Advertisment

நான் பட்டு மாமி பேசுறேன்...! சௌகார் ஜானகி லைஃப் ரிலே.. -எழுத்தாக்கம் "கலைமாமணி' சபீதா ஜோசப் (40)

sowcarjanaki

கமல் -சுகாசினி  ஜோடியாக நடித்தால் என்ன தப்பு?


ப்போது சுகாசினி சொன்னார், "நீங்கள் அந்தக் காலத்தைப் பற்றிச் சொல்லும்போது நடிகர்களுக்கும், டைரக்டர்களுக்கும்  இடையிலிருந்த தொடர்பானது குரு -சிஷ்யனுக்கு உள்ளது போல பயபக்தியுடன் இருக்கும்னு சொன்னீங்க. அப்படிப்பட்ட சூழ்நிலை என் போன்றவர்களுக்கு இன்று ஒத்துவராது. சுதந்திரம், நட்பு நிறைந்த சூழ்நிலை இல்லாமல் என்னால் நடிக்க முடியாது. என் கருத்துக்களை ஒளிவு மறைவின்றி அவர்களுடன் பரிமாறிக் கொள்கிறேன். 

Advertisment

சினிமா மீது இருக்கின்ற ஆர்வத்தால்தான் இப்படிக் கூறுகிறேன் என்பது அவர்களுக்கும் தெரியும். அதனால் அவர்களும் எனக்கு தகுந்த கேரக்டர் இருந்தால் வாய்ப்பு கொடுப்பார்கள்.   அப்படிப்பட்ட டைரக்டரிடம் "என்ன கதை? கேரக்டர் என்ன? என்று கேட்காமல் கூட படங்களை ஒப்புக் கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு அவர் கேட்ட கேள்வி.

Advertisment

"நீங்கள் புராணப் படங்களில் கூட நடிச்சிருக்கீங்க, அந்தப் புராண வேடங்கள் இப்படித்தான் இருக்கும் என்று எப்படி உங்களால் யூகித்து நடிக்க முடிந்தது?''

"புராண கதா பாத்திரங்களில் நடிப்பது, குறிப்பாக அந்த ஆடை, ஆபரணங்களை அணிந்து, கதாசிரியர் எழுதிக் கொடுத்த செயற்கை யான வசனம் பேசு வது போன்ற தெல்லாம் கொஞ்சம் சங்கட மாகத்தான் (Inconvenient) இருக்கும். அந்தப் பாத்திரங்கள் இப்படியிருக்கலாம் என்று புராணக் கதைகளில்

கமல் -சுகாசினி  ஜோடியாக நடித்தால் என்ன தப்பு?


ப்போது சுகாசினி சொன்னார், "நீங்கள் அந்தக் காலத்தைப் பற்றிச் சொல்லும்போது நடிகர்களுக்கும், டைரக்டர்களுக்கும்  இடையிலிருந்த தொடர்பானது குரு -சிஷ்யனுக்கு உள்ளது போல பயபக்தியுடன் இருக்கும்னு சொன்னீங்க. அப்படிப்பட்ட சூழ்நிலை என் போன்றவர்களுக்கு இன்று ஒத்துவராது. சுதந்திரம், நட்பு நிறைந்த சூழ்நிலை இல்லாமல் என்னால் நடிக்க முடியாது. என் கருத்துக்களை ஒளிவு மறைவின்றி அவர்களுடன் பரிமாறிக் கொள்கிறேன். 

Advertisment

சினிமா மீது இருக்கின்ற ஆர்வத்தால்தான் இப்படிக் கூறுகிறேன் என்பது அவர்களுக்கும் தெரியும். அதனால் அவர்களும் எனக்கு தகுந்த கேரக்டர் இருந்தால் வாய்ப்பு கொடுப்பார்கள்.   அப்படிப்பட்ட டைரக்டரிடம் "என்ன கதை? கேரக்டர் என்ன? என்று கேட்காமல் கூட படங்களை ஒப்புக் கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு அவர் கேட்ட கேள்வி.

Advertisment

"நீங்கள் புராணப் படங்களில் கூட நடிச்சிருக்கீங்க, அந்தப் புராண வேடங்கள் இப்படித்தான் இருக்கும் என்று எப்படி உங்களால் யூகித்து நடிக்க முடிந்தது?''

"புராண கதா பாத்திரங்களில் நடிப்பது, குறிப்பாக அந்த ஆடை, ஆபரணங்களை அணிந்து, கதாசிரியர் எழுதிக் கொடுத்த செயற்கை யான வசனம் பேசு வது போன்ற தெல்லாம் கொஞ்சம் சங்கட மாகத்தான் (Inconvenient) இருக்கும். அந்தப் பாத்திரங்கள் இப்படியிருக்கலாம் என்று புராணக் கதைகளில் வரும் குறிப்புகளை வைத்துதான் தெரிந்துகொள்வேன். அதுபோன்ற வேடங்களில் நடிப்பதில் நானும் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை'' என்றதும், சுகாசினி புன்னகையுடன் என்னைப் பார்த்தார்.

திரைப்படங்களில் இடம்பெறும் கவர்ச்சியை பற்றி பேச்சு திரும்பியது, நான் சொன்னேன்,

 "நமது திரைப்படங்களில் கவர்ச்சி என்கிற எல்லை தாண்டி, செக்ஸ் அப்பீலுக்குத்தான் இப்போது முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. ஜெமினி நிறுவனத்தார் ஒரு சமயம் ள்ங்ஷ் ஹல்ல்ங்ஹப்  முக்கியத்துவம் இருந்த ஒரு பாத்திரத்தில் என்னை நடிக்கச் சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன். செக்ஸ் அப்பீல் அளவோடு இருந்தால் பரவாயில்லை. கூடவே நடிகைகளும் தங்கள் இமேஜை பற்றி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், ரசிகர்கள் மத்தியில்  அவர்களைப் பற்றி ஒரு இமேஜ் உருவான பிறகு, அந்த இமேஜ் அடிபடும்படியான வேடங்களை அவர்கள் ஏற்கக்கூடாது என்பது என் கருத்து. அதற்காக மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்கக்கூடாது என்பதல்ல. "புதிய பறவை' படத்தில் நான் ஏற்று நடித்த கேரக்டர் கொஞ்சம் "வில்லி டைப்' தான். அந்தப் படத்தையும், அந்த கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் நன்றாக ரசித்தார்களே தவிர விமர்சிக்க வில்லை. அதுபோல நமக்கான வேடங்களை மிகக்கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்'' என்று நான் சொல்லிக்கொண்டி ருக்கும்போது சுமலதா குறுக்கிட்டு, தன் கருத்தை முன்வைத்தார்.

"சாதாரணமாக முதலில் எந்த வேடம் ஏற்று நடிக்கிறோமோ, அதே வேடத்தையே நமக்கு டைரக்டர்கள் தொடர்ந்து தர  ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுதான் கொஞ்சம் வேதனையான விஷயம். இன்றிருக்கும் சூழ்நிலையில் தொடர்ந்து படங்களில் நடிக்கணும் என்றால் செக்ஸ் அப்பீல் வேடங்களைத் தவிர்க்கமுடிவதில்லை. ஆனால் ஆபாசமான காட்சிகளில் நடிப்பதற்கு நான் ஒப்புக்கொள்வதில்லை.

மலையாளப் படம் ஒன்றில் பிரேம்நசீருடன் நடித்துக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தின் டைரக்டர் நான் நடிக்கவேண்டிய காட்சியை விவரித்தபோது செயற்கையாகவும், ஆபாசமாகவும் இருந்தது.  நான் எவ்வளவோ வாதாடிப் பார்த்தும் அந்த டைரக்டர் விடாப்பிடியாக "அந்தக் காட்சியில் அவர் சொன்னபடி நடித்துத்தான் ஆகணும்' என்றார். நான் மறுத்துவிட்டேன். எனது இக்கட்டான நிலையைப் பார்த்த பிரேம்நசீர், அந்தக் காட்சியை மாற்றியமைக்கச் சொன்னார். 

அப்போது ஹீரோ சொன்னதற்காக காட்சியை மாற்றிய அந்த டைரக்டர், பிறகு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "நான் சரியாக ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கவில்லை' என்று என் மீது குற்றம் சொல்லியிருந்தார்'' என்றார் சுமலதா.

அப்போது சுகாசினி இதுபற்றி இன்னும் வெளிப்படையாகவே கூறினார். "சினிமா மீடியா பற்றி நன்றாக புரிந்துகொள்ளாமலேயே சிலர் இன்று இயக்குநர்களாகவும், தொழில்நுட்ப கலைஞர்களாகவும் வந்துவிடுகிறார்கள். சினிமாவைப் பற்றி விவரம் அறிந்த ஒரு சில நடிகர் -நடிகைகள், அவர்களுடன் அதைப்பற்றி பேசினால், அதை அவர்கள் அவமானமாக நினைக்கிறார்களே தவிர, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டு ஒரு நல்ல "டீம் ஒர்க்' குடன்  பணியாற்றினால் படத்தின் தரம் உயருமே என்று அவர்கள் நினைப்பதில்லை. இந்தச் சூழ்நிலை என்போன்ற நடிகைகளுக்கு உற்சாகமளிப்ப தாக இல்லை'' என்று வருத்தத்துடன் சொன்னார் சுகாசினி.

"சரி இதற்கு முடிவுதான் என்ன, இந்தப் போக்கு மாறுவது எப்படி?'' என்று நான் கேட்டேன்.

"இந்த விஷயத்தில் எஜுகேட்டிவ்வாக சிலவற்றை ஏற்பாடு செய்வதுதான் நல்லது'' என்றார் சுமலதா.

"என்னைப் பொறுத்தவரை திரைப்படத்துறையில் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர், நடிகை களுக்கும் அவ்வப் போது தங்ச்ழ்ங்ள்ட்ங்ழ் ஸ்ரீர்ன்ழ்ள்ங் போன்றவை இருப்பது தேவை என்று நினைக்கிறேன்'' என்றார் சுகாசினி. 

சினிமா பத்திரிகைகளும் சினிமாவின் தரத்தை வளர்ப்பது பற்றி சீரியஸாக சிந்திப்பதில்லை என்றே தோன்றுகிறது. நாட்டிலுள்ள பல துறைகளில் துவங்கியுள்ள வீழ்ச்சியை போலவே இன்றைய சினிமாப் பத்திரிகைகளிலும் அதேபோக்கு தென்படுகிறது.

சினிமா பீல்டில் உள்ளவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இல்லாதது பொல்லாததை எழுதுவது, தனது சொந்த நலனுக்காக அவர்களை வெகுவாக பாராட்டுவது அல்லது தாக்குவது போன்றவைகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்களே தவிர திரைப் படங்களைப் பற்றி, நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் தரத்தைப் பற்றி நல்ல விமர்சனங்கள் எழுதுவது, ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்குவது, மக்களிடையே நல்ல ரசனை வளர்ப்பதற்குப் பாடுபடுவது போன்ற நல்ல காரியங்களை சினிமா பத்திரிகைகள் அதிகமாக செய்வது இல்லை. இது மிகவும் வருத்தப்படவேண்டிய நிலை என்று எனக்குத் தோன்றுகிறது. 

என் கருத்தை சுஹாசினி, சுமலதா இருவரும் ஏற்றுக்கொண்டார்கள்? அடுத்து எங்கள் பேச்சு நட்சத்திரங்களைப் பற்றி திரும்பியது.''

"நான் அதிகமாக விரும்பிய நட்சத்திரங்கள். 

மார்லின் மன்றோ, சோபியா லாரன்ஸ், இங்க்ரிட் பெர்க்மேன், விவின்லி போன்றவர்களுடைய படங்கள். இவர்களது வாழ்க்கை அனுபவங்கள் என்னை மிகவும் கவர்ந்தன என்றே கூறுவேன்'' என்று நான் குறிப்பிட்டதும்...

"நீங்கள் நடிப்பு விஷயத்தில் யாரையாவது பின்பற்றியது உண்டா?'' என்று சுகாசினி என்னிடம் கேட்டார்.

"எனக்கு இமிட்டெட் செய்து நடிப்பது என்பதில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கின்றவர்கள், அவர்களது, பழகும் முறைகள், நடவடிக்கைகள் இவற்றைக் கவனித்தால், சில சமயங்களில் சில வேடங்களை ஏற்று நடிக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது அது ஓரளவுக்கு உதவியாகவும், இன்ஸ்பிரேஷன் ஆகவும் இருக்கும். உதாரணமாக தமிழில் "தில்லுமுல்லு' படத்தில் நான் ஏற்றுக்கொண்ட வேடம் அதேபோன்ற ஒரு நபரை மனதில் வைத்துக் கொண்டு நடித்தேன் பாராட்டு பெற்றேன்'' என்றேன்.

சுகாசினி மற்றொரு கேள்வி கேட்டார்.

(பேசுறேன்...)

படம் உதவி: ஞானம்

nkn040326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe