள்கள், சௌகார் ஜானகியின் கொள்ளுப் பேத்திகள்தான் பட்டு மாமியின் கம்ப்யூட்டர், சமூக வலைத்தள டீச்சர்கள். தனது கொள்ளுப் பேத்திகளிடம் கம்ப்யூட்டர் இயக்கவும், இ-மெயில் அனுப்பவும், சமூக வலைத்தளங்களில் இயங்கவும், ஐ-பேடு இயக்கவும் கற்றுக்கொண்டாராம்.
_______________
இறுதிச் சுற்று!
"பெரியார்' உலகம்! காசோலை வழங்கிய முதல்வர்!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 18, சனிக்கிழமையன்று, அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகளோடு பெரியார் திடலுக்கு வந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை சந்தித்து, திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பறைசாற்றும் அறிவுக்கருவூலமாக, தந்தை பெரியாரின் சிந்தனைகளையும், அறிவுச்செல்வத்தையும் எடுத்துரைக்கும் வகையில், திருச்சி மாவட்டம், சிறுகனூரில் அமைக்கப்பட்டுவரும் "பெரியார் உலகம்' பணிக்காக, தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத கால சம்பளத்தொகையான 1 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
-கீரன்
படம் உதவி: ஞானம்