(5) இதுதான் காதலா...!
பள்ளி நாட்களில் விசேஷ தினங்களில் நடக்கின்ற பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டி, டான்ஸ், டிராமா என எல்லாத்திலும் ஆர்வமாகக் கலந்துகொண்டேன். இதனால் டீச்சர்களின் செல்லமான மாணவியானேன்.
ஸ்கூலில் பிரேயர் ஸாங் பாடச் சொல்வாங்க. நிதானமாக ஏற்ற இறக்கத்தோடு பாடுவேன். மென்மையான குரல். தெளிவான உச்சரிப்பு... டீச்சர்களின் அபிமானத்தைப் பெற்றுத்தந்தது. என்னுடைய பாட்டும், பேச்சும், முகபாவங்களும் பாராட்டுக்களாக மாறிவந்தன. அது மெட்ராஸ் ஆகாஷவாணி வரை என்னை அழைத்துக் கொண்டு சென்றது. அது என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பாலர் தெலுங்கு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் அதில், பாட்டு, டிராமா எல்லாம் நடக்கும். நானும் அதில் பங்கேற்க ஆரம்பித்தேன். பாடவும், நடிக்கவும் தொடங்கியிருந்தேன். இது ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தது.
சரி... டிராம்வண்டி சமாச்சாரம் என்னாச்சு என்று நீங்கள் கேட்கிறதுக்கு முன்னே அதற்கு வருகிறேன்.
வழக்கமான பார்வையைப் போல் இல்லாமல் எங்கள் பார்வை தனித்தன்மையுடன் இருந்தது. அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் என்பது போல ஆயிரமாயிரம் கதைகளையும், கேள்விகளையும் எங்கள் பார்வை, அந்த சில விநாடிகளில் கேட்
(5) இதுதான் காதலா...!
பள்ளி நாட்களில் விசேஷ தினங்களில் நடக்கின்ற பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டி, டான்ஸ், டிராமா என எல்லாத்திலும் ஆர்வமாகக் கலந்துகொண்டேன். இதனால் டீச்சர்களின் செல்லமான மாணவியானேன்.
ஸ்கூலில் பிரேயர் ஸாங் பாடச் சொல்வாங்க. நிதானமாக ஏற்ற இறக்கத்தோடு பாடுவேன். மென்மையான குரல். தெளிவான உச்சரிப்பு... டீச்சர்களின் அபிமானத்தைப் பெற்றுத்தந்தது. என்னுடைய பாட்டும், பேச்சும், முகபாவங்களும் பாராட்டுக்களாக மாறிவந்தன. அது மெட்ராஸ் ஆகாஷவாணி வரை என்னை அழைத்துக் கொண்டு சென்றது. அது என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பாலர் தெலுங்கு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் அதில், பாட்டு, டிராமா எல்லாம் நடக்கும். நானும் அதில் பங்கேற்க ஆரம்பித்தேன். பாடவும், நடிக்கவும் தொடங்கியிருந்தேன். இது ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தது.
சரி... டிராம்வண்டி சமாச்சாரம் என்னாச்சு என்று நீங்கள் கேட்கிறதுக்கு முன்னே அதற்கு வருகிறேன்.
வழக்கமான பார்வையைப் போல் இல்லாமல் எங்கள் பார்வை தனித்தன்மையுடன் இருந்தது. அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் என்பது போல ஆயிரமாயிரம் கதைகளையும், கேள்விகளையும் எங்கள் பார்வை, அந்த சில விநாடிகளில் கேட்டுவிட்டது. அவரை நான் பார்வையால் விழுங்க, என்னை அவரும் பார்வையில் விழுங்கினார். நான் இறங்கவேண்டிய இடம் அதற்குள் வந்துவிட, ஏதோ ஒரு மோன நிலையிலிருந்து விடுபட்டது போல, நான் வண்டியை விட்டு இறங்கினேன். அன்றுதான் முதன்முதலாக, நான் நானாக இல்லாமல் ஏதோ ஒரு புதிய சக்தியில் ஆட்டுவிக்கப்பட்டு வீட்டுக்கு நடந்து வந்தேன்.
அன்று இரவு... மறுநாள் காலை... நான் பள்ளிப் பாடத்தைப் பற்றி நினைக்கவே யில்லை. எங்கோ நினைவுகள் சிறகு விரித்து இழுத்தன. நான் டிராம் வண்டியில் பார்த்த அந்த மோகன உருவம், என் நினைவு பூராவையும் விஸ்வரூபமாக வியாபித்துக்கொண்டு, வேறு நினைவுகளுக்கு இடமில்லாமல் செய்து விட்டது.
இந்தச் சம்பவம் நடந்த ஒருசில நாட்களுக்குப் பிறகு நான் அவரை மீண்டும் டிராம் வண்டியில் சந்தித்தேன். அப்போது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்றுகொண்டி ருந்தேன். காந்தியடிகள் அப்போது சென்னைக்கு வந்திருந்தார். ஹிந்தி பிரச்சார சபாவில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க எங்களை (பள்ளி மாணவிகளை) அழைத்துச் செல்ல திருமதி.துர்காபாய் ஏற்பாடு செய்திருந்தார். நான் ஆரஞ்சு வண்ண சோளியும், கதர் தாவணியும் அணிந்து சென்றிருந்தேன்.
என் அன்பர் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அவருக்கு என் பக்கத்தில் என்னால் இடமளிக்காமல் இருக்கவும் முடியவில்லை. தடுத்து நிறுத்தவும் துணி வில்லை. ஆனால் அவர் என் பக்கத்தில் உட்கார்ந்ததும் என் மனதில் ஏதோ ஒருவித மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அன்றுதான் அவர் முதன்முதலாக என்னிடம் பேசினார். "உன் பெயர் என்ன?' என்று முதலில் கேட்டார். "ஜானகி' என்று சொன்னேன். பிறகு அவர் தன்னுடைய பெயரைச் சொன்னார். தமிழ்க் கடவுளின் பெயர் அது.
அவர், நான் எங்கே இருக்கிறேன், என்ன படிக்கிறேன் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டார். இன்டர் வரை படித்திருந்த அவர், தன்னைப் பற்றிய தகவல்களையும் என்னிடம் சொல்லத் தவறவில்லை. இப்படியே நாளொரு வண்ணம் பொழுதொரு வண்ணமாக மெல்ல மெல்ல எங்கள் சந்திப்புகள் அதிகமானது. என்னையறி யாமலேயே என் இதயத்தில் அவர் நுழைந்து இடம்பெற ஆரம்பித்தார். நானும் அவர் உள்ளத்தில் மெல்ல மெல்ல நிரம்ப ஆரம்பித்தேன்.
நாங்கள் வீட்டுக் குச் செல்லும்போது எங்கள்கூடவே பாது காப்பு அதிகாரி போல அவரும் வர ஆரம் பித்தார். எங்கள தெருக் கோடியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. தினமும் அந்த போலீஸ் ஸ்டேஷன்வரை அவர் என்னுடன் பேசிக்கொண்டே வந்து, அங்கே என்னை விட்டுச் செல்வார். நானும் கிருஷ்ணாவும் பின்னர் வீட்டுக்குள் போய்விடுவோம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/30/sowcarjanaki1-2025-10-30-17-35-35.jpg)
என் தங்கை கிருஷ்ணாவுக்கு நானும் அவரும் சந்தித்துப் பேசுவது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நானும் அவரும் பேசிக்கொண்டே நடந்து வரும்போது எங்களுக்குப் பின்னால் சுமார் பத்தடி தூரத்தில் அவள் எங்களைத் தொடர்ந்து வருவாள். சிலசமயம் திடீரென்று எங்களுக்குள் சாப்பாட்டு கேரியரை யார் எடுத்து வருவது என்ற பிரச்சினை வந்துவிடும். "நீ இதை எடுத்துக்கொண்டு வராவிட்டால், நீ அவருடன் பேசிப் பழகுவதை வீட்டில் அம்மாவிடம் சொல்லிவிடுவேன்'' என்று தங்கை கிருஷ்ணா என்னை அடிக்கடி பயமுறுத்துவாள்.
ஒருநாள் ஏதோ பேச்சு வாக்கில் கிருஷ்ணா, அம்மா விடம் போட்டுக் கொடுத்துவிட்டாள். நான் டிராமில் வரும் போது ஒரு வாலிபனுடன் பேசிப் பழகுவதைச் சொல்லிவிட்டாள். எனக்கு பகீரென்று இருந்தது. அம்மா என்ன சொல்லப் போகிறாளோ என்று பயந்தேன். ஆனால், நான் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. என் தாயார் ஏதோ கவனத்தில் இருந்ததால் அதைப்பற்றி அவ்வளவாக பொருட் படுத்தவில்லை. இதுவே எனக்கு கொஞ்சம் தெம்பையும், தைரியத்தையும் கொடுத்தது.
எனக்கு இன்னொரு தங்கை இருந்தாள். இப்போது அவள் இல்லை. அவள் பெயர் சாய்லட்சுமி. அவளுக்கு ஆறு வயதாக இருக்கும்போது என் தாயார், தகப்பனார், என் தங்கை எல்லோரும் சேர்ந்து ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு யாத்திரை கிளம்பினார்கள். நான் போகவில்லை. வீட்டி லேயே இருந்துவிட்டேன். அப்போதுதான் என் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது.
"நாம் ஏன் அவரை (காதலரை) நம்ம வீட்டுக்கு அழைக்கக்கூடாது?' என்று என்னையே கேட்டுக்கொண் டேன். இரண்டு காரணங்களுக் காக நான் அவரை என் வீட் டிற்கு அழைக்க விரும்பினேன்.
என் இதயத்தைக் கவர்ந் தவர் அவர் என்பது ஒன்று. இரண்டாவதாக, அப்படியாவது யாராவது அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், அவர் என் வீட்டுக்கு வருவதைப் பார்த்து விட்டு என் குடும்பத்தாரிடம் சொல்லி விஷயம் உடைபட்டு எனக்கு ஏதாவது நல்ல முடிவு கிடைக்காதா என்ற உள் நோக்கமும்தான் என்னை, அவரை அழைக்கச் செய்தது.
அவரும் என் வீட்டுக்கு வர ஒப்புக்கொண்டார். அதன்பிறகுதான் பெரிய புயலே கிளம்பியது.
அது என்ன?
(பேசுறேன்...)
படம் உதவி: ஞானம்
_________________
பட்டு மாமியின் டிப்ஸ்!
கறிவேப்பிலை உடம்புக்கு ரொம்ப நல்லது. தங்கம்போல் மதிப்பு கொண்டது. சௌகார் ஜானகி கறிவேப்பிலையை வேஸ்ட் பண்ணமாட்டார். சென்னை செண்டர்ப் சாலையில் உள்ள சௌகார் ஜானகியின் வீட்டில் நிறைய கறிவேப் பிலை மரங்கள் வளர்த்தார். அவருடைய வீடே கறிவேப்பிலை வாசத்தில் மணக்கும். கறிவேப்பிலை துவையல் பட்டு மாமியின் இன்னொரு ஸ்பெஷல்!
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us