(7) கோபத்தில் சத்தம் போட்ட அம்மா
கடிதம் படித்துவிட்டு என் தந்தையார் என்மேல் கோபம் கொள்ளவில்லை, கண்டிக்கவு மில்லை என்பதோடு... "ஒழுங்காக படி' என்று மட்டும் சொன்னார். இதோடு பிரச்சினை முடிந்துவிட்டது என்று நிம்மதியாகத் தூங்கிவிட்டேன். விடிந்ததும் அது பெரிய பிரச்சினையாக வெடித்தது.
அன்று இரவு என் தந்தையார், என் தாயாரிடம் கடிதம் விஷயமாக பேசியிருக் கின்றார். இருவரும் கடிதத்தை வைத்து விவாதித்திருக்க வேண்டும். "இது ரொம்பவும் நளினமான, விசித்திரமான விஷயம். அவளிடம் பார்த்து பேசு' என என் தாயாரிடம் அவர் சொல்லியிருக்கக்கூடும். மறுநாள் அதன் ரிசல்ட் தெரிந்தது.
மறுநாள் விடிந்ததும் நான் பள்ளிக்கூடம் செல்வதற்காக என்னைத் தயார் செய்து கொண்டிருந்தேன். அப்போது என் அம்மா என்னை அவர் அறைக்கு அழைத்தார். அங்கே என் அண்ணா ராமுவும் பக்கத்தில் நின்றிருந்தார். எச்சரிக்கை கடிதம் வந்த விஷயத்தைக் குறிப்பிட்டு. "இது என்ன புதுப்பழக்கம். துர்காபாய் சொல்வது உண்மைதானா?' என்று தாயார் என்னிடம் சற்று கண்டிப்புடன் கேட்டார்.
என் அண்ணா என்னைச் சற்று முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். "ஓ.. விசாரணை கமிஷன் ஆரம்பமாகிவிட்டதோ... இனி ஒன்றும் மறைக்கவேண்டியதில்லை. என் விஷயம் வீட்டுக்குத் தெரிந்துவிட்டது. அதுபற்றி பேசுவதற்கு வழியும் அமைந்துவிட்டது. எனவே நான் ஒன்றையும் மறைக் காமல் டிராம் வண்டியில் சந்தித்தது, பழகு வதையெல்லாம் சொன் னேன்.
"ஓஹோ.. விஷயம் இவ்வளவுதூரம் போய்விட்டதோ'' என்றார் அண்ணா ராமு.
"அப்போ அன்றைக்கு கிருஷ்ணா சொன்ன தெல்லாம் உண்மைதானா?'' என்றார் என் தாயார்.
"ஆம் உண்மைதான் நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம்'' என்றேன்.
"முதலில் ஒழுங்காக போய் படிக்கிற வேலையை பார்'' என்றார் ராமு அண்ணா.
"திருமணம் செய்து கொண்டால் நான் அவரையேதான் செய்து கொள்வேன்'' என்று சற்று அழுத்தமாக கூறினேன்.
"அதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம். உனக்கு எப்போது, யாரை கல்யாணம் செய்து வைக்கிறது என்று எங்களுக்கு தெரியும். ஒழுங்காக போய் படி'' என்று மறுபடியும் கோபமாக எச்சரிக்கும் விதமாக குரலை உயர்த்திச் சொன்னார் ராமு அண்ணா .
"அது என்னம்மா நம்ம குடும்பத்தில் இல்லாத புதுவழக்கம்'' என்றார் என் தாயார்.
நான் பேசாமல் மௌனமாக நின்றேன்.
"அவன் யாரு.. என்ன படித்திருக் கிறான்? அவன் குலம் என்ன, கோத்திரம் என்ன.. அதெல்லாம் விசாரித்து பார்த்துத்தான் எதுவும் சொல்ல முடியும்'' என்றார் என் தாயார் கொஞ்சம் கறாராக.
நான் என் அன்பர் யார், அவர் என்ன படித்திருக்கிறார். அவ ருடைய குலம் கோத்திரம் என்ன என்று சொல்லத் தொடங்கியதும். "படிக்கிற வயதில் அதென்ன காதல் கத்திரிக்காய். பேசாமல் ஒழுங்காக போய் படிக் கிற வேலையைப் பாரு'' என்று சத்தம் போட்டு சொல்லிவிட்டு ராமு அண்ணா வெளியே போய்விட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/sowcarjanaki1-2025-11-07-15-55-25.jpg)
"நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்'' என்று வேகமாக சொல்லி விட்டு, பள்ளிக்குப் புறப்பட்டேன்.
அப்போது ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது. என் அன்பர் எனக்கு கிடைக்க மாட்டார், கிடைக்க விடமாட்டார்கள் என்று தோன்றியது.
காதல் குறித்து மகாகவி பாரதியார் எப்போதோ எழுதிய கவிதை இப்போது ஞாபகம் வந்தது.
"நாடகத்தில் காவியத்தில்
காதல் என்றால் நாட்டினர் தாம்
வியப்பெய்தி
நன்று என்பார்.
ஊடகத்தே
வீட்டினுள்ளே
கிணற்றோரத்தே
ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்.
பாரினிலே காதலெனும் பயிரை மாய்க்க
மூடரெல்லாம் பொறாமையினால்
விதிகள் செய்து...'
என்று பாரதி மிகச் சரியாகத்தான் சிந்தித் திருக்கிறார்.
அன்று முதல் நாங்கள் சந்திக்கவோ, பேசவோ... முடியவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளத் தடை அமுலுக்கு வந்துவிட்டது. அம்மா, அண்ணா, தங்கை கிருஷ்ணா எல்லோரும் எங்களை கண்காணிக்க ஆரம்பித்து விட்டார்கள். நான் கலங்கிப் போனேன். என்ன செய்வது விதி வலியது.
அப்போது எனக்கு பதி னைந்து வயதிருக் கும். என்னுடைய பாட்டு ட்ராமா எல்லாம் சென்னை வானொலியில் கேட்ட விஜயா ஸ்டூடியோ அதிபர் டைரக்டர், தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, என்னைப் பற்றி விசாரித்து சென்னை வானொலி நிலை யத்திற்கே வந்துவிட் டார்.
என்னைப் பார்த்து "நீ சினி மாவில் நடிக்கிறாயா?'' என்று கேட்டார்.
"இளங்கன்று பயமறியாது' என்பது போல நான் ஆர்வத்துடன் "ம்.. நடிக்கிறேன்'' என் றேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/sowcarjanaki2-2025-11-07-15-55-41.jpg)
என்னைத் தேடி சினிமா வாய்ப்பு வந்தது கண்டு எனக் குள் மகிழ்ச்சி பெரு கியது. ஒரு பெரிய டைரக்டர், தயாரிப்பாளர் தேடி வந்து, "உனக்கு நல்ல குரல் வளம் இருக்கு. லட்சணமான முகவெட்டு இருக்கு. நீ சினிமாவில் நடிக்கிறியா?' என்று கேட்டதும் சிறகில்லாமல் வானத்தில் மிதந்தேன்.
"எங்கள் வீட்டில் கேட்டுச் சொல்கிறேன்'' என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன்.
அதே ஆர்வத்தோடு சந்தோஷத்தோடு வீட்டில் வந்து சினிமாவில் நடிக்க அழைப்பு வந்ததை விவரமாக என் தாயாரிடம் சொன்னதும், அவர் அர்ச்சனை செய்து சாமியாடத் தொடங்கிவிட்டார்.
என் அண்ணா ராமு என்னை அடிக்கத் தொடங்கிவிட்டார்...
அப்புறம் நடந்தது என்ன?
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/07/sowcarjanaki3-2025-11-07-15-56-36.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/07/sowcarjanaki-2025-11-07-15-55-11.jpg)