(8) சினிமாவில் நடிக்க தடை.!
நான் சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். என் வாழ்வின் பெரும் பகுதியை (கடந்த 70 ஆண்டுகளாக) ஒரு பண்பட்ட நடிகையாக சினிமா உலகிலேயே வாழ்ந்து விட்டேன். என்றாலும் இந்தச் சினிமாவுலக நுழைவு அவ்வளவு எளிதில் எனக்கு வாய்க்கவில்லை. காரணம், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல, எனக்கு முதலில் தடை போட்டது என் குடும்பத்தார்தான்.
"ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்துவிட்டு உனக்கு சினிமா கேட்கிறதா..?'' என்று கேட்டு என் அண்ணா அடித்தான், அறைந்தான்.
நான் சினிமாவில் நடிப்பதற்கு குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விஷயம் இதோடு நின்றுவிட வில்லை. இவளை இப்படியே விட்டால் சரிப்படாது, சினிமா லவ்வுன்னு போகும் என்று பேசிக்கொண் டார்கள். இவளுக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட்டால் எல் லாம் சரியாகிவிடும். என்ற தீர்மானத்துக்கு வந்தார்கள். அதே வேகத்தோடு அவசர அவசரமாக மாப்பிள்ளையும் தேட ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த நேரத்தில் எனக்கு சினிமாவில் வாய்ப்புத்தர முன்வந்த, அந்த பெரிய மனிதரைப் பார்த்து. "வீட்டில் எனக்கு திருமணம் நிச்சய
(8) சினிமாவில் நடிக்க தடை.!
நான் சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். என் வாழ்வின் பெரும் பகுதியை (கடந்த 70 ஆண்டுகளாக) ஒரு பண்பட்ட நடிகையாக சினிமா உலகிலேயே வாழ்ந்து விட்டேன். என்றாலும் இந்தச் சினிமாவுலக நுழைவு அவ்வளவு எளிதில் எனக்கு வாய்க்கவில்லை. காரணம், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல, எனக்கு முதலில் தடை போட்டது என் குடும்பத்தார்தான்.
"ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்துவிட்டு உனக்கு சினிமா கேட்கிறதா..?'' என்று கேட்டு என் அண்ணா அடித்தான், அறைந்தான்.
நான் சினிமாவில் நடிப்பதற்கு குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விஷயம் இதோடு நின்றுவிட வில்லை. இவளை இப்படியே விட்டால் சரிப்படாது, சினிமா லவ்வுன்னு போகும் என்று பேசிக்கொண் டார்கள். இவளுக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட்டால் எல் லாம் சரியாகிவிடும். என்ற தீர்மானத்துக்கு வந்தார்கள். அதே வேகத்தோடு அவசர அவசரமாக மாப்பிள்ளையும் தேட ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த நேரத்தில் எனக்கு சினிமாவில் வாய்ப்புத்தர முன்வந்த, அந்த பெரிய மனிதரைப் பார்த்து. "வீட்டில் எனக்கு திருமணம் நிச்சயம் செய்துவிட்டார்கள்' என்று ஒரு வார்த்தை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தேன்.
அவரை பார்த்துச் சொன்னபோது "அப்படியா, ரொம்ப சந்தோஷம். இனி சினிமா பற்றி நீ நினைக்கக் கூடாது. கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழணும். சினிமா வேற, கல்யாணம் வேற' என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
ஆனால் விதி அவரிடமே மறுபடியும் போய் சினிமா சான்ஸ் கேட்க வைக்கும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. ஒரு வழியாக அப்போது குண்டூரில் கிராம பஞ்சாயத்து ரேடியோ இன்ஜினியராக வேலை பார்த்து வந்த சீனிவாச ராவ் என்பவருக்கு என்னை மணம் முடித்து வைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த அவசர கல்யாணத்துக்குப் பின்னால் இன்னொரு விஷயமும் இருந்தது. அது என்ன? பிறகு சொல்றேன்.
மாப்பிள்ளை இன்ஜினியர். நல்ல பெரிய குடும்பம். வசதி வாய்ப்பு எல்லாம் நல்லா இருக்கு என்று கல்யாண புரோக்கரோ, உறவினரோ சொன்னதைக் கேட்டு உடனே ஓ.கே. சொல்லி விட்டார்கள். குண்டூர் மாப்பிள்ளை யையே நிச்சயித்துவிட்டார்கள். திருமணநாள் நெருங்க, நெருங்க உற வினர்களும்... நண்பர்களும் கூடஆரம்பித்தார் கள். வீட்டில் உற்சாகக் குரலின் ஆரவாரம் எதிரொலிக்கத் தொடங்கியது.
என் திருமண அழைப்பிதழ்கள் அச்சாகி வந்தன. அவற்றை கவரில் போட்டு, கவரின் நான்கு முனைகளில் மஞ்சள் தடவி விலாசம் எழுதி, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பும் வேலை ஒரு பக்கம் மும்முரமாக நடந்தது.
நான் எதிலும் அக்கறை காட்டிக் கொள்ளவில்லை. இது அவர்கள் விருப்பப்படி நடக்கிற திருமணம். என் விருப்பப்படி அல்ல, ஏதோ நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருந்தேன். கல்யாணத்திற்கு தேவையான புடவைகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவி லுள்ள லஷ்மண்ஷா கடையில் வாங்கி னார்கள். அது எங்கள் குடும்பத்துடன் நீண்டகால தொடர் பில் உள்ள கடை. நான் இன்றும்கூட லஷ்மண்ஷா கடை யில்தான் புடவை கள் வாங்கு கிறேன். புடவை களோடு நகை களும் பட்டும் வந்தன. திரு மண வேலை கள் வேகவேக மாக நடந்து கொண்டிருக்கும் போது, என் தோழி சுகுணா என்னிடம் வந்து ஒரு கேள்வி எழுப்பி என்னை சங்கடத்தில் திண்டாட வைத்தாள்.
"உன் கல்யாணத்துக்கு அவரை யும் (என் அன்பர்) நீ அழைக்கப் போகிறாயா?' என்று கேட்டாள்.
அவளை நான் ஒரு மாதிரியாக பார்த்தேன்.
"அவள் மனப்பூர்வமாக- கள்ளங்கபடமற்ற நிலையில்தான் கேட்கின்றாளா? அல்லது என் மனதை சோதிக்கத்தான் கேட்கிறாளா?' என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆக அவள் கேள்விக்குப் பதில் தரவேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.
"எப்படிக் கூப்பிடுவது சுகுணா, இங்கே நடந்தது எல்லாம் அவருக்கு எப்படித் தெரியும்? அவரை நான் ஏமாற்றிவிட்டேன் என்று அவர் நினைக்கலாம். கல்யாணப் பிரச்சினைக்கு நானே ஒரு முடிவு எடுத்துவிட்டேன் என்று அவர் கருதலாம். ஏதோ நாங்கள் இரண்டு பேரும் பழகினதை ஒரு பொழுது போக்காக நான் நினைத்து விளையாட்டாக என் திருமணத்தை நடத்தி விட்டேன் என்றும் அவர் நினைக்கலாம் அல்லவா'' என்று சுகுணாவிடம் சொன்னேன்.
என் உள்ளத்தின் வேதனை அந்த கேள்விகளில் முகாமிட்டு வந்தது.
"நீ ஆரம்பத்திலேயே பெரிய தப்பு பண்ணிட்டே'' என்றாள் சுகுணா.
"எதை வைத்துச் சொல்கிறாய்?'' என்றேன்.
ஒரு பக்கம் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்க... தோழி சுகுணா என் கடந்த கால காதலைப் பற்றிப் பேசினாள்.
நான் என்ன செய்தேன்... எப்படி அவளுக்குப் புரிய வைத்தேன்...
(பேசுறேன்...)
_____________
நடிப்புக்கும் அப்பால்...!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/sowcarjanaki1-2025-11-10-18-30-52.jpg)
"ஒரு நடிகர் அல்லது நடிகையை பேட்டி காணும்பொழுது. பேட்டி காண்பவர்களை தமது பதில்களின் மூலம் உற்சாகப்படுத்தி, இவரிடம் மேலும் கேள்விகள் கேட்டால் சுவையான பதில்கள் கிடைக்கும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் நடிகைகளுள் சௌகார் ஜானகிக்கு முதலிடம்.
அதுமட்டுமல்ல, புதிதாக தெரிந்துகொள்ள வேண்டிய பல நல்ல தகவல்களை, அபிப்ராயங்களை அவை தர்க்க ரீதியானவைகளாக இருந்தாலும் அவற்றை துணிச்சலாக ஆணி அடித்த மாதிரி சொல்லக்கூடியவர் பட்டு மாமி.
குணத்தில் நேர்மையும் மிக கண்டிப்பும் இருக்கும். கடிகார முட்களை சரியாக பயன்படுத்திக் கொள்வதில் கரெக்ட்டாக இருப்பார். போனில் தொடர்புகொண்டால் அவரேதான் பேசுவார். நாம் அவரைச் சந்திக்கவேண்டிய காரணம் கேட்டு அப்பாயின்ட்மெண்ட் கொடுப்பார். அந்த நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு தயாராகக் காத்திருப்பார். குறிப்பிட்ட நேரத்தில் வராமல் சற்று தாமதமாக வந்தால் பேட்டி தர மறுத்துவிடுவார்.
அவரைப் பல கோணங்களில் பேட்டி கண்ட பெருமை எனக்கு உண்டு. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு. என வெளிப்படையாக பேசக்கூடியவர் சௌகார் ஜானகி. நடிப்புக்கும் அப்பால் ஒரு நடிகை... இன்டீரியர் டெக்ரேட்டராக, வாஸ்து சாஸ்திரம் தெரிந்தவராக, கற்பனை சக்தி மிகுந்தவராக இருப்பதை சௌகார் ஜானகி வெளிப்படுத்தியிருந்தார்.
-திரைஞானி
(மூத்த சினிமா பத்திரிகையாளர்)
படம் உதவி: ஞானம்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us