Advertisment

நான் பட்டு மாமி பேசுறேன்...! சௌகார் ஜானகி லைஃப் ரிலே.. -எழுத்தாக்கம்  "கலைமாமணி' சபீதா ஜோசப் (41)

sowcarjanaki

(41) நல்ல ரசிகர்களை நாம்தான் உருவாக்க வேண்டும்!


சுகாசினி என்னிடம் மற்றொரு கேள்வி கேட்டார்.

"ஒவ்வொரு சமயம் உண்மை வாழ்க்கையை படங்களில் ஏற்கும் பாத்திரங்களில் இருந்து பிரித்துப் பார்ப்பது என்பது முடியுமா? உதாரணம் கமல்ஹாசன் என் சித்தப்பா. அவருக்கு ஜோடியாக நடிக்கச்சொல்லி சில தயாரிப்பாளர்கள்  என்னை அழைத்தார்கள். எங்களை ஜோடியாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு ரசிப்பார்களா?''

Advertisment

இந்தக் கேள்வி எனக்குச் சுருக்கென்று பட்டது. 

"ஜோடியாக நடிப்பது என்பது அந்தக் கேரக்டரை ஏற்று நடிக்கும் சினிமாவுக்காகத் தான் என்று நினைக்க வேண்டுமே தவிர, அந்தப் பாத்தி ரங்களையும், அந்தப் பாத்திரங்களின் மனப்போக் கையும் உண்மை வாழ்க்கையுடன் இணைக்கக் கூடாது. அப்படிப்பட்ட மனப்பக்குவத்தை ஏற் படுத்திக்கொண்டால், உங்களுடைய சித்தப்பா வுடன் ஜோடியாக நடிப்பதில் எந்தவித தவறும் இல்லை. ரசிகர்களிடையே  ரிசர்வேஷன்ஸ் எதுவும் இருக்காது.  படம் பிடித்திருந்தால் யார் நடிக்கிறார் கள், யாருக்கு யார் என்ன உறவு என்றெல்லாம் ரசிகர்கள் பார்க்க மாட் டார்கள்? படம் பிடிக்க வில்லை என்றால் பெரிய, பெரிய நட்சத்திரங்களின்   படங்களானாலும் பார்க்கமாட்டார்கள். அதனால் நீங்கள் முடிந்த வரை மாறுபட்ட பாத் திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதுதான் நல்லது'' என்று நான் அழுத்தமாக சொன்னதும்... 

Advertisment

"என் அனுபவமே தனி, வேற மாதிரி' என்று சுமலதா ஆரம்பித்தார்.

"அழைத்தால் வருவேன் என்ற படத்தில்  கால்கேர்ள் வேடம் ஏற்று நான் நடித்தேன்.   அப்போது ஏன் அந்த மாதிரி வேடம் ஏற்று நடிக்கிறீங்க? என்று என் வெல்விஷர்ஸ் நிறைய பேர் எனக்கு கடிதம் எழுதியிருந்தாங்க. இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?'' என்று என்ன

(41) நல்ல ரசிகர்களை நாம்தான் உருவாக்க வேண்டும்!


சுகாசினி என்னிடம் மற்றொரு கேள்வி கேட்டார்.

"ஒவ்வொரு சமயம் உண்மை வாழ்க்கையை படங்களில் ஏற்கும் பாத்திரங்களில் இருந்து பிரித்துப் பார்ப்பது என்பது முடியுமா? உதாரணம் கமல்ஹாசன் என் சித்தப்பா. அவருக்கு ஜோடியாக நடிக்கச்சொல்லி சில தயாரிப்பாளர்கள்  என்னை அழைத்தார்கள். எங்களை ஜோடியாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு ரசிப்பார்களா?''

Advertisment

இந்தக் கேள்வி எனக்குச் சுருக்கென்று பட்டது. 

"ஜோடியாக நடிப்பது என்பது அந்தக் கேரக்டரை ஏற்று நடிக்கும் சினிமாவுக்காகத் தான் என்று நினைக்க வேண்டுமே தவிர, அந்தப் பாத்தி ரங்களையும், அந்தப் பாத்திரங்களின் மனப்போக் கையும் உண்மை வாழ்க்கையுடன் இணைக்கக் கூடாது. அப்படிப்பட்ட மனப்பக்குவத்தை ஏற் படுத்திக்கொண்டால், உங்களுடைய சித்தப்பா வுடன் ஜோடியாக நடிப்பதில் எந்தவித தவறும் இல்லை. ரசிகர்களிடையே  ரிசர்வேஷன்ஸ் எதுவும் இருக்காது.  படம் பிடித்திருந்தால் யார் நடிக்கிறார் கள், யாருக்கு யார் என்ன உறவு என்றெல்லாம் ரசிகர்கள் பார்க்க மாட் டார்கள்? படம் பிடிக்க வில்லை என்றால் பெரிய, பெரிய நட்சத்திரங்களின்   படங்களானாலும் பார்க்கமாட்டார்கள். அதனால் நீங்கள் முடிந்த வரை மாறுபட்ட பாத் திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதுதான் நல்லது'' என்று நான் அழுத்தமாக சொன்னதும்... 

Advertisment

"என் அனுபவமே தனி, வேற மாதிரி' என்று சுமலதா ஆரம்பித்தார்.

"அழைத்தால் வருவேன் என்ற படத்தில்  கால்கேர்ள் வேடம் ஏற்று நான் நடித்தேன்.   அப்போது ஏன் அந்த மாதிரி வேடம் ஏற்று நடிக்கிறீங்க? என்று என் வெல்விஷர்ஸ் நிறைய பேர் எனக்கு கடிதம் எழுதியிருந்தாங்க. இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?'' என்று என்னைப் பார்த்து கேட்டார் சுமலதா.

"ஏற்கும் பாத்திரப் படைப்பு உன்னதமாக இருந்தால் கால் கேர்ள் வேடம் போட்டால் கூட தவறில்லை, ஆனால் அது கவர்ச்சியாக (நங்ஷ்ல்ப்ர்ண்ற்ஹற்ண்ர்ய்) மட்டுமே வழி வகுக்கும் என்றால், அதுபோன்ற கேரக்டரை ஏற்று நடித்த நடிகையின் எதிர்காலத்திற்கு அது உதவியாக இருக்காது என்பது என் கருத்து'' என்றேன்.

"மேடம் நீங்கள் திரைப்படத் தயாரிப்பில் உற்சாகம் காட்டியிருக்கிறீர்கள். ஆனால் டைரக்ட் செய்வதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லையே ஏன்?'' என்று கேட்டார் சுமலதா.

தமிழில் நான் தயாரித்த "காவியத் தலைவி' படத்திற்கு அடிப்படையாக அமைந்தது "மம்தா' ஹிந்தி படத்தைப் பார்த்தபோது. அந்தக் கதையின் நாயகியின் தன்மைக்கும் என் தனி வாழ்க்கைக்கும் ஓரளவு ஒற்றுமைகள் காணப்பட்டது. அது என்னை கவர்ந்தது. அதனால் அந்தப்  படத்தின் உரிமை வாங்கி தமிழில் தயாரித்தேன். இயக்குனர் சிகரம் பாலசந்தர் அதை இயக்கினார். அந்தப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் விருதுகூட கிடைத்தது என்பது பெருமைக்குரிய விஷயம். ஆனால் டைரக்ஷன் என்பது பல பெரிய பொறுப்புகளுடன் கூடிய விஷ யம். அதற்குப் பொறுமை, திறமை, கான்சன்ட் ரேஷன் அப்புறம் சினிமா சம் பந்தமான வெவ்வேறு துறை களைப் பற்றிய கணிசமான அறிவு இவை எல்லாம் தேவை. அது அந்த அளவுக்கு பொறுப்பு வாய்ந்த சுமை என்று கருதுவ தாலோ என்னவோ ஆரம்ப காலத்தி-ருந்தே அதில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. டைரக் ஷன் என்பது  மிகப் பெரிய வேலை! 

நமது சினிமாவுக்கு பார்வை யாளர்கள் ரசிகர்கள் ரொம்ப முக்கியம் அந்த ரசிகர்கள் சம் பந்தமாக சுகாசினி என்னி டம் ஒரு கேள்வி  கேட்டார்; 

 "நீங்கள் பேசும் போது ஒரு படம் நன்றாக இருந்தால், அதில் புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் இல்லாவிட்டாலும் ஜனங்கள் பார்ப்பாங்கன்னு சொன்னீங்க. அப்படியானால் நல்ல கதையை, பார்முலாவை, மசாலாக்கள் இல்லாமல் ஆர்ட் பிலிம் போல படம் எடுத்தால் இன்றைய ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வில்லை. அவ்வளவாக அவற்றை வரவேற்பது இல்லையே? என்னைப் பொருத்தவரை தேவையில்லாத பாடல்கள், சண்டைகள், முதலியவற்றுடன் மெலோடிராமா, செயற்கையான முறையில் கதை நிகழ்வுகள், பாத்திரப்படைப்பு (கேரக்டரைசேஷன்) போன்றவை அமைந்ததுதான் "பார்முலா' படங்கள்.

இவை எதுவும் இல்லாமல் மாறுபட்ட முறையில் தயாரிக்கும் படம் ஷார்ட் பிலிம் என்றும் ஓரளவுக்கு ஃபார்முலா போக்கு இருந்தாலும் கலை நுணுக்கத்துடன் உருவாகும், படங்களை ஆப் பீட் (ஞச்ச் க்ஷங்ஹற்) படங்கள் என்றும் சொல்லலாம். இதற்கு உதாரணம் "ராஜ பார்வை' படத்தை சொல்லலாம்'' என்று ரசி கர்களின் ரசனையில் ஏற்ற இறக் கங்களை சுகாசினி சொன்னார்.

"முதலில் இதற்கு ரசிகர் களைக் குறைசொல்ல முடி யாது. நல்ல ரசிகர்கள், ரசனைமிக்க ரசிகர்கள் உருவாக்கப் படவேண்டும். அது போன்ற படங்களின் தரத்தை உணரும்படி செய்ய திரைப்பட உலகம், பத்திரிகைகள், பிலிம் சொசைட்டி போன்ற அமைப்புகள் ஈடு பட வேண்டும். இத் தகைய முயற்சி களுக்கு ரசிகர் களிடம் தற்சம யம் நல்ல வர வேற்பு கிடைத்து வருவதுபோல தெரிகிறது. நல்ல படங்களை கொடுத்து, நல்ல ரசிகர்களை நாம்தான் உருவாக்க வேண்டும்.  இப்போது வந்திருக்கும் இளம் இயக்குனர்கள் புது நம்பிக்கை தருகிறார்கள். அவர்கள் கதைகளிலும், படப்பிடிப்பு முறைகளிலும், பல எக்ஸ்பெரிமெண்ட்ஸ் செய்துகொண்டு, அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்கள்.

ஹீரோ என்றாலே அழகனாக, நல்ல நிறம் கொண்டவனாக இருக்கவேண்டும் என்கிற ஃபார்முலா உடைத்திருக்கிறார்கள். கதாநாயகன் என்றால் கிளாமர்தான் அவனுக்கு முக்கியம் என்ற நிலையை இன்றைய இளம் இயக்குனர்கள் மாற்றிவருகிறார்கள். இது நல்ல மாற்றம்தான். ரஜினிகாந்த், முரளி, விஜயகாந்த், பிரதாப் போத்தன், சந்திரசேகர் போன்றோரிடம் கிளாமர் இல்லை என்றால்கூட, தங்கள் நடிப்புத் திறமையால் பிரபலமாகியிருக்கிறார்கள். 

கே.பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாக்கியராஜ் போன்ற டைரக்டர் கள் மாறுபட்ட  புதுமையான படங்களை உருவாக்கி, அது போன்ற படங்களுக்கு ரசிகர் களைப் பழக்கப்படுத்தி வருகிறார் கள். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இதனால் திரையுலகில் ஆரோக் கியமான வளர்ச்சிக்கான  மாற்றங் கள் வரலாம் என்று நம்பிக்கை வைப்பதில் தவறில்லையே'' என்று நான் சொன்னதும். கைத்தட்டி என்னை அரவணைத்து விடை பெற்றார்கள் சுஹாசினி, சுமலதா.

அடுத்தும் பத்திரிகை துறை சார்ந்த விஷயம்தான். அன்றைய பத்திரிகையாளர்கள் ஸ்டூடியோக்களுக்கு, படப்பிடிப்பு தளத்திற்கு வருகைதந்து சுற்றிப்பார்த்து நட்சத்திரங்களிடம்  பேசி எழுதுவார்கள். "பொம்மை' இதழில்.  "திரைக்குப் பின்' என்று ஒரு பகுதி. ஏ.சுவாமிநாதன் எழுதி வருவார். அவர் ஒரு தடவை "இளமையின் ரகசியம்' என்ற குறிப்பில் என்னைப் பற்றி எழுதியிருந்தார்;  "இறைவன் திருவருளால் இடையிலே நடைபெற்ற சோதனைகளை  கடந்து. தைரியத்தை இழக்காம-ருக்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை.'' 

அண்மையில் அவரைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். எப்போதும் போல கலகல வெனும் சிரிப்புடன் அதே பழைய நிதானத்துடன் காணப்பட்டார் சௌகார் ஜானகி.  லண்டனில் பெரிய வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த அவரது  மருமகன் திடீரென்று இயற்கை எய்திவிட்டார். மகள், குழந்தையுடன் தாயிடம் திரும்பிவிட்டார். மகளுக்காக தன்னு டைய தியாகராய நகர் வீட்டை ஒதுக்கிவிட்டா ராம். ஓராண்டு முடிந்திருக்கும். தன் ஒரே மகனுக்கு விமரிசையாக திருமணம் செய்ய விரும்பியிருந்தார் சௌகார். ஆனால் மகனோ அமெரிக்காவில் இருந்தபடியே ஒரு குஜராத்திப் பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டுவிட்டாராம். ஒரே பையன்... லவ் மேரேஜ் செய்துகொண்டு ஹாப்பியாக இருக்கிறான். இதைவிட வேறென்ன வேண்டும்.

நாற்பதை (அப்போது) கடந்துவிட்ட போதிலும், சௌகார் ஜானகி இன்னும் வெகு இளமையோடு இருக்கும் ரகசியம் என்ன?வென்று  கேட்டேன்; "நான் வீட்டில் சும்மா உட்கார மாட்டேன். ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பேன். வீட்டின் உள் அலங்காரத்தை செய்து கொண்டி ருப்பேன். இல்லாவிட்டால் வீட்டு தோட்டத்தை சுற்றிச் சுற்றி வந்து அழகுபடுத்துவேன். பூந்தொட்டி களை வரிசைப்படுத்துவேன். நானே அவைகளுக்கு தண்ணீரும்  ஊற்று வேன். நானே சமையல் செய்வேன். நான் அதில் ஒரு எக்ஸ்பர்ட்டும்கூட.  தினசரி மாலையில் பசுமையான காய்கறிகளை பனகல் பார்க் கடைகளில் சென்று வாங்கி வருவேன். எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பதுதான் என் ஆரோக்கியத்தின் ரகசியம் என்று நினைக்கிறேன். திருமதி சவுகார் ஜானகி தற்பெருமைக்காக இப்படிச்சொல்பவர் அல்ல என்பதை அவரது இல்லம் சென்றால் நேரடியாகவே காணலாம்.

வீடு முழுவதும் கலைநயம் மிகுதி. துப்புரவாக பளிச்சென்று இருக்கிறது.  அழகுப் பொருட்கள். அழகிய ஓவியங்கள். அமரும் அழகான இருக்கை கள் அனைத்தும் அவரது கை வண்ணத்தால் மிளிர்கின்றன. பணியாட்களுடன் எஜமானியாக சௌகாரும் பாடுபடுகிறார் என்பது அவரது தனி சிறப்பு'' என்று ஏ.சுவாமிநாதன் எழுதியிருப்பது இப்போதும் படிக்க மகிழ்ச்சி தருகிறது.

நான்  ஒரு ஆங்கில படம் பார்த்தேன் அது எந்த மாதிரி படம்...

(பேசுறேன்...)

படம் உதவி: ஞானம்

nkn070326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe