(9) கல்யாணம் நின்னுப்போச்சு!
"எப்போ உங்க அப்பா, அம்மா அவரை நீ கல்யாணம் செய்துக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களோ, அப்பவே நீ வீட்டை விட்டு வெளியேறி அவரைக் கல்யாணம் செய்திருக்கணும், அதை செய்யத் தவறிட்டே' என்று தோழி சுகுணா சொன்னதும், அவளது பைத்தியக்காரத்தனமான பேச்சைக் கேட்டு அந்த வேதனையிலும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
"சுகுணா நீ சுலபமா சொல்லிட்டே, அக்கரையைக் கடந்தா ஆபத்து. வீட்டு வாசற்படியை தாண்டிட்டா எனக்கு மாத்திரம் ஆபத்தில்லை, அவருக்கு அது தலைகுனிவு. அப்புறம் நான் வெளியேறி வந்திருந்தா நிம்மதியா வாழ முடியும்னு நம்புறியா? வேறு மாதிரி புது வேதனை வந்து ஒட்டிக்கொண்டு, மனதை அரிக்க ஆரம்பிச்சுடும். அவங்க யாரு...?''
சுகுணா இதற்கு பதிலே பேசவில்லை.
நான் உள்ளே போய் என் திருமண பத்திரிகைகளில் ஒன்றை எடுத்து வந்தேன். என் கையாலேயே கவரின் நான்கு முனைகளிலும் மஞ்சள் தடவினேன். அவரது பெயரை (என் அன்பர்) எழுதி சுகுணாவிடம் கொடுத்தேன். "சுகுணா அவரிடம் சொல். இந்தத் திருமணம் என் பூரண விருப்பத்தின் பேரிலோ, சம்மதத்தின் பேரிலோ நடக்கவில்லை. என் கையைவிட்டு மாறிப்போன ஒரு சக்தியே இதற்குக் காரணம்னு அவரிடம் எடுத்துச் சொல்லு. தயவு செய்து என்னைத் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று நான் மன்றாடி கேட்டுக் கொண்டதாகவும் அவரிடம் சொல்லு'' என்றேன்.
வேதனையின் உஷ்ணத்தினால் ஈரம் வறண்டு போன தொண்டையில் இருந்து வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. எப்படியோ சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு, நான் மௌனமாக அழ ஆரம்பித்துவிட்டேன்.
(9) கல்யாணம் நின்னுப்போச்சு!
"எப்போ உங்க அப்பா, அம்மா அவரை நீ கல்யாணம் செய்துக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களோ, அப்பவே நீ வீட்டை விட்டு வெளியேறி அவரைக் கல்யாணம் செய்திருக்கணும், அதை செய்யத் தவறிட்டே' என்று தோழி சுகுணா சொன்னதும், அவளது பைத்தியக்காரத்தனமான பேச்சைக் கேட்டு அந்த வேதனையிலும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
"சுகுணா நீ சுலபமா சொல்லிட்டே, அக்கரையைக் கடந்தா ஆபத்து. வீட்டு வாசற்படியை தாண்டிட்டா எனக்கு மாத்திரம் ஆபத்தில்லை, அவருக்கு அது தலைகுனிவு. அப்புறம் நான் வெளியேறி வந்திருந்தா நிம்மதியா வாழ முடியும்னு நம்புறியா? வேறு மாதிரி புது வேதனை வந்து ஒட்டிக்கொண்டு, மனதை அரிக்க ஆரம்பிச்சுடும். அவங்க யாரு...?''
சுகுணா இதற்கு பதிலே பேசவில்லை.
நான் உள்ளே போய் என் திருமண பத்திரிகைகளில் ஒன்றை எடுத்து வந்தேன். என் கையாலேயே கவரின் நான்கு முனைகளிலும் மஞ்சள் தடவினேன். அவரது பெயரை (என் அன்பர்) எழுதி சுகுணாவிடம் கொடுத்தேன். "சுகுணா அவரிடம் சொல். இந்தத் திருமணம் என் பூரண விருப்பத்தின் பேரிலோ, சம்மதத்தின் பேரிலோ நடக்கவில்லை. என் கையைவிட்டு மாறிப்போன ஒரு சக்தியே இதற்குக் காரணம்னு அவரிடம் எடுத்துச் சொல்லு. தயவு செய்து என்னைத் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று நான் மன்றாடி கேட்டுக் கொண்டதாகவும் அவரிடம் சொல்லு'' என்றேன்.
வேதனையின் உஷ்ணத்தினால் ஈரம் வறண்டு போன தொண்டையில் இருந்து வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. எப்படியோ சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு, நான் மௌனமாக அழ ஆரம்பித்துவிட்டேன். சுகுணா என்னைத் தேற்ற ஆரம்பித்தாள். "ஜானகி அழாதே! நான் அவரிடம் எல்லாத்தையும் விவரமாக எடுத்துச் சொல்றேன். அவர் உன்னை தப்பாகவே நினைக்க மாட்டார்னு நான் நினைக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு புறப்பட எழுந்தாள்.
அவளிடம் ஒரு கட்டு திருமண அழைப்பிதழ்களைக் கொடுத்து, என் பள்ளித் தோழிகளுக்கும் திருமணத்திற்கு அழைக்கும்படி கேட்டுக்கொண்டேன். சுகுணா என் அன்பருக்கான அழைப்பிதழை சுமந்து சென்றாள். அதனுடன் என் இதயமே சென்றதை அவள் அறிவாளா.?
திருமண ஏற்பாடுகள் படு மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. இதற்கு மத்தியில் குண்டூரிலிருந்து மாப்பிள்ளையின் ஊர்க்காரரான என் தூரத்து உறவினர் வந்தார். அவர் என் தாயாருக்கு அக்கா முறை. அவர் பேச்சுவாக்கில் ஒரு குண் டைத் தூக்கிப் போட்டார். "என்ன ஆச்சரியமா இருக்கே, மாப்பிள்ளை இன்ஜினியர் இல்லையாமே'' என்று ஒரு போடு போட்டார். இதைக் கேட்ட என் தாயாரின் முகம் உடனே மாறி விட்டது. என் அண்ணன் முகத்தில் ஒரு கேள்விக்குறி எழுந்தது. வீடே அமைதியாய் இருந்தது.
"மாப்பிள்ளை வெறும் "இன்டர்'தான் படிச்சிருக் கான். ரேடியோ இன்ஜினி யர் இல்லே, வெறும் ரேடியோ சூப்பர்வைசர் தான். சொந்தத்தில் குண்டூ ரில் ஒரு வீடு இருக்கிறது என்னமோ உண்மைதான். ஆனால், அது இவருக்கு மட்டும் சொந்தமில்லை. அவங்க மொத்தம் மூணு அண்ணன் -தம்பி, ஒரு அக்கா இருக்கிறாள். சொத்தில் அவங் களுக்கும் பாகமிருக்கு. அவங்க அப்பா செத்துப் போகச்சே ஊருப் பட்ட கடனை வச்சிட்டு போயிருக்காரு. மற்ற அண்ணன் மார்களும் கல்யாணமாகி குடும்பம் இருக்கு. அதனாலே கடனை அடைப்பதில் பெரும் பங்கு மாப்பிள்ளை பொறுப் பில்தான் இருக்கிறது. வித்தா சொத்தில் இவருக்கு எதுவும் மிஞ்சாது. தவிர, இவருடைய அம்மாவின் நகை நட்டு பூராவும் ரெண்டு அண்ணன் மார்களின் மனைவிகளுக்கும் கொடுத்தாகிவிட்டது. பாக்கி எதுவும் உன் பொண்ணுக்கு கிடைக்காது'' என்று ஆதியோடு அந்தமாக பூரா விபரங்களையும் சொல்லிவிட்டார் அந்தத் தூரத்து உறவினர்.
அதைக் கேட்டு வீடே இடிந்ததுபோல் ஆகிவிட்டது. அப்பா. அண்ணா முகத்தில் ஈயாடவில்லை. கோபத்தில் உஷ்ணம் ஏறிப்போனது. என் தாயார் அழ ஆரம்பித்துவிட்டாள் "ஆரம்பத்தி லேயே இதையெல்லாம் விசாரிக்கமாட்டீங்களா?' என்று கேட்டவுடன் அப்பா முகம் வெளிறிப் போய்விட்டது. பேயறைந்தது போல அவர் நின்றுவிட்டார். ஏமாற்றப்பட்டு விட்டோம், வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்ற வேதனை... அவமானம் அணுஅணுவாக பிடுங்கித் தின்றதை அவர் முகமும் செயலும் காட்ட ஆரம்பித்துவிட்டன.
என் தாயாருக்கு எங்கள் குடும்ப நண்பர் பி.எஸ்.ஜி.ராவ் மீது ஒரே கோபம். அவர்தானே இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தவர். என் தாயாரின் இளைய சகோதரர் பூரணபிரக்யா, அவரது மனைவி லீலாபாய் எல்லோரும் என் தாயார் அரற்றுவதைக் கண்டு பரிதாபமாகப் பார்த்தார்கள்.
"அழைப்பிதழ்கள் அச்சாகி விட்டால் என்ன, இப்ப கூட ஒன்னும் கால தாமத மாயிடலே... குடி முழுகிப் போயிடலே. இந்த மாதிரி அர்த்தமில்லாமல் விவரம் தெரியாத இடத்துல பெண்ணை கொடுக்கிறதை விட இந்த உறவையே முறிச்சுக்கலாம். இதுல தப்பு ஒண்ணும் இல்ல. கேட்டா விஷயத்தை எல்லோரிடமும் புட்டு புட்டு வைத்துவிடுவோம் என்று மாமா பூரணபிரக்யா ஒரு யோசனையை அதிரடியாகப் போட்டார். என் தாயார் அதை பலமாக பிடித்துக்கொண்டு "இதுவே நல்ல யோசனை அப்படியே செய்துவிடுவோம்'' என்று தன் சம்மதத்தையும் தெரிவித்தார்.
நான் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டி ருந்தேனே தவிர பீதியடையவில்லை, வேதனைப் படவுமில்லை... கண்ணீர் விடவும் இல்லை. என் மனம் ஒரேயொரு வினாடி சஞ்சலப் பட்டுவிட்டது. ஒரு கணம் இந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாமே என்றும் என் மனம் எண்ணியது. "நான் விரும்பியவரோடு எனக்கு திருமணம் செய்து வைக்காமல், என்னை மோசம் பண்ணிவிட்டு இந்தக் கல்யாணத்தை பண்றிங்களே?'' என்று நான் கேட்டிருக்கலாம்
உண்மைதான்... அந்த நிலையில் வேறு எந்தப்பெண்ணாக இருந்தாலும் தனக்கு சாதகமாகவே அந்த சூழ்நிலையை பயன் படுத்திக்கொண்டிருப்பாள். ஆனால் எனக்கு என்னவோ அது சரியென்று படவில்லை. கல்யாணத்தை இந்தக் கட்டத்தில் நிறுத்துவது ஒரு பாபகரமான செயல் என்று நான் நினைத்தேன். எனவே என் உள்ளத்தில் எழுந்த ஒரு வினாடி சலனத்தை அப்படியே அமுக்கிவிட்டேன்.
அப்போது என் மூத்த சகோதரன் ராமு குறிப்பிட்டான். "இது என்ன பைத்தியக்காரத் தனமான யோசனை? உங்க திட்டப்படியே இப்போது திருமணத்தை நிறுத்திவிடுவதாக வைத்துக்கொள்வோம் அப்புறம் இவளை யார் கட்டிப்பார்?'' என்றார் ஆவேசமாக.
"நாம என்னமோ அவனுக்கு (என் காதலர்) இவளை கட்டிக்கொடுக்கப் போவதில்லை. அவனுக்கு (என் அன்பர்) இவனே தேவலாம், தவிர இப்போது இதை நிறுத்திவிட்டால் ஊரும் உலகமும் உண்மையை புரிந்துகொள்ளாமல் பலவிதமாக பேசும். ஏன் மாப்பிள்ளை வீட்டாரே விஷ யத்தை திரித்து நம் மீது பழிபோட்டுப் பேசலாம். பெண்ணுக்கு ஏதோ வியாதி என்றெல்லாம் விஷமத்தனமாக கதை கட்டி விடலாம். அதனாலே இப்ப இந்தக் கல்யாணம் நின்றுவிட்டால், வாழ்நாள் பூராவும் இவளுக்கு கல்யாணம் நடக்காது'' என்று அடித்துப் பேசினான் என் சகோதரன்.
பழமையின் அர்த்தமற்ற பயத்தில் ஊறிப்போய்விட்ட என் குடும்பத்தினர், பதிலே பேசவில்லை. சற்று முன் "ஆ... ஊ' என்று ஆர்ப்பாட்டம் செய்த அத்தனைபேரும் ராமுவின் உணர்ச்சிமிக்க பிரசங்கத்திற்குப் பிறகு பெட்டிப்பாம்பாகிவிட்டார்கள். அப்போது "உன் வீட்டில் நடைபெறும் முதல் திருமணம் இது, தடைபட்டுவிடக்கூடாது என்றுதான் சொல்கிறோம்' என்று உறவினர்கள் சிலர் சப்பைக்கட்டு கட்டி பேச ஆரம்பித்தார்கள்.
பிறகு என்ன நடந்தது? நான் விரும்பியவரை எனக்குக் கட்டி வைத்தார்களா..? அவர்கள் பார்த்த மாப்பிள்ளையைக் கட்டி வைத்தார்களா? என்றுதானே கேட்கிறீர்கள்.
அன்று நடந்தது என்ன...?
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
____________
ஐந்து மொழி நாயகி!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/sowcarjanaki1-2025-11-13-17-07-25.jpg)
பட்டு மாமி சௌகார் ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் சுமார் 390 படங்கள் மற்றும் சில சீரியல்களிலும் நடித்திருக் கின்றார். இந்த ஐந்து மொழிகளிலும் அவரே சொந்தக் குரலில் பேசி நடித்திருக்கின்றார் என்பது கூடுதல் சிறப்பு. பட்டு மாமி எந்த ஒரு பாஷையையும் இரண்டு முறை கேட்டாலே அப்படியே பேசிவிடும் ஆற்றல் பெற்றவர்.
390 படங்களில் இரண்டு படங்களை அவரே சொந்தமாக தயாரித்தும் நடித்தார். அவை, "காவியத் தலைவி', "ரங்க ராட்டினம்'. இந்த இரண்டு படங்களிலும் சவுகார் ஜானகி ஏற்றது இரட்டை வேடங்கள். ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் கதை நாயகர்களாக நடித்தனர்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us